நகர்வுக் கணிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெல்சான் பிடிசி-710 என்பது எம்பி 830-42 மைக்ரோபிரிண்டர் 42 நெடுவரிசை பதிப்புடனான 16 பிட் பிடிசி-710 மொபைல் கம்ப்யூட்டர் ஆகும். இது 1990களின் ஆரம்பவாக்கில் இருந்து டெல்சான் கார்பரேஷன் மூலம் தயாரிக்கப்பட்டது. உதாரணத்திற்கு இது செக் ரயில்வேயால் (České dráhy) 1990களில் போர்டபிள் டிக்கெட் எந்திரமாக பயன்படுத்தப்பட்டது.

நகர்வுக் கணிமை என்பது, ஒரு நிலையான இடத்தில் நிறுவப்படுகையில் மட்டும் தான் நடைமுறைப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடிகிற கணினிகளுக்கு மாறாக, நகர்வில் இருக்கும் சமயத்திலேயே ஒருவர் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயல்வதற்கு பயன்படுத்தப்படுகிற ஒரு பொதுவான பதமாகும்.

1990கள் முதல் நகர்வுக் கணினிகளில் பல வகைகள் அறிமுகமாகி இருக்கின்றன, அவற்றில் பின்வருவன அடக்கம்:

 • அணியக்கூடிய கணினி
 • எண்மிய தனிநபர் உதவியாளர் (PDA)
 • திறன்பேசி
 • தானுந்து கணினி
 • மிகை நகர்வுத் தனிநபர் கணினி (UMPC)

நகர்வுக் கணிமையில் தொழில்நுட்ப மற்றும் பிற குறைபாடுகள்[தொகு]

 • பற்றாக்குறையான கற்றைஅகலம்

நகர்வு இணைய அணுகல் வேகம் பொதுவாக நேரடி கம்பி இணைப்புகள் மூலம் கிடைப்பதைக் காட்டிலும் மெதுவானதாக இருக்கின்றன, ஜிபிஆர்எஸ் மற்றும் EDGE, மற்றும் சமீபத்தில் 3ஜி வலைப்பின்னல்கள் ஆகிய தொழில்நுட்பங்களை இவை பயன்படுத்துகின்றன. இந்த வலைப்பின்னல்கள் பொதுவாக வர்த்தகரீதியான நகர்பேசி கோபுரங்களின் எல்லை வரம்புக்குள் கிடைக்கத்தக்கதாய் இருக்கின்றன. உயர் வேக கம்பியற்ற தொடர்புகள் செலவு குறைந்தவையாக இருக்கின்றன, ஆனால் இவை வெகு குறைவான வரம்பினைக் கொண்டிருக்கின்றன.

 • பாதுகாப்பு நிர்ணயங்கள்

நகர்வில் பணியாற்றும்போது ஒருவர் பொது நெட்வொர்க்குகளைச் சார்ந்திருப்பதால், விபிஎன்களின் கவனமான பயன்பாடு அவசியமாகிறது.

 • மின்சக்தி நுகர்வு

ஒரு மின்சார புள்ளியோ அல்லது போர்டபிள் ஜெனரேட்டரோ இல்லாத சமயத்தில், மொபைல் கம்ப்யூட்டர்கள் முழுக்க பேட்டரி சக்தியை நம்பியே இருக்கின்றன. பல மொபைல் சாதனங்களின் கையடக்க அளவைக் கொண்டு பார்த்தால், இதன் பொருள் என்னவென்றால், அவசியமான பேட்டரி நீடிப்பு காலத்தை பெற அசாதாரண செலவுவைக்கும் பேட்டரிகளை பயன்படுத்தியாக வேண்டியிருக்கிறது.

 • சிக்னல் குறுக்கீடுகள்

காலநிலை, பிராந்தியம் மற்றும் அருகிலிருக்கும் சிக்னல் புள்ளியின் எல்லை வரம்பு இவையனைத்தும் சிக்னல் பெறுவதில் குறுக்கிட முடியும். குகைகள், சில கட்டிடங்கள், மற்றும் கிராமப் பகுதிகளில் பல சமயங்களில் சிக்னல்கள் பரிதாபமான நிலையில் கிடைக்கின்றன.

