சிறிய காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறிய காகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. bennetti
இருசொற் பெயரீடு
Corvus bennetti
நார்த், 1901

சிறிய காகம் (Corvus bennetti) என்பது ஆத்திரேலிய காக்கை இனங்களுள் தோரேசியன் காகத்தினைப் போன்ற சிற்றினமாகும்.இதன் விலங்கியல் பெயர் கோவர்சு பென்னெட்டி என்பதாகும். கழுத்து மற்றும் தலைப்பகுதியில் வெண்ணிற இறகுகளைக் கொண்டவை. இந்த இறகுகள் (சுமார் 38 முதல் 45 செ.மீ நீளமுடையன) வலுவான காற்றின் போது வெளித்தெரியும். ஆத்திரேலிய, யூரேசியாவிலிருந்து ஒன்று, ஜாக்டாவ் (கோர்வஸ் மோனெடுலா ) இனங்களைத் தவிர ஆஸ்திரேலியாவின் வடக்கே சில தீவுகளில் உள்ள கோர்வசிலிருந்து வேறுபடுத்தும் வெள்ளைக் கருவிழியினைக் கொண்டது. ஆத்திரேலிய காக்கைகளைப் போலவே, இந்த இனமும் கருவிழியினைச் சுற்றி நீல வளையத்தைக் கொண்டுள்ளது.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

இது மேற்கு மற்றும் மத்திய ஆஸ்திரேலியாவில் பெரும்பாலும் வறண்ட, பாலைவன பகுதிகளுக்கு அருகில் வசிக்கிறது. சிறிய நகரங்கள் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அடிக்கடி செல்கிறது, அங்குக் கூட்டங்களாகக் காணப்படும்.

சொற்பிறப்பியல்[தொகு]

கோவர்சு பென்னெட்டி நியூ சவுத் வேல்ஸ் பறவையியலாளரும் இயற்கை வரலாற்று மாதிரிகள் சேகரிப்பாளருமான கென்ரிக் ஹரோல்ட் பென்னட்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]

நடத்தை[தொகு]

உணவு[தொகு]

இதன் முக்கிய உணவானது தரையில் ஊரும் பூச்சிகள், தானியங்கள் மற்றும் பிற விதைகளை உள்ளடக்கியதாகும். இது டொரேசிய காகத்தினை விடக் குறைவான தோட்டியாக உள்ளது.

கூடு கட்டுதல்[தொகு]

இது பொதுவாகச் சிறிய, தளர்வான கூடுகளை மண் சேர்த்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிக் கட்டுகிறது. (இது போன்ற கூடுகட்டும் முறையினைப் பின்பற்றும் காகம் இது மட்டுமே).

கரைதல்[தொகு]

சிறிய காகத்தின் குரலானது சற்று கரடு முரடாக ""ஹர்க்-ஹர்க்-ஹர்க்-ஹர்க்"" முதல் "ஆ-ஆ-ஆ" போல இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  • BirdLife International (2016). "Corvus bennetti". IUCN Red List of Threatened Species. 2016: e.T22706030A94047270.

பட இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_காகம்&oldid=3580747" இலிருந்து மீள்விக்கப்பட்டது