உள்ளடக்கத்துக்குச் செல்

சரவணன் மீனாட்சி (பகுதி 3)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவணன் மீனாட்சி 3
வகைகுடும்பம்
காதல்
நகைச்சுவை
திகில்
நாடகத் தொடர்
இயக்கம்பிரவீன் பென்னட்
நடிப்புரியோ ராஜ்
ரச்சித்தா மகாலட்சுமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்3
அத்தியாயங்கள்556
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்18 சூலை 2016 (2016-07-18) –
17 ஆகத்து 2018 (2018-08-17)
Chronology
தொடர்புடைய தொடர்கள்சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி 3 என்பது விஜய் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாம் பாகம் ஆகும். இந்த தொடர் 18 சூலை 2016 முதல் 17 ஆகத்து 2018 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி 556 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இந்த தொடரில் மீனாட்சியாக 'சரவணன் மீனாட்சி (பகுதி 2)' நடித்த ரச்சித்தா மகாலட்சுமி நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக ரியோ ராஜ் ரியோ சரவணனாக நடிக்கின்றார் இவர்களுடன் சங்கரபாண்டி, காயத்ரி, சமந்தா, ராஜ்குமார், ராஜசேகர் போன்ற பலர் நடிக்கிறார்கள். இந்த தொடர் காதல், குடும்பம், பேய், பழிவாங்குதல், திகில் போன்ற பல கதை அம்சங்களை கொண்டுள்ளது.

கதைகள்

[தொகு]

கதை: 01

[தொகு]

வெளிநாட்டில் படித்து விட்டு வரும் மீனாட்சி கிராமத்தில் உள்ள சரவணன் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் இரு வீட்டாருக்கும் பல பிரச்சனை, மாமன் மகன் சரவணனை காதலித்த முத்தழகு கோபம் கொண்டு சரவணனின் அண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள். ஒரே வீட்டிற்குள் இருவரும் வசிக்க போட்டி, பொறாமை சண்டைகள் ஆரம்பிக்கின்றன. இதன் நடுவில் சரவணனை பழிவாங்க நினைக்கும் மீனாட்சியின் தாய்.

கதை: 02

[தொகு]

சொத்துக்களை இழந்த மீனாட்சி குடும்பத்தினர் மெஸ் வைப்பதற்காக ஒரு வீட்டினை வாடகைக்கு பிடிக்க, அந்த வீட்டில் தூக்கு போட்டு இறந்து போன பெண்ணின் பேய் முத்தழகுவை பிடித்துக்கொள்கிறது. இதனால் சரவணன் மீனாட்சி குடும்பத்தில் பல பிரச்சனைகள். இதன் நடுவில் சரவணன் மனைவி மீனாட்சிக்கு அம்மன் அருள் பிடிக்கிறது. அப்புறம் என்ன தனது குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கும் பேயிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடி ஜெயிக்கிறாள் மீனாட்சி.

கதை: 03

[தொகு]

விடுமுறைக்கு குடுமபினருடன் வெளியூர் செல்லகின்றனர். அங்கு நடக்கும் ஒரு போட்டியில் சிறந்த தம்பதியர் யார் என்ற போட்டியில் முத்தழகு சங்கரபாண்டி தம்பதியர் சொதப்பி விட சரவணன் மீனாட்சி தம்பதியர் ஜெயிக்கிறார்கள். இது முத்தழகுவிற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயித்தே ஆகவேண்டும் என்று கணவனுக்கு கண்டிசன் போடுகிறாள். இதனால் இரு குடும்பத்தினருக்கும் வரும் மனஸ்தாபங்கள்.

கதை: 04

[தொகு]

சொத்துக்களை இழந்து புது ஊருக்கு போகும் சரவணன் குடும்பத்தினர்கள் அங்கு மீனாட்சிக்கு வரும் கடந்த கால ஞாபங்கள். கடந்த காலத்தில் ஒரு இளவரசியாக வாழ்கின்றார். தனது கடந்த கால எதிரிகளை நிகழ்காலத்தில் காணும் மீனாட்சி அவர்களிடமிருந்து தனது குடுபத்தினரை எப்படி காப்பாற்றுகிறாள் என்பது தான் கதை.

கதை: 05

[தொகு]

முத்தழகின் தங்கை தங்கம் வெளியூரில் படித்து முடித்து விட்டு ஊருக்கு வருகின்றார். அவர் படிக்க செற்ற இடத்தில் ஒருவரை காதலிக்கிறார் இந்த விடயம் குடுப்பதினாருக்கு தெரியவர இந்த காதலுக்கு தடை போடுவார்களா இல்லை இருவரையும் சேர்த்து வைப்பார்களா என்பது தான் கதை.