 • ஆரோக்கியத்திற்கான அபாய சாத்தியங்கள்

அநேக கார் விபத்துகள் ஓட்டுநர்கள் மொபைல் சாதனத்தின் வழியே பேசிக் கொண்டிருக்கும்போது நிகழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. உணர்வுமிகுந்த மருத்துவ சாதனங்களில் செல்போன்கள் குறுக்கிட முடியும். செல்போன் சிக்னல்கள் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. [மேற்கோள் தேவை]

 • சாதனத்துடன் மனித இடைமுகம்

திரைகளும் கீபோர்டுகளும் சிறியதாக இருக்கின்றன என்பதால் அவை பயன்படுத்த கடினமானதாக அமையலாம். பேச்சுவழி அல்லது கையெழுத்து வழியாக அறிந்து கொள்கிற மாற்று உள்ளீட்டு வழிமுறைகளுக்கு பயிற்சி அவசியம்.

 1. ஜிஎச் ஃபோர்மேன், ஜே ஸகோர்ஜான் - கம்ப்யூட்டர், 1994 - doi.ieeecomputersociety.org
 2. டேவிட் பி.ஹெல்ம்போல்டு, "A dynamic disk spin-down technique for mobile computing", citeseer.ist.psu.edu, 1996
 3. எம்எச் ரெபசோலி, "health risks from the use of mobile phones", டாக்ஸிகாலஜி லெட்டர்ஸ், 2001 - எல்ஸிவையர்
 4. லண்டே, ஜே.ஏ.கஃப்மேன், டி.ஆர்., "user interface issues in mobile computing", வொர்க்ஸ்டேஷன் ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ், 1993.
 5. டி இமிலின்ஸ்கி, பிஆர் பத்ரிநாத் "mobile wireless computing, challenges in data management- கம்யூனிகேஷன்ஸ் ஆஃப் தி ஏசிஎம், 1994 - portal.acm.org

மொபைல் கம்ப்யூட்டிங்: இன்-வெகிக்கிள் கம்ப்யூட்டிங் மற்றும் ஃப்ளீட் கம்ப்யூட்டிங்[தொகு]

பல வர்த்தக மற்றும் அரசாங்க களப் படைகள் பானாசோனிக் டஃப்புக் போன்ற கரடுமுரடான பயணத்திற்கேற்ற போர்டபிள் கம்ப்யூட்டரையோ அல்லது பெரிய ரேக்கில் அமர்ந்திருக்கும் கம்ப்யூட்டர்களையோ தங்களது வாகன வரிசைகளில் பயன்படுத்துகின்றன. இதில் ஓட்டுநர் பாதுகாப்பு, சாதன பாதுகாப்பு, மற்றும் பயன்படுத்துபவருக்கான வேலைச்சூழல் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு வாகனத்தில் யூனிட்டுகள் நங்கூரமிடப்படுகின்றன. பெரும் சேவை வாகனங்கள் மற்றும் சாலையிலிருந்து விலகிய ஓட்டல், மற்றும் EMS, நெருப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற தொழில்முறை பயன்பாடுகளின் போதான சுற்றுச் சூழ்நிலை தொடர்புடைய தொடர்ந்த கடுமையான அதிர்வுகள் அடிப்படையில் கரடுமுரடுக்கேற்ற கம்ப்யூட்டர்கள் தரம்பிரிக்கப்படுகின்றன.

