சரவணன் மீனாட்சி
சரவணன் மீனாட்சி | |
---|---|
வகை | குடும்பம் காதல் நாடகத் தொடர் |
எழுத்து | திரைக்கதை பெரிய தம்பி |
இயக்கம் | அழகர் (1) ராம்குமார் தாஸ் (1) பிரவீன் பென்னட் (2-3) |
நடிப்பு | பருவம் 1 செந்தில் குமார் ஸ்ரீஜா பருவம் 2 கவின் ரச்சித்தா மகாலட்சுமி பிரேம் குமார் பருவம் 3 ரச்சித்தா மகாலட்சுமி ரியோ ராஜ் |
முகப்பு இசை | இளயவன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 1800 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சையத் அன்வர் அகமது |
ஒளிப்பதிவு | ஆர். சரவணன் |
தொகுப்பு | அச்சுதன் ஸ்ரீதர் |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | எவர்கிரீன் புரோடக்சன்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 7 நவம்பர் 2011 17 ஆகத்து 2018 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
சரவணன் மீனாட்சி என்பது 7 நவம்பர் 2011 முதல் 17 ஆகத்து 2018 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடர் எவர்கிரீன் புரோடக்சன்ஸ் சார்பில் சையத் அன்வர் அகமது என்பவர் தயாரிக்க முதல் பருவத்தை அழகர் என்பவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத்தை பிரவீன் பென்னட் என்பவரும் இயக்கியுள்ளனர்.
இந்த தொடரின் முதல் பருவத்தில் செந்தில் குமார் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[3] அதை தொடர்ந்து இரண்டாம் பருவத்தில் கவின், ரச்சித்தா மகாலட்சுமி மற்றும் பிரேம் குமார் ஆகியோரும் மூன்றாம் பருவத்தில் ரச்சித்தா மகாலட்சுமி மற்றும் ரியோ ராஜ் ஆகியோரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது.
இது 2012 ஆம் ஆண்டு 'மயிலாப்பூர் அகாடமி விருது' விழாவில் சிறந்த தொடர், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை போன்ற பிரிவுகளில் விருதுகள் வென்றது. அத்துடன் 'விஜய் தொலைக்காட்சி விருது' விழாவிலும் சிறந்த ஜோடி, சிறந்த நடிகர் போன்ற பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரின் பருவங்கள்
[தொகு]பருவங்கள் | அத்தியாயங்கள் | ஒளிபரப்பு | நேரம் | ||
---|---|---|---|---|---|
முதல் ஒளிபரப்பு | இறுதி ஒளிபரப்பு | ||||
1 | 520 | 7 நவம்பர் 2011 | 21 அக்டோபர் 2013 | திங்கள் - வெள்ளி இரவு 8:30 மணிக்கு | |
2 | 700 | 21 அக்டோபர் 2013 | 15 சூலை 2016 | திங்கள் -சனி இரவு 8:30 மணிக்கு | |
3 | 575 | 18 சூலை 2016 | 17 ஆகத்து 2018 | திங்கள் - வெள்ளி இரவு 8:30 மணிக்கு |
பருவங்கள்
[தொகு]பருவம் 1
[தொகு]இந்த தொடரின் முதல் பருவம் 7 நவம்பர் 2011 முதல் 21 அக்டோபர் 2013 ஆம் ஆண்டு வரை இரவு 8:30 மணிக்கு 520 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[4] இந்த தொடரில் சரவணன் (செந்தில் குமார்) மற்றும் மீனாட்சி (ஸ்ரீஜா சந்திரன்) ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சரவணன் சென்னையைச் சேர்ந்த ஒரு வசதியான குடும்ப பின்னணியை கொண்ட வானொலி தொகுப்பாளர்.
