சுபுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபுண்டு
நிறுவனம்/
விருத்தியாளர்
கனோனிக்கல் நிறுவனம்
இயங்குதளக் குடும்பம் யுனிக்சு போன்றவை
மூலநிரல் வடிவம் கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்கள்
முதல் வெளியீடு 23 சூன் 2006
பிந்தைய நிலையான பதிப்பு 13.10 (Saucy Salamander) / 17 அக்டோபர் 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-10-17)
கேர்னர்ல் வகை ஒற்றைப்பாளக் கருனி (லினக்சு கருனி)
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் Xfce
அனுமதி குனூ பொதுமக்கள் உரிமம் / பிறவும்
தற்போதைய நிலை உயிர்ப்பு
இணையத்தளம் சுபுண்டுவின் இணையப்பக்கம்

சுபுண்டு (ஆங்கிலம்:Xubuntu) (/zˈbnt/ zoo-BOON-too) என்ற இயக்குதளம், சுதந்திர, திறநிலை மென்பொருள் இயக்குதளங்களில் ஒன்றாகும். இது உபுண்டு என்ற இயக்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது எக்செப்சியி (XFCE) என்ற திரைப்புலச் சூழலை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த இயக்கு தளம், குறைவான திறன் கொண்ட கணினிகளையும், குறைவான மின்னாற்றலை எடுத்துக்கொண்டு, திறம்பட, வேகமாக இயக்கும் ஆற்றல் உடையது ஆகும்.

திரைப்புலம்[தொகு]

இருப்பினும், இயல்பிருப்பு நிலையில் சுபுண்டு[Xubuntu] திரைப்புல அமைவாகவே(session) இருக்கும். முழு 'எக்செப்சியி' திரைப்புல அமைவு வேண்டுமெனில், இருக்கும் திரைச்சூழலை விட்டு வெளியேறி(logout), படத்தில் காட்டியபடி, தெரிவுப்பட்டியலில் தேர்ந்தெடுத்து, மீண்டும் உட்புகுந்தால், முழுமையான 'எக்செப்சியி' திரைப்புலச் சூழலுக்கு வந்து கணினியை பயன்படுத்தலாம். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாதெனில், இயல்பான சுபுண்டு கணித்திரைப்புலச் சூழலில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்கள் அனைத்தும் பட்டியலில் இணைக்கப் பட்டிருக்காது. 'எக்செப்சியி' சூழலில், நமக்குப் பயனாகும் அனைத்து மென்பொருள்களும் பட்டியலாகப் பார்க்கலாம். மேலும், ஒப்பிட்டளவில் 'எக்செப்சியி' சூழல், குறைந்த அளவு மின்சாரத்தையே, தனது இயக்கத்திற்கு எடுத்துக் கொள்கிறது. அதனால், மடிக்கணினிகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.

இதிலுள்ள நிறுவப்பட்டுள்ள செயலிகளின், இயக்க ஆழிகளை (GUI_buttons) உருவாக்குதல் எளிது. அங்ஙனம் உருவாக்கப்பட்ட ஆழிகளை, திரைப்புலத்தில் வேண்டிய இடத்தில், ஒரு இயக்கப் பட்டையில் (panel of launchers)அமைத்தலும் எளிதான செயலாகும். அவ்வாறு ஒரு பயனர், தான் அடிக்கடிப் பயன்படுத்தும் ஆழிகளை, தனக்கேற்ற இடத்தில், ஏற்ற அளவில், அமைத்துள்ள திரைப்புலத்தைப் படத்தில் காணலாம்.

திரைப்புல ஊடகங்கள்[தொகு]

சுபுண்டு வெளியீடுகள்[தொகு]

முதற்பதிப்பு2006 ஆம் ஆண்டு வெளியானது.[1] உபுண்டு வெளியீடுகளில் பின்பற்றப்படும் அதே பெயரிடல் முறைமை பின்பற்றப்படுகிறது.[2] பிறகு ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தின் 4வது,10வது மாதங்களில், இது வழமையாக வெளியாகிறது.