நடிகர்கள்

[தொகு]

முதன்மை கதாபாத்திரம்

[தொகு]
  • ரச்சித்தா மகாலட்சுமி - மீனாட்சி (சரவணனின் மனைவி)
  • ரியோ ராஜ் - சரவணன் (மீனாட்சியின் கணவன்)
  • சங்கரபாண்டி - சங்கரபாண்டி (சரவணனின் அண்ணா / முத்தழகின் கணவன்)
  • காயத்ரி - முத்தழகு (சங்கரபாண்டியனின் மனைவி)
  • சமந்தா . சத்யவதனி (சரவணனின் சகோதரி / சக்திவேலுவின் மனைவி)
  • ராஜ்குமார் - சக்தி வேலு (சத்யவதினியின் கணவன்)
  • செந்தில் குமாரி - தேவயானி (சரவணனின் அம்மா)
  • ரவி சந்திரன் - வேலுச்சாமி (சரவணனின் அப்பா)
  • தீபா - பழனியம்மாள் (முத்தழகின் அம்மா)
  • மீனாட்சி - தங்கம் (முத்தழகின் தங்கை) (2018)
  • விஷ்ணு - கதிர்வேல் சரவணன் (கதிர்) (தங்கத்தின் காதலன்) (2018)

துணை கதாபாத்திரம்

[தொகு]
  • சுசித்ரா - ஜோதி மீனாட்சியின் தங்கை
  • லட்சுமி - லட்சுமி (மீனாட்சியின் தாய்)
  • ஞானசம்பந்தன் - மருதுபாண்டி (மீனாட்சியின் தந்தை)
  • பிரிட்டோ - ரத்னவேல் பாண்டி ( மீனாட்சியின் இளைய சகோதரன்)
  • குமார மூர்த்தி - குருவில்லா (சரவணன் நண்பன்)
  • பிராங்கிளின் - ஞானமணி (சரவணன் நண்பன்)
  • அன்பரசன்
  • வாசு விக்ரம் - (கதிர்வேலின் தந்தை) (2018)
  • நித்தியா ரவிந்திரணன்- (கதிர்வேலின் தாய்) (2018)

பழைய கதாபாத்திரம்

[தொகு]
  • ராஜசேகர் - ராமசாமி (சரவணனின் தாத்தா)
  • பவித்ரா - ராஜி
  • நந்தினி - ஜோதி மீனாட்சியின் தங்கை
  • நித்தியா -
  • ஸ்டாலின் -
  • சித்ரா
  • ஷிவானி - காயத்ரி

விருதுகள்

[தொகு]

இந்த தொடர் 3வது மற்றும் 4வது விஜய் தொலைக்காட்சி விருதுகள் மற்றும் கலாட்டா நட்சத்திரா விருதுகளில் சிறந்த தொடர், சிறந்த நாயகன் மற்றும் நாயகி, சிறந்த வில்லி, சிறந்த தாய், சிறந்த ஜோடி போன்ற 30க்கும் மேலுள்ள பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு 9 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்மறை கருத்துக்கள்

[தொகு]

இந்த தொடர் மற்றும் சரவணன் மீனாட்சி (பகுதி 1), சரவணன் மீனாட்சி (பகுதி 2) போல விறுவிறுப்பான கதை அமசத்தை கொள்ளவில்லை என்று பல சமூக வலயலங்களில் எதிர்மறை கருத்துக்களை பதிவிடுகின்றனர். இந்த தொடரில் நடித்த ரச்சித்தா மகாலட்சுமி பலர் சமூகவலை தளங்களில் கேளிக்கை செய்தனர் அதையும் எதிர்த்து 2வது முறையாகவும் இந்த தொடரில் கதாநாயகியா நடிக்கின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The popular TV show will see its season 3 take off starting tomorrow". www.dnaindia.com.
  2. "சரவணன் மீனாட்சி சந்திச்சிட்டாங்க... இனி ஏலேலோதான்..." tamil.filmibeat.com.
  3. "சரவணன் மீனாட்சி 3 : கபாலி படம் ரிலீஸ்... ரஜினிக்கு பாலபிஷேகம் செய்த சரவணன்". tamil.filmibeat.com.

வெளி இணைப்புகள்

[தொகு]
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 8:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி சரவணன் மீனாட்சி (பகுதி 3)
(18 ஜூலை 2016 - 17 ஆகஸ்ட் 2018)
அடுத்த நிகழ்ச்சி
சரவணன் மீனாட்சி (பகுதி 1&2)
(7 நவம்பர் 2011 – 21 அக்டோபர் 2013)
நெஞ்சம் மறப்பதில்லை
(20 ஆகஸ்ட் 2018 - 22 பிப்ரவரி 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணன்_மீனாட்சி_(பகுதி_3)&oldid=3239648" இலிருந்து மீள்விக்கப்பட்டது