உள்ளடக்கத்துக்குச் செல்

தமீமுன் அன்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு.தமிமுன் அன்சாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதோப்புத்துறை, நாகப்பட்டினம்
அரசியல் கட்சிமனிதநேய ஜனநாயகக் கட்சி

மு.தமிமுன் அன்சாரி ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையில் பிறந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து விலகி கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று , தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற புதிய கட்சியை, துவங்கி நடத்தி வருகிறார்.[1]

பிப்ரவரி 2023 அன்று திண்டுக்கலில் வைத்து நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார், அதனை தொடர்ந்து சென்னையில் பிப்ரவரி 01, 2024 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

பொது வாழ்க்கை

[தொகு]

மக்கள்உரிமை வாரஇதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கில மொழி தெரிந்தவர்.[3].மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், கத்தர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்று பல பொதுக் கூட்டங்களில் பங்கு கொண்டவர்.

ஆதாரம்

[தொகு]
  1. "மனிதநேய ஜனநாயகக் கட்சி தமிமுன் அன்சாரி துவக்கம்". பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-01-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-02.
  3. http://www.dinamani.com/tamilnadu/article800096.ece?service=print
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமீமுன்_அன்சாரி&oldid=3943817" இலிருந்து மீள்விக்கப்பட்டது