சாம்பல் மின்சிட்டு
உரோசா மின்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேம்பேபாகிடே
|
பேரினம்: | பெரிகுரோகோடசு
|
இனம்: | பெ. டைவாரிகேடசு
|
இருசொற் பெயரீடு | |
பெரிகுரோகோடசு டைவாரிகேடசு (இரபீல்சு, 1822) | |
வேறு பெயர்கள் | |
|
சாம்பல் மின்சிட்டு (ashy minivet)(பெரியோகாக்டசு டைவாரிகேடசு) என்பது கேம்பேபாஜிடே குடும்பத்தில் உள்ள மின்சிட்டுகள் பேரினமான பெரியோகாக்டசினைச் சார்ந்த கிழக்கு ஆசியாவின் குருவி சிற்றினம் ஆகும். பெரும்பாலான மின்சிட்டுகளின் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டாலும், இந்த சிற்றினம் சாம்பல், வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆண் பறவை வெள்ளை முகத்துடன் கறுப்பு முதுகினைக் கொண்டுள்ளது. இருப்பினும் பெண் பறவை சுவின்கோ மின்சிட்டின் பெண் பறவையுடன் அடையாளம் காண்பதில் குழப்பமடையலாம். இவை பெரும்பாலும் மற்ற மினிசிட்டுகளுடன் சேர்ந்து விதானத்தில் தீவனம் தேடுகின்றன.
விளக்கம்
[தொகு]சாம்பல் மின்சிட்டு சுமார் 18.5 முதல் 20 செ.மீ. நீளமுடையன. ஆண் பறவையின் மேற்பகுதி சாம்பல் நிறமாகவும் கீழே வெண்மை நிறமாகவும் இருக்கும். இது ஒரு வெள்ளை நெற்றியுடன் கருப்பு உச்சியினைக் கொண்டுள்ளது. பறக்க உதவும் இறகுகள் முழுவதும் வெண்ணிறப் பட்டை காணப்படுகிறது. வெளிப்புற வால் இறகுகள் வெண்மையானவை. அலகும் பாதங்களும் கருப்பு நிறமுடையன. பெண்ணின் தலைப்பகுதியில் சாம்பல் நிறத்தில் உள்ளது. அலகிற்கும் கண்ணுக்கும் இடையில் கருப்பு பட்டை காணப்படுகிறது. இதற்கு மேல் ஒரு குறுகிய வெள்ளை பட்டை உள்ளது. இதனுடைய அழைப்பு ஒரு உயர் பிட்ச், உலோக ட்ரில் உள்ளது. இது உரோசா மின்சிட்டு மற்றும் சுவின்கோ மின்சிட்டுஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.[2] ஒரு வருடத்தில் இரண்டு முறை சிறகுகளை உதிர்க்கும் பறவைகளில் இதுவும் ஒன்று. மேலும் மினிசிட்டுகளில் மிக நீண்ட தூரம் வலசைப்போகும் பறவையும் இதுவே ஆகும்.[3]
இது தென்கிழக்கு சைபீரியா, வடகிழக்கு சீனா, கொரியா மற்றும் சப்பானில் இனப்பெருக்கம் செய்கிறது. தெற்கு சப்பானின் இரியூக்கியூ தீவுகளில் உள்ள பறவைகள் பொதுவாக ஒரு தனி சிற்றினமாகக் கருதப்படுகின்றன. சாம்பல் மினிசிட்டு ஒரு நீண்ட தூரம் இடம்பெயரும் வலசைப்போகும் பறவையாகும். இவை குளிர்காலத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சுமாத்திரா, போர்னியோ மற்றும் பிலிப்பீன்சு வரை செல்கிறது. இது காடுகளிலும், பரந்து விரிந்த மரங்களைக் கொண்ட திறந்த பகுதிகளிலும் காணப்படுகிறது. இது பூச்சிகளை உணவாகத் தேடுகிறது. சில சமயங்களில் பிற பறவைகளுடன் உணவு தேட மந்தைகளாகச் சேரும்.[4][5] வலசைப்போகும் பறவைகள் பெரும்பாலும் பெரிய மந்தைகளாகக் காணப்படுகின்றன.
