பிரான்ஸ் காஃப்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரான்ஸ் காஃப்கா

1906ல் எடுக்கப்பட்ட பிராண்ஸ் காஃப்காவின் ஒளிப்படம்.
பிறப்பு பிரான்ஸ் காஃப்கா
சூலை 3, 1883(1883-07-03)
பிராக், ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்பு 3 சூன் 1924(1924-06-03) (அகவை 40)
வியன்னா, ஆஸ்திரியாவுக்கு அண்மையில் உள்ள கீர்லிங்
தொழில் காப்புறுதி அலுவலர், தொழிற்சாலை மேலாளர், புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர்.
நாடு யூதர்-பொஹேமியர் (ஆஸ்திரியா-ஹங்கேரி)
இலக்கிய வகை புதினம், சிறுகதை
இயக்கம் நவீனத்துவம், இருப்பியலியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
த டிரயல், த காசில்
கையொப்பம் Franz Kafka's signature.gif

பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka, 3 ஜூலை 1883 – 3 ஜூன் 1924) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அக்காலத்து ஆஸ்திரியா-ஹங்கேரியில் இருந்ததும் இப்போது செக் குடியரசில் உள்ளதுமான பிராக் நகரில், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தனித்துவமான ஆக்கங்களுட் பல முற்றுப்பெறாதவை என்பதுடன், பெரும்பாலானவை அவரது இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவரது ஆக்கங்கள் மேல்நாட்டு இலக்கியத்தில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தியவற்றுள் அடங்குவனவாகும்.

உருமாற்றம் (The Metamorphosis - 1915) போன்ற இவரது கதைகளும், வழக்கு (The Trial - 1925), கோட்டை (The Castle - 1926) போன்ற புதினங்களும் பயங்கரமான அதிகாரம் சார்ந்த உலகில் கவலைகளுக்கு உள்ளாகும் தனிமனிதர்களைப் பற்றியவையாகும்.

வரலாறு[தொகு]

பிராண்ஸ் காஃப்காவின் தந்தையான ஹேர்மன் காஃப்கா (1852–1931), மிகப்பெரிய, தன்னலம் கொண்ட, அடக்கியாளும் தன்மை உள்ள ஒரு வணிகர் எனக் கூறப்படுகின்றது. காஃப்காவும் இவரை "வலிமை, உடல்நலம், உணவில் விருப்பம், உரத்த குரல், பேச்சு வன்மை, திருப்தி, முயற்சி, மனித இயல்பு பற்றிய அறிவு என்பன கொண்டவர்" என விவரித்துள்ளார். ஹேர்மனின் தந்தை ஜேக்கப் காஃப்கா, சடங்குகளுக்காகப் பிராணிகளை வெட்டுபவர். இவர்கள், தெற்கு பொஹேமியாவில் பிசெக்குக்கு அருகின் அமைந்துள்ள செக் மொழி பேசும் யூதர் ஊரான "ஓசெக்"கில் இருந்து பிராக்கில் குடியேறினர். சிலகாலம் இடத்துக்கிடம் செல்லும் விற்பனைப் பிரதிநிதியாகப் பணி புரிந்த ஹேர்மன் பின்னர் ஆண்களுக்கும், பெண்களுக்குமான ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நிறுவி நடத்திவந்தார். இவரிடம் 15 க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். காஃப்காவின் தாய் ஜூலி (1856—1934), போடெபிராடியில் வடிப்புத் தொழில் நடத்திவந்த செல்வந்தரான ஜேக்கப் லேவி என்பவரின் மகள். ஜூலி தனது கணவரை விடக் கூடுதலாகப் படித்தும் இருந்தார்.

காஃப்கா அவரது பெற்றோரின் ஆறு பிள்ளைகளுள் மூத்தவர். இரண்டு தம்பிகளான ஜார்ஜும், ஹென்ரிக்கும் அவர்கள் முறையே 15 மாதம், ஆறு மாதம் வயதுகளை அடைந்தபோது இறந்துவிட்டனர். ஏனைய மூவரும் தங்கைகளான கப்ரியேல் (எல்லி) (1889–1941), வலரி (வல்லி) (1890–1942), ஆட்டிலி (ஆட்லா) (1891–1943) என்போர். வேலை நாட்களில் இவர்களது தந்தையும், தாயும் வீட்டில் இருப்பதில்லை. தாயார் தந்தைக்கு ஒரு நாளில் 12 மணிநேரம் வரை வணிகத்தில் உதவி செய்து வந்தார். இதனால் பிள்ளைகள் பெரும்பாலும் வேலையாட்களிடமே வளர்ந்தனர். தந்தையுடனான காஃப்காவின் உறவு நன்றாக இருக்கவில்லை என்பதை அவர் தனது தந்தைக்கு எழுதிய கடிதங்களில் இருந்து அறிய முடிகிறது. அக்கடிதங்களில், காஃப்கா, தனது தந்தை தன்னைச் சிறுவயது முதலே, பெரிய அளவில் உணர்வு அடிப்படையிலான துன்பங்களுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

காஃப்காவின் தங்கைகள், நாஸிகளின் காலத்தில், அவர்களது குடும்பத்தினருடன் "சிறுபான்மைக் குடியிருப்பு"களுக்கு (Ghetto) அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கே அல்லது வதை முகாம்களில் இறந்தனர்.