மீனாட்சி திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு சிறிய நகரப் பெண், ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இருவருக்கும் திருமணம் செய்வதற்காக இரு வீட்டாரும் நினைக்கின்றனர் ஆனால் அவர்களின் திருமணம் தடை பெறுகின்றது. இருப்பினும் சரவணனும் மீனாட்சியும் பார்த்த முதல் நொடியே ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதற்க்கு பிறகு இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் எப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது என்பதே கதை.
நடிகர்கள்
[தொகு]- செந்தில் குமார் - சரவணன்
- ஸ்ரீஜா சந்திரன் - மீனாட்சி
- ஸ்டாலின் - தமிழரசன்
- ரம்யா - சௌந்தர்யா
- ராஜசேகர் - ராஜசேகர்
- குயிலி - சாரதா ராஜசேகர்
- சுப்பிரமணியம் - வைத்தியநாதன்
- விஜி கண்ணன் - வள்ளி வைத்தியநாதன்
- திவ்யா - யாமினி
- சுசித்ரா - சுதா
- கவின் - முருகன்
- சத்யா சாய் கிருஷ்ணன் (2011) → ஷாமிலி சுகுமார் (2012-2013) - ரம்யா ஜீவா
- சையத் அன்வர் அகமது - ஜீவா
- லட்சுமி - ஆச்சி
- சங்கீதா - அமுதா (2011-2012)
- ராஜ்குமார் - சுப்பிரமணி (2011-2012)
- மனோஜ் குமார் - அர்ஜுன் (2012)
- மிர்ச்சி சா - சா
- சூசன் ஜார்ஜ் - மல்லிகா
- காயத்ரி - அகிலாண்டேஸ்வரி (2012)
- கிருத்திகா லடூ 2012)
- சுபாஷினி கண்ணன் 2012)
பருவம் 2
[தொகு]இந்த தொடரின் இரண்டாம் பருவம் 21 அக்டோபர் 2013 முதல் 15 சூலை 2016 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த தொடரின் கதை சரவணன் மற்றும் மீனாட்ச்சியின் மகன் சக்தி சரவணன் கனடாவில் இருந்து தனது குடும்ப உறுப்பினரை சந்திக்க வருகின்றார் அங்கு தனது தாய் மாமன் தமிழின் மகளான தங்க மீனாட்சியை பார்த்ததும் காதல் செய்கின்றான். நாட்கள் போக போக இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதே தருணம் மீனாட்சியை காதலைக்கும் முறை பையன் சரவண பெருமாள் இந்த முக்கோண காதல் கதையில் சரத்ப சூழ்நிலையால் தங்கமீனாட்சி சரவண பெருமாளை திருமணம் செய்கிறாள். திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமண வாழ்க்கை பல பிரச்சனைகளுடன் எப்படி செல்கின்றது என்பது தான் கதை.
நடிகர்கள்
[தொகு]- ரச்சித்தா மகாலட்சுமி - தங்க மீனாட்சி
- கவின் - சரவண பெருமாள் என்கிற வேட்டையன்
- இர்பான் (2013-2014) → பிரேம் குமார் (2014) - சக்தி சரவணன்
- சித்ரா - கலையரசி
- நந்தினி - ரேவதி
- தீபா நரேந்திரன் - சுதா
- குமரமூர்த்தி - டக்ளஸ்
- அழகேஷ் - தமிழ்
- லட்சுமி வாசுதேவன் - சௌந்தர்யா வைதீஸ்வரன்
- சித்தார்த் - வைதீஸ்வரன்
- திவ்யா பிரபு (2013-2015) → பவித்ரா ஜனனி (2015-2016) - ஜனனி / துளசி (இரண்டை வேடம்)
- கார்த்திக் - பாண்டி
- ராஜசேகர் - ராஜசேகர்
- குயிலி - சாரதா ராஜசேகர்
- ராகவன் - அருணாச்சலம்
- பிரியா - பிரியா (2013-2014)
- இன்பா - இன்பா (2014)
- சியாம் - கெளதம் (2014
பருவம் 3
[தொகு]இந்த தொடரின் மூன்றாம் பருவம் 18 சூலை 2016 முதல் 17 ஆகத்து 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த தொடரின் கதை காதல், குடும்பம், பேய், பழிவாங்குதல், திகில் போன்ற பல கதை அம்சங்களை கொண்டுள்ளது.[5][6][7]
