உரோசா மின்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோசா மின்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: 'பசாரிபார்மிசு
குடும்பம்: கேம்பேபாகிடே
பேரினம்: பெரிகுரோகோடசு
இனம்: பெ. ரோசசு
இருசொற் பெயரீடு
பெரிகுரோகோடசு ரோசசு
வெயிலோட், 1818

உரோசா மின்சிட்டு (Rosy minivet)(பெரிகுரோகோடசு ரோசசு) என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். ஆணின் இறக்கைகள் மற்றும் வாலில் அடர் இளஞ்சிவப்பு/இளஞ்சிவப்பு நிறமும், மற்ற மின்சிட்டுகளில் பிரகாசமான மஞ்சள் நிறத்திற்கு எதிராகப் பெண் ஆலிவ்/ஆலிவ் மஞ்சள் நிறமும் இருப்பதால் இவை மற்ற மின்சிட்டுகளிலிருந்து வேறுபடுகிறது. ஆண் மற்றும் பெண் இரு மின்சிட்டுகளும் மேலே சாம்பல் நிறத்தில் காணப்படும்.

பரவல்[தொகு]

உரோசா மின்சிட்டு ஆப்கானித்தான், வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில், இமயமலையின் மேற்கிலிருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மலைகளில் காணப்படுகிறது. தீபகற்பத்தில் குளிர்காலத்தில் காணப்படும். உரோசா மின்சிட்டின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Pericrocotus roseus". IUCN Red List of Threatened Species 2018: e.T22706728A130426419. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706728A130426419.en. https://www.iucnredlist.org/species/22706728/130426419. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோசா_மின்சிட்டு&oldid=3452526" இருந்து மீள்விக்கப்பட்டது