உள்ளடக்கத்துக்குச் செல்

திரைப்புலச் சூழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்புலச் சூழல் அமைந்த, உலகின் முதல் எந்திரம்

திரைப்புலச் சூழல் (ஆங்கிலம்:desktop environment (DE)) என்பது கணினியியலில் கணியத்திரையின் உருவகத்தை செயற்படுத்தும் முறையைக் குறிப்பதாகும். இம்முறைமையானது, குறிப்பிட்ட வகை நிரல் பொதியால், கணினியின் இயக்குதளத்தின் மேலே, ஒரு நிரல் கட்டகமாக அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைந்த நிரல்பொதியானது, பொதுவான வரைகலை பயனர் இடைமுகத்தை(GUI) பகிர்ந்து கொண்டு செயற்படுகிறது. இத்தகைய திரைப்புலச் சூழல், நகர்வுக் கணிமையின் வளர்ச்சிக்கு முன், தனியாள் கணினிகளுக்கு இடையே அதிகம் காணப்பட்டது. [1][2]

திரைப்புலச் சூழல் என்ற பதமானது, பயனர் ஒருவர் பின்பற்ற விரும்பும் தெரிவு நடையைக் குறிக்கிறது. ஒரு பயனர், திரைப்புல உருவகத்தை, தான் தேர்ந்தெடுத்த திரைப்புலச் சூழலுக்குரிய பயனர் இடைமுகத்தின் வழியே செயற்படுத்துகிறார். இத்தகைய பயன்பாட்டினை, பொது திரைப்புலச் சூழல் என்ற திரைப்புலச் சூழலும், கே டீ ஈ என்ற திரைப்புலச் சூழலும் பலரிடம் கொண்டு சென்று, பழக்கப்படுத்தின.[3] ஒரு திரைப்புலச் சூழலானது தன்னகத்தே, தனித்துவமான கணித்திரைப் படம், சாளரம், கருவிப்பட்டை, அடைவு, கோப்புறை, மென்பொருள் தந்துகை (Software widget), விம்பு (WIMP) [4] போன்றவைகளைக் கொண்டு திகழ்கிறது.

உலகின் முதல் திரைப்புலச் சூழலை, தனது 'செராக்சு அல்டோ '(Xerox Alto)எந்திரத்திற்காக, முதன்முதலில் செராக்சு நிறுவனம், 1970களில் உருவாக்கியது.[5][6]

பயன்பாடு

[தொகு]

இயக்குதளமானது கணினியின் மின்னணுப்பொருட்களைக் கட்டுபடுத்துகிறது. திரைப்புலச் சூழலானது, இயக்குதளத்தின் மேலே அமைந்து, செயலிகளை(நிரல் பொதி)ச் செயற்படுத்துகிறது. இயக்குதளத்திற்கும், செயலிகளுக்கும் இடையே அமைந்த திரைப்புலச் சூழலானது, பயனர் ஒருவரி்ன் விருப்பத்திற்கு இணங்க, தனித்துவமான பயனர் இடைமுகத்துடன், பயனரின் கட்டளையை நிறைவேற்றுகிறது. முதலில் தோற்றத்தை முன்மொழிந்தாலும், உண்மையில் கட்டளையை நிறைவேற்றும் வேகம், கணினியின் வன்பொருட்களைத் திறம்பட செயற்பட வைத்தல், மின்னாற்றல் போன்ற முக்கியக்கூறுகளை மேலாண்மை செய்கிறது. இது பல்வேறு மின்னணுக் கருவிகளுக்கிடையே வேறுபட்டு இருக்கின்றன. எக்செப்சியி என்ற திரைப்புலச் சூழல் கணினிகளின் திரைப்புலச் சூழல்களிடையே திறம்படச் செயற்படுவதாக நீருபிக்கப் பட்டுள்ளது. அதுபோல, நகர்வுப்பேசிகளுக்கிடையே, எல்லெக்சிடியி என்ற திரைப்புலச் சூழல் திறம்பட இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Desktop Metaphor". Csdl.tamu.edu. Archived from the original on 2001-02-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-10.
  2. Morris, John (2013-06-25). "Android invades the desktop". ZDNet. பார்க்கப்பட்ட நாள் 2014-06-10.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-21. பார்க்கப்பட்ட நாள் 2014-06-10.
  4. WIMP Interfaces
  5. Koved, Larry, and Ted Selker. Room with a view (RWAV): A metaphor for interactive computing. IBM TJ Watson Research Center, 1999.
  6. Thacker, Charles P., et al. Alto: A personal computer. Xerox, Palo Alto Research Center, 1979.

    The main goals in the design of the Alto's user input/output were generality of the facilities and simplicity of the hardware. We also attached a high value to modeling the capabilities of existing manual media; after all, these have evolved over many hundreds of years. There are good reasons for most of their characteristics, and much has been learned about how to use them effectively. The manual media we chose as models were paper and ink (the display), pointing devices (the mouse and cursor), and keyboard devices ranging from typewriters to pianos and organs.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்புலச்_சூழல்&oldid=3710907" இலிருந்து மீள்விக்கப்பட்டது