வாகனத்தில் யூனிட் இயங்க வழி செய்யும் பிற அம்சங்கள்:

 • செயல்பாட்டு வெப்பநிலை: ஒரு வாகன அறையானது பல சமயங்களில் -20F முதல் +140F வரையிலுமான வெப்பநிலையை உணரக் கூடும். செயல்பாட்டின் போது இந்த வெப்பநிலைகளை தாங்கிக் கொள்ளும் வகையிலானவையாக கம்ப்யூட்டர்கள் இருக்க வேண்டும். வழக்கமான காற்றாடி அடிப்படையிலான குளிரூட்டல் சுற்றுப்புற சூழ்நிலையில் 95F-100F வரம்பினைக் கொண்டுள்ளது, அத்துடன் உறைவுக்கு குறைவான வெப்பநிலைகளில் பாகங்களை செயல்பாட்டு வெப்பநிலைக்கு கொண்டுவர அப்பிராந்தியத்திற்கேற்ற ஹீட்டர்கள் அவசியம் (SRI குழுமம் மற்றும் பானாசோனிக் ஆராய்ச்சி & அபிவிருத்தி துறை மூலமான சுதந்திரமான ஆய்வுகளின் அடிப்படையில்).
 • அதிர்வு: கம்ப்யூட்டர் பாகங்களின் ஆயுளை, குறிப்பாக வன்தட்டுகள் போன்ற சுற்றுகிற சேமிப்பு சாதனங்களின் ஆயுளை, குறைக்கத்தக்க அளவிலான குறிப்பிடத்தக்க அதிர்வுகளை வாகனங்கள் பொதுவாக கொண்டிருக்கின்றன.
 • பகல் வெளிச்சம் அல்லது சூரிய வெளிச்ச வாசிப்பு தன்மை: சாதாரண திரைகளில் பளிச்சென்ற சூரிய ஒளியில் தெளிவாகக் காண்பது என்பது ஒரு பிரச்சினையாக ஆகி விடுகிறது.
 • தொடுதிரைகள்: களத்தில் கையுறைகளைக் கழற்றாமலேயே யூனிட்டுகள் எளிதாக தகவல்பரிவர்த்தனை செய்துகொள்ள பயனர்களுக்கு இது வகைசெய்கிறது.
 • உயர் வெப்பநிலை பேட்டரி அமைப்பு:. லித்தியம் அயன் பேட்டரிகள் சார்ஜிங் சமயத்தில் உயர் வெப்பநிலை சூழ்நிலைகளுக்கு எதிர்வினையாற்றுபவையாய் இருக்கின்றன. மொபைல் சூழலுக்கு வடிவமைக்கப்படும் ஒரு கம்ப்யூட்டரானது சார்ஜிங்கை 85% அல்லது அதற்கும் குறைந்த திறனுக்கு வரம்புபடுத்தும் ஒரு உயர்-வெப்பநிலை சார்ஜிங் செயல்பாட்டுடன் வடிவமைக்கப்பட வேண்டும்.
 • புற வயர்லெஸ் இணைப்புகள், மற்றும் புற ஜிபிஎஸ் ஆன்டனா இணைப்புகள்: வாகனங்களின் பொதுவான உலோக கேபின்கள் மற்றும் அவை ஒயர்லெஸ் சிக்னல்களைப் பெறுவதில் செய்யும் தாக்கம் ஆகியவற்றுடன் போட்டியிடவும், இன்னும் கூடுதல் திறன்வாய்ந்த புற டிரான்செப்சன் சாதனத்தின் பயனை எட்டவும் அவசியமானது.
குறிப்பிட்ட வாகனங்களில் கம்ப்யூட்டர் சாதனத்தை பொருத்துவதற்கான தாங்கிகளை நேஷனல் பிராடக்ட்ஸ் இன்க் (ராம் மவுண்ட்ஸ்), காம்பர் ஜான்சன் மற்றும் லெட்கோ போன்ற சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள். கடும் சூழல்களுக்கும் சுற்றுப்புறத்திற்கும் ஏற்ற வகையில் இந்த தாங்கிகள் நிறுவப்படுகின்றன.

