எஸ். சத்தியமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மொழி மற்றும் கலை ஆர்வம்: I have improved the content of the particular article. There is a difference in the facts given in the Tamil version and the English version. This I have tried to remove and thus improve the content.
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Stymyratஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21: வரிசை 21:


==மொழி மற்றும் கலை ஆர்வம்==
==மொழி மற்றும் கலை ஆர்வம்==
இவர் தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது தந்தை பெரிய சமஸ்கிருத பண்டிதர். இவரும் தந்தையைப் போலவே சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர். இசைக் கலையிலும் பிற கலைகளிலும் ஆர்வம் காட்டியவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த சொல்லாற்றல் பெற்றவர்.<ref name="சத்தியமூர்த்தி"/>தீரர் சத்தியமூர்த்தி தனது தேவதாசி முறை தொடர வேண்டும் என்று மிகவும் தீவிரமாக போராடினார். கடவுள் இந்து சமய நம்பிக்கைகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று வாதிட்டார். மேலும் இதை அப்படியே விட்டு விட்டால் அடுத்து பார்ப்பன குருக்கள் முறைக்கு பதிலாக பார்ப்பனர்கள் அல்லாத மற்ற சாதியினரும் குருக்கள் ஆக வேண்டும் என்று ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது? என்றும் கேட்டார்.. ஆனாலும் தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவை எதிர்க்கும் முயற்சியில் தோல்வியே கண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போலவே பார்ப்பனர்கள் அல்லாத பிற சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டம் வந்தும் விட்டது. இதற்கு எல்லாம் என்ன சான்று என்று கேட்கிறீர்களா? ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும். ஒரே மனிதரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு மாதிரியாகவும் தமிழில் வேறு மாதிரியாகவும் கூறும் கலைக்களஞ்சியம் இதுவாகத்தான் இருக்கும்
இவர் தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது தந்தை பெரிய சமஸ்கிருத பண்டிதர். இவரும் தந்தையைப் போலவே சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர். இசைக் கலையிலும் பிற கலைகளிலும் ஆர்வம் காட்டியவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த சொல்லாற்றல் பெற்றவர்.<ref name="சத்தியமூர்த்தி"/>


== குடும்பம்==
== குடும்பம்==

11:38, 1 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

சத்தியமூர்த்தி
பிறப்பு(1887-08-19)ஆகத்து 19, 1887
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புமார்ச்சு 28, 1943(1943-03-28) (அகவை 55)
மதராசு, இந்தியா
பணிவழக்கறிஞர்

சத்தியமூர்த்தி (ஆகத்து 19, 1887[1] – மார்ச் 28, 1943) ஓர் காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலை வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர். தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது[2].

1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. அதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார். ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.

வாழ்க்கை

சத்தியமூர்த்தி ஆகத்து 19, 1887 அன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே செம்மனாம்பொட்டல் என்ற ஊரில் பிறந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலத் சட்டத்திற்கெதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.[3]. 1919 இல் திலகர், சீனிவாச சாஸ்திரி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவுடன் இருமுறை இங்கிலாந்து சென்றார். 1926இல் சுயராஜ்ஜியக் கட்சி சார்பில் இங்கிலாந்து சென்ற போது பல சொற்பொழிவுகளை அங்கு நிகழ்த்தினார்.[4] 1930ஆம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் இந்தியக் கொடி ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.[5]. 1942ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகுத்தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு மார்ச் 28, 1943ஆம் ஆண்டு சென்னை பொதுமருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

மொழி மற்றும் கலை ஆர்வம்

இவர் தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது தந்தை பெரிய சமஸ்கிருத பண்டிதர். இவரும் தந்தையைப் போலவே சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர். இசைக் கலையிலும் பிற கலைகளிலும் ஆர்வம் காட்டியவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த சொல்லாற்றல் பெற்றவர்.[4]

குடும்பம்

இவருக்கு லட்சுமி என்ற மகளிருந்தார். அவர தனது 83 ஆவது வயதில் 2009 சூன் 13ஆம் நாள் மறைந்தார்.[6]

மேற்கோள்கள்

  1. The Hindu:Glimpses of a great leader's life,August 22, 2006
  2. Address of Tamil Nadu State Congress from Tamil Nadu State Congress website
  3. A born freedom-fighter and his close ties by Lakshmi Krishnamurti, The Hindu-125 Years Special Supplement, Sep 13,2003
  4. 4.0 4.1 சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 142-144
  5. The Life and Times of Sathyamurthy, Independence Day 2007 special on chennaionline.com
  6. தியாகி சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி மரணம்

மேலும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._சத்தியமூர்த்தி&oldid=3082672" இலிருந்து மீள்விக்கப்பட்டது