உள்ளடக்கத்துக்குச் செல்

உபுண்டு மென்பொருள் நடுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபுண்டு மென்பொருள் நடுவம்
வடிவமைப்புகனோனிக்கல் நிறுவனம் / Ubuntu Foundation
உருவாக்குனர்கனோனிக்கல் நிறுவனம்
தொடக்க வெளியீடுஅக்டோபர் 29, 2009; 15 ஆண்டுகள் முன்னர் (2009-10-29)
அண்மை வெளியீடு13.10 / அக்டோபர் 7, 2013; 11 ஆண்டுகள் முன்னர் (2013-10-07)
மொழிபைத்தான்
தளம்Ubuntu Desktop Edition 9.10 and later
Ubuntu Touch 1.0 and higher
உருவாக்க நிலைDevelopment ended / 45,000 Apps[1]
மென்பொருள் வகைமைDigital distribution(Apps, Books)
Package manager
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம், LGPL
இணையத்தளம்apps.ubuntu.com/cat/
launchpad.net/software-center

உபுண்டு மென்பொருள் நடுவம் (Ubuntu software center) என்பது உபுண்டு வகை இயக்குதளங்களில் நிறுவி, பயன்படுத்தும் மென்பொருள் பொதிகளை, தன்னகத்தேக் கோர்த்து வைக்கும் சேமிப்பகம் ஆகும். இணையத்தின் வழியே இதிலிருந்து தேவையான மென்பொருட்களை நாம் பதிவிறக்கி நிறுவிக்கொள்ள இயலும். பொதுவாக லினக்சு வகைக்கணினிகளுக்கென, ஒவ்வொரு இயக்குதளங்களும், ஒவ்வொரு வெளியீட்டின் போதும், தனித்துவ அடிப்படையானத் தேவைகளோடு மென்பொருட்களை வெளியிடுகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கணினியில் நிறுவிய பிறகு, நமக்குத் தேவையான மென்பொருட்களை[2] அதன் பொதிய மேலகத்தில் இருந்து நிறுவிக் கொள்ளலாம். அதனதன் பொதிய மேலக மென்பொருட்களை நிறுவிக் கொள்வதால், கணினியில் இயக்கக் கோளாறுகள் பெரும்பாலும் வருவதில்லை.

பொதிய மேலகம் பற்றிய அறிமுகம்

இதில் தேவைப்படும் மென்பொருட்களை, படத்தில் காட்டியபடி படவிவரங்களில்(GUI) தேர்ந்தெடுத்து, அங்குள்ள நிறுவு என்ற பொத்தானை அழுத்தினால், அது தானாகவே நிறுவப்பட்டு விடும். எனினும், முனையத்தில் வழியே நிறுவுவது சிறப்பான ஒன்றாகவும், புதிய பதிப்பும் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. முனையத்தின் வழியே நிறுவ, முதலில் sudo apt-get update என இட வேண்டும். அதன்பிறகே,,இட வேண்டிய கட்டளைத் தொடர் யாதெனில், sudo apt-get install 'மென்பொருளின்பெயர்', அதே மென்பொருளை மென்பொருள் கட்டகத்தில் இருந்து நீக்க, sudo apt-get remove 'மென்பொருளின்பெயர்' இட வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Canonical & Ubuntu Fast facts" (PDF). கனோனிக்கல் நிறுவனம். Archived from the original (PDF) on 20 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "How to keep specific versions of packages installed (complex)". debian.org. பார்க்கப்பட்ட நாள் 2018-01-28.