படைப்புகள்[தொகு]

கதைகள்[தொகு]

பெயர் எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டு
பெஸ்ஜெரிபங்க் எனிஸ் காம்ஃபஸ் 1904 1908
தாஸ் அர்தில் 1912 1912
டை வெர்வாந்துலங் 1912 1915
இந்தர் ஸ்ட்ராப்கோலோனி 1914 1919
எயின் அங்கர்குன்ட்லர் 1924 1924
ஜோஸ்பின், டை சங்கரின் ஆடர் தாஸ் வோல்க் தர் மவுஸ் 1924 1924

புதினகள்[தொகு]

பெயர் எழுதிய ஆண்டு
தெர் ஹைசர் 1912
தெர் பிராசஸ் 1914
தாஸ் ஸ்கலாஸ் 1922

நவீன பதிப்புகள்[தொகு]

மால்கம் பால்சே என்பவர், பிரான்சேவின் தொகுதிகள் அனைத்தையும் 1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு நூலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் ஏலத்தின் மூலமாக, ஜெர்மனியைச் சேர்ந்த மார்பச்-அம்-நெக்கர் என்பவர் வாங்கினார். பால்சேவின் குழுவான கெரார்டு நியுமென், ஜாஸ்ட் ஸ்சில்மெயிட், ஜர்கர் பாரன் ஆகியோர் பிரான்சேவின் தொகுதிகளை மீட்டெடுத்தனர். பின் அவற்றை பிஸ்சர் வெர்லாக் என்பவர் வெளியிட்டார். தாஸ் ஸகலாஸ் என்ற புதினம் 1982ம் ஆண்டும், தெர் பிராசஸ் என்ற புதினம் 1990ம் ஆண்டிலும், தாஸ் வெர்ஸ்சோலினி 1983ம் ஆண்டில் வெளிவந்தன.

மொழிபெயர்ப்பு[தொகு]

எட்வின் மற்றும் வில்லா முயிர் ஆகியோர், பிரான்சேவின் தாஸ் ஸ்கலாஸ் எனும் புதினத்தை 1930ம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தனர். இப்புதினத்தை காஸ்டில் என்று செக்கர் மற்றும் வார்பர்க் ஆகியோர் இங்கிலாந்திலும், ஆல்பிரத் என்பவர் அமெரிக்காவிலும் வெளியிட்டனர். பிரான்சேவின் தொகுதிகள் அனைத்தும் 1940ல் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில், அமெரிக்காவில் வெளியிட்டனர். பின்னர் 1998ம் ஆண்டில் பால்சேவின் ஜெர்மானிய தொகுதிகள் அனைத்தும் ஆங்கிலத்திற்கு மொழி மாற்றப்பட்டது.

கலாச்சாரத் தாக்கம்[தொகு]

பிரான் காஃபேவைப் பற்றி பல்வேறு திரைப்படங்களும், பாடல்களும், நாடகங்களும் இயற்றப்பட்டன.

தலைப்பு ஆண்டு ஊடகம்
எ பிரண்ட் ஆப் காஃப்கா 1962 சிறுகதை
தி ட்ரையல் 1962 திரைப்படம்
வாட்டர்மெலான் மேன் 1970 திரைப்படம்
காஃப்கா பிராக்மன்ட் 1985 இசை
காஃப்கா திக் 1986 நாடகம்
பிரான்ஸ் காஃப்காவின் அற்புத வாழ்க்கை 1993 திரைப்படம்
மேட் மோஜோ 1996 கணினி விளையாட்டு
இன் த பீனல் காலனி 2000 இசை
காஃப்கா ஆன் தி ஷோர் 2002 புதினம்
காஃப்காஸ் ட்ரையல் 2005 இசை
காஃப்கா'ஸ் சூப் 2005 நூல்
காஃப்கா தி மியுசிகல் 2011 வானொலி நிகழ்ச்சி
சவுண்ட் இன்டர்பிரடேசன் 2012 எடுத்துக்காட்டு
கூகுள் டூடில் 2013 இணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்ஸ்_காஃப்கா&oldid=2210425" இருந்து மீள்விக்கப்பட்டது