நடிகர்கள்
[தொகு]- ரச்சித்தா மகாலட்சுமி - மீனாட்சி
- ரியோ ராஜ் - சரவணன்
- சங்கரபாண்டி - சங்கரபாண்டி
- காயத்ரி - முத்தழகு
- சமந்தா . சத்யவதனி
- ராஜ்குமார் - சக்தி வேலு
- செந்தில் குமாரி - தேவயானி
- ரவி சந்திரன் - வேலுச்சாமி
- தீபா - பழனியம்மாள்
- மீனாட்சி - தங்கம் (முத்தழகின் தங்கை) (2018)
- விஷ்ணு - கதிர்வேல் சரவணன் (2018)
மதிப்பீடுகள்
[தொகு]கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2013 | 4.3% | 5.8% |
2014 | 3.4% | 5.3% |
2015 | 4.2% | 6.9% |
2016 | 3.5% | 5.4% |
2017 | 3.7% | 5.9% |
2018 | 3.2% | 4.9% |
மறு ஆக்கம்
[தொகு]இந்த தொடரின் முதல் பருவம் தெலுங்கு மொழியில் 'ராஜா ராணி' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் 'ஜஸ்ட் மாத் மாதல்லி' என்ற பெயரிலும், 2017 ஆம் ஆண்டு வங்காள மொழியில் 'ப்ரேமார் கஹினி' என்ற பெயரிலும் ஒளிபரப்பானது.
மொழி | தலைப்பு | தொலைக்காட்சி | ஒளிபரப்பப்பட்டது | அத்யாயங்கள் |
---|---|---|---|---|
தெலுங்கு | ராஜா ராணி | ஸ்டார் மா | 6 ஜூலை 2016 - 3 செப்டம்பர் 2016 | 73 |
கன்னடம் | ஜஸ்ட் மாத் மாதல்லி | ஸ்டார் சுவர்ணா | 15 ஆகஸ்ட் 2016 - 21 ஜனவரி 2017 | 138 |
வங்காளம் | ப்ரீமர் கஹினி | ஸ்டார் ஜல்சா | 20 மார்ச் 2017 - 3 டிசம்பர் 2017 | 182 |
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் முதல் பருவம் இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "After 7 years Saravanan Meenatchi coming to an end – Times of India". The Times of India. https://m.timesofindia.com/tv/news/tamil/after-7-years-saravanan-meenatchi-coming-to-an-end/articleshow/65307541.cms.
- ↑ "Saravanan Meenatchi coming to an end after 7 years, Rachita Mahalakshmi breaks down into tears" (in en-US). Pinkvilla. https://regional.pinkvilla.com/tamil/news/saravanan-meenatchi-coming-end-7-years-rachita-mahalakshmi-breaks-tears/.
- ↑ "A gifted multi-tasker!". The New Indian Express. 14 September 2011. http://newindianexpress.com/entertainment/tamil/article362320.ece?service=print.
- ↑ "Celebrating a reel wedding...". The Hindu. 15 June 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3529686.ece?css=print.
- ↑ "The popular TV show will see its season 3 take off starting tomorrow". www.dnaindia.com.
- ↑ "சரவணன் மீனாட்சி சந்திச்சிட்டாங்க... இனி ஏலேலோதான்..." tamil.filmibeat.com.
- ↑ "சரவணன் மீனாட்சி 3 : கபாலி படம் ரிலீஸ்... ரஜினிக்கு பாலபிஷேகம் செய்த சரவணன்". tamil.filmibeat.com.
வெளி இணைப்புகள்
[தொகு]- விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2011 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2018 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தொலைக்காட்சி பருவங்கள்