பிரான்ஸ் காஃப்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: pag:Franz Kafka
சி தானியங்கிஇணைப்பு: yo:Franz Kafka
வரிசை 121: வரிசை 121:
[[vo:Franz Kafka]]
[[vo:Franz Kafka]]
[[war:Franz Kafka]]
[[war:Franz Kafka]]
[[yo:Franz Kafka]]
[[zh:弗朗茨·卡夫卡]]
[[zh:弗朗茨·卡夫卡]]
[[zh-min-nan:Franz Kafka]]
[[zh-min-nan:Franz Kafka]]

21:59, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

பிராண்ஸ் காஃப்கா
1906ல் எடுக்கப்பட்ட பிராண்ஸ் காஃப்காவின் ஒளிப்படம்.
1906ல் எடுக்கப்பட்ட பிராண்ஸ் காஃப்காவின் ஒளிப்படம்.
பிறப்பு(1883-07-03)3 சூலை 1883
பிராக், ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்பு3 சூன் 1924(1924-06-03) (அகவை 40)
வியன்னா, ஆஸ்திரியாவுக்கு அண்மையில் உள்ள கீர்லிங்
தொழில்காப்புறுதி அலுவலர், தொழிற்சாலை மேலாளர், புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர்.
தேசியம்யூதர்-பொஹேமியர் (ஆஸ்திரியா-ஹங்கேரி)
வகைபுதினம், சிறுகதை
இலக்கிய இயக்கம்நவீனத்துவம், இருப்பியலியம், precursor to magical realism
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Trial, The Castle, The Metamorphosis
கையொப்பம்
படிமம்:Kafkasignature.png

பிராண்ஸ் காஃப்கா (Franz Kafka - 3 ஜூலை 1883 – 3 ஜூன் 1924) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அக்காலத்து ஆஸ்திரியா-ஹங்கேரியில் இருந்ததும் இப்போது செக் குடியரசில் உள்ளதுமான பிராக் நகரில், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தனித்துவமான ஆக்கங்களுட் பல முற்றுப்பெறாதவை என்பதுடன், பெரும்பாலானவை அவரது இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவரது ஆக்கங்கள் மேல்நாட்டு இலக்கியத்தில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தியவற்றுள் அடங்குவனவாகும்.

உருமாற்றம் (The Metamorphosis - 1915) போன்ற இவரது கதைகளும், வழக்கு (The Trial - 1925), கோட்டை (The Castle - 1926) போன்ற புதினங்களும் பயங்கரமான அதிகாரம் சார்ந்த உலகில் கவலைகளுக்கு உள்ளாகும் தனிமனிதர்களைப் பற்றியவையாகும்.

வரலாறு

பிராண்ஸ் காஃப்காவின் தந்தையான ஹேர்மன் காஃப்கா (1852–1931), மிகப்பெரிய, தன்னலம் கொண்ட, அடக்கியாளும் தன்மை உள்ள ஒரு வணிகர் எனக் கூறப்படுகின்றது. காஃப்காவும் இவரை "வலிமை, உடல்நலம், உணவில் விருப்பம், உரத்த குரல், பேச்சு வன்மை, திருப்தி, முயற்சி, மனித இயல்பு பற்றிய அறிவு என்பன கொண்டவர்" என விவரித்துள்ளார். ஹேர்மனின் தந்தை ஜேக்கப் காஃப்கா, சடங்குகளுக்காகப் பிராணிகளை வெட்டுபவர். இவர்கள், தெற்கு பொஹேமியாவில் பிசெக்குக்கு அருகின் அமைந்துள்ள செக் மொழி பேசும் யூதர் ஊரான "ஓசெக்"கில் இருந்து பிராக்கில் குடியேறினர். சிலகாலம் இடத்துக்கிடம் செல்லும் விற்பனைப் பிரதிநிதியாகப் பணி புரிந்த ஹேர்மன் பின்னர் ஆண்களுக்கும், பெண்களுக்குமான ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நிறுவி நடத்திவந்தார். இவரிடம் 15 க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். காஃப்காவின் தாய் ஜூலி (1856—1934), போடெபிராடியில் வடிப்புத் தொழில் நடத்திவந்த செல்வந்தரான ஜேக்கப் லேவி என்பவரின் மகள். ஜூலி தனது கணவரை விடக் கூடுதலாகப் படித்தும் இருந்தார்.

காஃப்கா அவரது பெற்றோரின் ஆறு பிள்ளைகளுள் மூத்தவர். இரண்டு தம்பிகளான ஜார்ஜும், ஹென்ரிக்கும் அவர்கள் முறையே 15 மாதம், ஆறு மாதம் வயதுகளை அடைந்தபோது இறந்துவிட்டனர். ஏனைய மூவரும் தங்கைகளான கப்ரியேல் (எல்லி) (1889–1941), வலரி (வல்லி) (1890–1942), ஆட்டிலி (ஆட்லா) (1891–1943) என்போர். வேலை நாட்களில் இவர்களது தந்தையும், தாயும் வீட்டில் இருப்பதில்லை. தாயார் தந்தைக்கு ஒரு நாளில் 12 மணிநேரம் வரை வணிகத்தில் உதவி செய்து வந்தார். இதனால் பிள்ளைகள் பெரும்பாலும் வேலையாட்களிடமே வளர்ந்தனர். தந்தையுடனான காஃப்காவின் உறவு நன்றாக இருக்கவில்லை என்பதை அவர் தனது தந்தைக்கு எழுதிய கடிதங்களில் இருந்து அறிய முடிகிறது. அக்கடிதங்களில், காஃப்கா, தனது தந்தை தன்னைச் சிறுவயது முதலே, பெரிய அளவில் உணர்வு அடிப்படையிலான துன்பங்களுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

காஃப்காவின் தங்கைகள், நாஸிகளின் காலத்தில், அவர்களது குடும்பத்தினருடன் "சிறுபான்மைக் குடியிருப்பு"களுக்கு (Ghetto) அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கே அல்லது வதை முகாம்களில் இறந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்ஸ்_காஃப்கா&oldid=453386" இலிருந்து மீள்விக்கப்பட்டது