கோயம்புத்தூர் மாநகர மேயர்கள் பட்டியல்
கோயம்புத்தூர் மேயர் | |
---|---|
வாழுமிடம் | வெங்கடசாமி சாலை கிழக்கு, ஆர். எஸ். புரம் |
நியமிப்பவர் | கோயமுத்தூரில் இருந்து தேர்ந்தெடுக்கபடுபவர் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | வி. கோபாலகிருஷ்ணன் |
உருவாக்கம் | 1996 |
இணையதளம் | Mayor of Coimbatore |
கோயம்புத்தூர் மேயர் (List of mayors of Coimbatore) என்பவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரத்தின் முதல் குடிமகன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியான இவர், கோயம்புத்தூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் 99 பேருடன் நகரின் தலைமை நிர்வாகியாக உள்ளார். [1]
கோயம்புத்தூரின் மேயராக தற்போது 4 மார்ச் 2022 முதல் ஏ. கல்பனா உள்ளார். [2] [3]
முன்பு மேயர் நேரடியாக வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவந்தனர். மாமன்ற உறுப்பினர்களிடையே நடக்கும் மறைமுகத் தேர்தலில் மேயர் தேர்ந்தெடுக்க ஏதுவாக அந்தமுறை 2006ல் இது தற்காலிகமாக நீக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 2011 இல் நேரடித் தேர்தல் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டது. [4] ஆனால் தற்போது மீண்டும் மாமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் வழியாக மேயர் தேர்ந்தெடுக்கப்படும் முறை 2022 ஆம் ஆண்டு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேயரின் உத்தியோகபூர்வ அலுவலகம் ஆர். எஸ். புரத்தில் உள்ள வெங்கடசாமி சாலையில் கிழக்கு பகுதியில் உள்ளது.
மேயர்களின் பட்டியல்
[தொகு]முதல் மேயர் 1996 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 நிலவரப்படி, ஆறு மேயர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். அவர்களில் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து ஒருவர், அ.தி.மு.க.விலிருந்து மூவர், இ.தே.கா.விலிருந்து ஒருவர், தி.மு.க.விலிருந்து ஒருவர் என தேர்ந்தெடுக்கப்பட்டுளனர்.
ஆண்டுகள் | மேயர் | அரசியல் கட்சி | குறிப்புகள் |
---|---|---|---|
1996–2001 | வி. கோபாலகிருஷ்ணன் | தமிழ் மாநில காங்கிரசு | கோவையின் முதல் மேயர் |
2001–2006 | தா. மலரவன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
2006-2011 | ஆர். வெங்கடாசலம் | இந்திய தேசிய காங்கிரசு | மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் |
2011-2014 | செ. மா. வேலுச்சாமி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
2014-2016 | கணபதி பி. ராஜ் குமார் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
2022-தற்போது | ஏ. கல்பனா | திராவிட முன்னேற்றக் கழகம் |
வெளி இணைப்புகள்
[தொகு]- கோவை மேயர் பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
[தொகு]- ↑ "S.M. Velusamy is Coimbatore Mayor". 21 October 2011. http://www.thehindu.com/news/cities/Coimbatore/sm-velusamy-is-coimbatore-mayor/article2561985.ece. பார்த்த நாள்: 2014-01-23.
- ↑ "A. Kalpana set to be Coimbatore's first woman Mayor". The Hindu. 3 March 2022.
- ↑ "A.Kalpana is Kovai Mayor". The Times of India. 4 March 2022.
- ↑ "In next local poll, mayors will be elected directly by people". 21 July 2011 இம் மூலத்தில் இருந்து 2014-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202164702/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-21/chennai/29799406_1_mayor-election-local-body-direct-elections. பார்த்த நாள்: 2014-01-24.