பாதுகாப்பு
[தொகு]சாம்பல் மின்சிட்டின் நிலை பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகக் கருதப்படுகிறது. அமாமி தீவில் உள்ள சாம்பல் மின்சிட்டின் எண்ணிக்கை 1985 முதல் 2001 வரை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.[6]
தெற்காசியப் பிராந்தியத்தில், இவை அரிதாகவே கருதப்படுகின்றன. இவை முதன்முதலில் இந்திய நிலப்பரப்பில் 1965-ல் மட்டுமே காணப்பட்டன.[7] இருப்பினும் இவை அந்தமான் தீவுகளில் 1897-ல் இருப்பது அறிவிக்கப்பட்டன.[8] இதன்பின்னர் அதிக முறை பதிவாகியுள்ளது.[7][9][10][11][12]
இனப்பெருக்கம்
[தொகு]சாம்பல் மின்சிட்டு நான்கு முதல் ஏழு முட்டைகள் வரை இடும். இவை 17 முதல் 18 நாட்கள் வரை அடைகாக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Pericrocotus divaricatus". IUCN Red List of Threatened Species 2018: e.T22706735A130428286. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706735A130428286.en. https://www.iucnredlist.org/species/22706735/130428286. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Stresemann, E (1972). "Noch ein Zugvogel mit einer postnuptialen und einer praenuptialen Vollmauser:Pericrocotus divaricatus Raffles". Journal of Ornithology 113 (2): 218. doi:10.1007/BF01640504.
- ↑ Stresemann, E.; V Stresemann (1972). "Die postnuptiale und die praenuptiale Vollmauser von Pericrocotus divaricatus Raffles". J. Ornithol. 113 (4): 435–439. doi:10.1007/BF01647606.
- ↑ Pittie, A.; A Poddar (2000). "Ashy Minivet Pericrocotus divaricatus (Raffles) in Kanha National Park, Mandla District, Madhya Pradesh". J. Bombay Nat. Hist. Soc. 97 (2): 283. https://biodiversitylibrary.org/page/48567717.
- ↑ Robertson, A (1991). "Occurrence of the Ashy Minivet Pericrocotus divaricatus (Raffles) in Kerala". J. Bombay Nat. Hist. Soc. 88 (3): 455–456. https://biodiversitylibrary.org/page/48673891.
- ↑ Sugimura, Ken; Fumio Yamada; Asako Miyamoto (2003). "Population Trend, Habitat Change and Conservation of the Unique Wildlife Species on Amami Island, Japan". Global Environmental Research 7 (1): 79–89. http://airies.or.jp/publication/ger/pdf/07-01-08.pdf.
- ↑ Santharam,V (1985). "New records - Ashy Minivet and Eyebrowed Thrush in Madras". Newsletter for Birdwatchers 25 (5&6): 9–11. https://archive.org/stream/NLBW25_56#page/n11/mode/1up.
- ↑ Santharam, V (1988). "Occurrence of the Ashy Minivet (Pericrocotus divaricatus) in Madras city (South India)". J. Bombay Nat. Hist. Soc. 85 (2): 430–431. https://biodiversitylibrary.org/page/48804991.
- ↑ Khacher, Lavkumar (1994). "Ashy Minivet Pericrocotus divaricatus (Raffles) in Himachal Pradesh". J. Bombay Nat. Hist. Soc. 91 (2): 321.
- ↑ Santharam, V (1990). "Comments on Ashy Minivets, and on Cormorants in Thekkady". Newsletter for Birdwatchers 30 (7&8): 9–10. https://archive.org/stream/NLBW30_78#page/n10/mode/1up.
- ↑ Lahkar, B. P.; Ahmed, M. F.; Praveen J.; Singha, H. J. (2006). "First sighting of Black Stork Ciconia nigra and Ashy Minivet Pericrocotus divaricatus from Meghalaya, north-east India". Indian Birds 2 (6): 169–170.
குறிப்புகள்
[தொகு]- பிரேசில், மார்க் ஏ. (1991) ஜப்பானின் பறவைகள், கிறிஸ்டோபர் ஹெல்ம், லண்டன்.
- MacKinnon, John & Phillipps, Karen (2000) A Field Guide to the Birds of China, Oxford University Press, Oxford.
- ராப்சன், கிரேக் (2002) தென்கிழக்கு ஆசியாவின் பறவைகளுக்கான கள வழிகாட்டி . நியூ ஹாலந்து, லண்டன்.