நவீனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நவீனத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கலைத்துறைகளிலும், சமூக அறிவியல் துறைகளிலும்நவீனம் (Modernity) அல்லது நவீனத்துவம் என்பது, ஒரு வரலாற்றுக் காலத்தையும், பின் மத்திய கால ஐரோப்பாவில் உருவாகிய குறிப்பிட்டதொரு சமூக பண்பாட்டு விதிமுறைகள், மனப்பாங்குகள், நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சேர்க்கையையும் குறிக்கும். அதிலிருந்து இது உலகம் முழுவதிலும் பல்வேறு வழிகளிலும், பல்வேறு காலங்களிலும் வளர்ச்சியடைந்தது.

இது ஒரு கண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் ஒரு வாழ்க்கைமுறை என்றே கூறலாம். நவீனம் ஒரு கண்ணோட்டமாக, அணுகுமுறையாக கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஐரோப்பாவில் நிலவிய அறிவொளிக் காலத்தில் (Enlightenment era) எழுந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீனம்&oldid=2466354" இருந்து மீள்விக்கப்பட்டது