உள்ளடக்கத்துக்குச் செல்

கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கடை.
தமிழகக் கிராம மளிகைக்கடையும், தள்ளுவண்டி வளையல் கடையும்

கடை (ஒலிப்பு) என்பது ஒரு குறிப்பிட்ட நிலையான இடத்தில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சிறிய நிறுவனத்தைக் குறிக்கும். கடைகள் மக்களுக்குத் தேவையான பொருட்களை நேரடியாக அவர்களுக்கு விற்பனை செய்கின்றன. கடைகளில் பொருட்களை விற்பது மட்டுமன்றி வாடிக்கையாளருக்கு அவர்கள் வாங்கும் பொருட்களை அவர்கள் வீடுகளிலேயே விநியோகிக்கும் சேவைகளையும் செய்வதுண்டு.

கடைக்காரர்கள் பொருட்களை, உற்பத்தியாளரிடம் இருந்தோ, இறக்குமதியாளரிடம் இருந்தோ நேரடியாக வாங்குவர், அல்லது மொத்த வணிகர்களிடமிருந்து வாங்கி சிறிய அளவில் வாடிக்கையாளருக்கு விற்பர். உற்பத்திப் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் சில்லறை வணிக நிலையங்களான கடைகளே கடைசிப்படியில் உள்ளன. உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவோர், தங்களுடைய விநியோக உத்திகளில் சில்லறை வணிகத்தையும், அதனை நடைமுறைப்படுத்தும் கடைகளையும் இன்றியமையாத ஒரு பகுதியாக நோக்குவதால், உற்பத்தியாளர்கள் கடைக்காரர்களை ஊக்குவிப்பதற்கான பல நடவடிக்கைகளை எடுக்கின்றனர். பொருட்களைக் கடைகளுக்கே கொண்டுவந்து விநியோகம் செய்தல், கடன் வசதிகள், விளம்பரத்துக்குரிய பரிசுப் பொருட்கள் வழங்குதல் என்பவை இவற்றுள் அடக்கம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடை&oldid=2553547" இலிருந்து மீள்விக்கப்பட்டது