நிறம் பொருள்
சிவப்பு ஆதரவு நிறுத்தப்பட்டு வெளியீடு
மஞ்சள் ஆதரவுள்ள வெளியீடுகள்
பச்சை தற்போதைய பதிப்பு
நீலம் எதிர்கால வெளியீடு
பதிப்பு பதிப்பின் பெயர் வெளியீட்டுத் தேதி ஆதரவு காலம் குறிப்புகள்
5.10 Breezy Badger 13 அக்டோபர் 2005 13 ஏப்ரல் 2007 சுபுண்டு-மேசைக்கணினி பொதி மட்டும் கிடைக்கப்பெற்றது.
6.06 | (LTS) Dapper Drake 1 சூன் 2006 சூன் 2009 முதல் சுபுண்டு நிறுவன வெளியீடு
( நீண்ட கால ஆதரவு(LTS))
6.10 Edgy Eft 26 அக்டோபர் 2006 25 ஏப்ரல் 2008
7.04 Feisty Fawn 19 ஏப்ரல் 2007 19 அக்டோபர் 2008
7.10 Gutsy Gibbon 18 அக்டோபர் 2007 18 ஏப்ரல் 2009
8.04 Hardy Heron 24 ஏப்ரல் 2008 ஏப்ரல் 2011 நீண்ட கால ஆதரவு (LTS)
8.10 Intrepid Ibex 30 அக்டோபர் 2008 ஏப்ரல் 2010
9.04 Jaunty Jackalope 23 ஏப்ரல் 2009 அக்டோபர் 2010 PowerPC உரிய இயக்குதளமும் கிடைக்கிறது [3][4]
9.10 Karmic Koala 29 அக்டோபர் 2009 ஏப்ரல் 2011
10.04 (LTS) Lucid Lynx 29 ஏப்ரல் 2010 ஏப்ரல் 2013 நீண்ட கால ஆதரவு(LTS)
10.10 Maverick Meerkat 10 அக்டோபர் 2010 ஏப்ரல் 2012
11.04 Natty Narwhal 28 ஏப்ரல் 2011 அக்டோபர் 2012
11.10 Oneiric Ocelot 13 அக்டோபர் 2011 ஏப்ரல் 2013
12.04 (LTS) Precise Pangolin 26 ஏப்ரல் 2012 ஏப்ரல் 2015 நீண்ட கால ஆதரவு(LTS)
12.10 Quantal Quetzal 18 அக்டோபர் 2012 ஏப்ரல் 2014
13.04 Raring Ringtail 25 ஏப்ரல் 2013 திசம்பர் 2013
13.10 Saucy Salamander 17 அக்டோபர் 2013 சூன் 2014
14.04 (LTS) Trusty Tahr 17 ஏப்ரல் 2014 TBA நீண்ட கால ஆதரவு(LTS)

வெளியீட்டு ஊடகங்கள்[தொகு]

இயல்பிருப்பான செயலிகள்[தொகு]

ஒரு சராசரி பயனாளருக்குப் பயன்படும் வகையில், பின்வரும் செயலிகள் இயல்பிருப்பாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன.[5][6]

ஜீபார்ட்டெடு வகிர்வுத் தொகுப்பான்[தொகு]

GParted Icon
GParted Icon

ஜீபார்ட்டெடு வகிர்வுத் தொகுப்பான்(Gparted partition editor) : இது நிகழ்நிலை இயக்குதளமாகச் செயற்படும் போது மட்டும் இயல்பிருப்பாக இருக்கிறது. கணினியின் இயக்குதளத்தை நிறுவிய பிறகு, இத்தொகுப்பானை, உபுண்டு மென்பொருள் நடுவத்தில் இருந்தே நிறுவ வேண்டியுள்ளது. இச்செயலியைக் கொண்டு, நிறுவப்பட்ட கணினியின், முதன்மை நினைவகமான நிலைவட்டைப் பாதுகாப்பான முறையில் வகிர்ந்து(தேவைக்கேற்ப பிரித்தல்) கொள்ளலாம். பிற வகிர்வு தொகுப்பான்களை(எ.கா. fdisk) விட இது மிகவும் எளியதும், பாதுகாப்பானதாகும்.

சுபுண்டு வழி இயக்குதளங்கள்[தொகு]

சுபுண்டு இயக்குதளத்தை அடைப்படையாகக் கொண்டு, கனோனிக்கல் நிறுவனம் அல்லாத, வெளி உருவாக்குநர்கள், சற்று வேறுபட்ட இயக்குதளங்களை உருவாக்கியுள்ளனர். அவற்றுள் குறிப்பிடதக்கன வருமாறு;-

  • எலிமென்ட்டு ஓஎஸ்(Element OS)
  • எம்மாபன்டசு(Emmabuntüs)
  • ஓஇசட்ஓஎஸ்(OzOS)
  • ஓஎஸ்4(OS4 (முற்பெயர் PC/OS))[7]
  • யூசர்ஓஎஸ்அலட்ரா (UserOS Ultra)[8]
  • ஓயஜெர் (Voyager)[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. சட்டில்ஒர்து, மார்கு (20 October 2004). "Ubuntu 4.10 announcement" (Mailing list). பார்க்கப்பட்ட நாள் 19 August 2008. {{cite mailing list}}: Unknown parameter |mailinglist= ignored (help)
  2. "DevelopmentCodeNames - Ubuntu Wiki". Wiki.ubuntu.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2008.
  3. "Xubuntu 9.04 வெளியீட்டுக் குறிப்பு - Other Section on Ports". Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.
  4. "Get Xubuntu 9.04". Archived from the original on 2010-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-04-06.
  5. டெசுட்டோரவாட்ச்சு(DistroWatch) (October 2008). "Xubuntu". பார்க்கப்பட்ட நாள் 10 February 2009.
  6. கனோனிக்கல் நிறுவனம் (2008). "Glossary". Archived from the original on 27 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 February 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. PC/OS (February 2009). "Welcome to PC/OS". பார்க்கப்பட்ட நாள் 10 February 2009.
  8. PC User (March 2008). "March 2008 : Notebook Mega Test". பார்க்கப்பட்ட நாள் 10 February 2009. {{cite web}}: |last= has generic name (help)
  9. "Voyager". Voyager.legtux.org. 2010-08-24. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Xubuntu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபுண்டு&oldid=3930071" இலிருந்து மீள்விக்கப்பட்டது