டச்ஸ்டார் பசிபிக் போன்ற சிறப்பு நிபுணத்துவம் பெற்ற நிறுவல் நிறுவனங்கள், அமர்த்துமிட வடிவமைப்பை உருவாக்குவது மற்றும் முறையான பாகங்களை ஒன்றுசேர்ப்பதிலும், மற்றும் அவற்றை ஏர்பேக்குகள், வாகன HVAC கட்டுப்பாட்டு புள்ளிகள், மற்றும் ஓட்டுநர் கட்டுப்பாட்டு புள்ளிகளிலிருந்து தள்ளியிருக்கும் வகையில் பாதுகாப்பான சீரான வகையில் நிறுவுவதிலும் சிறப்பு நிபுணத்துவம் கொண்டுள்ளன. அநேக சமயங்களில் நிறுவல்கள் WWAN மோடம், திறன் சீரமைப்பு சாதனம், மற்றும் WWAN/WLAN/GPS/போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும்... டிரான்சீவர் ஆன்டனாக்கள் வாகனத்திற்கு புறத்தே அமர்த்தப்பட்டுள்ளது.

போர்டபிள் கம்ப்யூட்டிங் சாதனங்கள்[தொகு]

பேட்டரிகளில் இயங்கக் கூடிய ஆனால் பொதுவாக மடிக் கம்ப்யூட்டராக வகைப்படுத்தப்படாத பல வகை போர்டபிள் கம்ப்யூட்டிங் சாதனங்கள் உள்ளன: போர்டபிள் கம்ப்யூட்டர்கள், கீபோர்டற்ற டேப்லெட் பிசிக்கள், இன்டர்னெட் டேப்லெட்டுகள், பிடிஏக்கள், அல்ட்ரா மொபைல் பிசிக்கள் (UMPCக்கள்) மற்றும் ஸ்மார்ட்போன்கள்.

தி காம்பேக் போர்டபிள்
ஒரு உள்ளங்கை TX PDA
ஒரு Nokia N800 இன்டர்னெட் டேப்லெட்

ஒரு போர்ட்டபிள் கம்ப்யூட்டர் என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக நகர்த்தத்தக்க பொதுவான பயன்பாடு கம்ப்யூட்டர் தான், ஆனால் இதனை நகர்வின் போது பயன்படுத்த முடியாது, பொதுவாக அதற்கு காரணமாக இருப்பது இதற்கு சில 'அமைவு' மற்றும் ஒரு AC மின்சார ஆதாரம் அவசியமாக இருப்பது தான். மிகப் பிரபலமான உதாரணம் ஆஸ்பார்ன் 1. போர்டபிள் கம்ப்யூட்டர்கள் "போக்குவரத்து செய்யத்தக்க" அல்லது "லக்கேஜாக்கத்தக்க" கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு கீபோர்டு இல்லாதிருக்கும் டேப்லெட் கம்ப்யூட்டரானது (இது ஒரு நான்-கன்வர்டிபிள் டேப்லெட் பிசி என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு ஸ்லேட் அல்லது பேப்பர் நோட்புக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, ஸ்டைலஸ் மற்றும் கையெழுத்தை உணர்ந்து கொள்ளத்தக்க மென்பொருளுடனான ஒரு தொடுதிரையைக் கொண்டுள்ளது. தட்டச்சு செய்வதற்கு ஒரு தனி கீபோர்டு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு டேப்லெட்டுகள் மிக உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மற்றபடி இவை ஒரு சாதாரண மடிக் கம்ப்யூட்டர் செய்யக் கூடிய அநேக வேலைகளை செய்யும் திறன் பெற்றதாகும்.

ஒரு இன்டர்னெட் டேப்லெட் என்பது டேப்லெட் கம்ப்யூட்டர் வடிவத்தில் உள்ள இன்டர்னெட் பயன்பாட்டு சாதனமாகும். ஒரு டேப்லெட் கம்ப்யூட்டர் அளவுக்கு ஒரு இன்டர்னெட் டேப்லெட்டில் நிறைய கம்ப்யூட்டிங் திறன் இருக்காது, அதன் பயன்பாடுகள் தொகுப்பும் குறைவாகவே இருக்கும், இது ஒரு பொது பயன்பாட்டு கம்ப்யூட்டரை இடம்பெயர்க்க முடியாது. இன்டர்னெட் டேப்லெட்டுகளில் பொதுவாக ஒரு எம்பி3 மற்றும் வீடியோ பிளேயர், ஒரு வெப் பிரவுசர், ஒரு சாட் பயன்பாடு மற்றும் ஒரு பிக்சர் வியூவர் ஆகிய மென்பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.

