தன்னலம்
Appearance
தன்னலம் அல்லது சுயநலம் என்பது ஒவ்வொருவரும் தமது நலங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதைக் குறிக்கிறது. இதுவே பல பொருளியியல், அரசியல், சமூகவியல், கோட்பாடுகளின் அடிப்படை. பிறரை விட தானே தனது நலத்தைப் பேண முடியும் என்பதையும், இந்த செயற்பாட்டில் முழுச் சுதந்திரம் வேண்டும் என்பதையும் தன்னலம் கருத்தியல் சுட்டி நிற்கின்றது. பரந்த நோக்கில் பொது நலத்தையும் பேணியே தன்னலத்தைப் பேணக் கூடியதாக இருக்கின்றது. தன்னலம் கருத்தியல் தனிமனித சொத்துரிமையை வலியுறுத்துகிறது. ஒருவன் ஒன்றை தனது சொத்தாக கருதினாலேயே அவன் கூடிய கவனத்துடன் அதைக் கவனித்து கொள்வான் என்று இந்தக் கருத்தியல் சுட்டுகிறது. குறிப்பாக வன்மையான பொதுவுடமையை தன்னலம் முற்றிலும் எதிர்க்கிறது.
கூடுதல் வாசிப்புக்கு
[தொகு]- A Theory of Justice (by John Rawls)
- The Evolution of Cooperation, Robert Axelrod, Basic Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-02121-2
- The Selfish Gene, Richard Dawkins (1990), second edition—includes two chapters about the evolution of cooperation, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-286092-5
- The Virtue of Selfishness, Ayn Rand, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0451163931