ஒரு பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் (PDA) என்பது குறைவான செயல்பாட்டு திறன் கொண்ட சிறிய, பொதுவாக பாக்கெட் அளவான கம்ப்யூட்டராகும். இது ஒரு மேஜைக் கம்ப்யூட்டருக்கு துணையாக அமையும் வகையிலும் அதனுடன் ஒத்திசையும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது, தொடர்புகள், முகவரிப் புத்தகம், குறிப்புகள், மின்னஞ்சல் மற்றும் பிற அம்சங்களுக்கு அணுகலளிக்கிறது.

ஒரு அல்ட்ரா-மொபைல் பிசி என்பது முழுமையான அம்சங்களுடன், PDA அளவில், பொதுவான பயன்பாட்டு ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் ஆகும்.

ஒரு ஸ்மார்ட்போன் என்பது செல்போன் செயல்பாடும் சேர்க்கப்பட்ட ஒரு PDA ஆகும். தற்போதைய ஸ்மார்ட்போன்கள் பரந்த அம்சங்களையும் நிறுவத்தக்க பயன்பாடுகளையும் கொண்டுள்ளன.

இந்த வகைப்பாடுகளை பிரிக்கிற எல்லைகள் எல்லாம் சமயங்களில் தடுமாறுவதும் உண்டு. உதாரணமாக OQO UMPC ஒரு PDA-அளவிலான டேப்லெட் பிசியும் கூட; ஆப்பிள் இமேட் ஒரு மடிக் கம்ப்யூட்டரின் மடிப்பு வடிவ தோற்றத்தைக் கொண்டிருந்தது, ஆனால் PDA மென்பொருளை இயக்கியது. எச்பி ஓம்னிபுக் மடிக் கம்ப்யூட்டர் வரிசைகள் அல்ட்ரா மொபைல் பிசிக்கள் என்று கூறத்தக்க அளவிலான சிறிய சாதனங்களை அடக்கியதாய் இருந்தன. நோக்கியா 770 இன்டர்னெட் டேப்லெட்டின் வன்பொருளானது அடிப்படையில் சாரஸ் 6000 போன்ற PDA க்களில் இருக்கும் அதே தான்; அது PDA என்று அழைக்கப்படாததற்கான ஒரே காரணம் அது ஒரு PIM மென்பொருளைக் கொண்டிருக்கவில்லை என்பது தான். இன்னொரு பக்கத்தில் 770 மற்றும் சாரஸ் இரண்டுமே ஒரே டெஸ்க்டாப் லினக்ஸ் மென்பொருளில் தான் இயங்குகின்றன, பொதுவாக சில மாற்றங்களுடன்.

மேலும் காண்க[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mobile computers
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


 • என்டர்பிரைஸ் டிஜிட்டல் அசிஸ்டன்ட்
 • இட-அடிப்படையிலான சேவை
 • மொபைல் அட்-ஹாக் நெட்வொர்க்குகள்
 • மொபைல் கம்ப்யூட்டிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் திறனாய்வு
 • மொபைல் அபிவிருத்தி
 • மொபைல் சாதன மேலாண்மை
 • மொபைல் அடையாள மேலாண்மை
 • மொபைல் மென்பொருள்
 • மொபைலியர்கள் (1}மொபைல் ரிக்குகளை பயன்படுத்துபவர்கள்)
 • உபிகுடஸ் கம்ப்யூட்டிங்

குறிப்புதவிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர்வுக்_கணிமை&oldid=3390109" இருந்து மீள்விக்கப்பட்டது