கோபேசுவர் கோவில்
கோபேசுவர் கோவில் | |
---|---|
கித்ராபூர் கோபேசுவர் கோவில் | |
மகாராட்டிர மாநித்தில் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராட்டிரம் |
மாவட்டம்: | கோலாப்பூர், இந்தியா |
ஆள்கூறுகள்: | 16°42′00″N 74°41′5″E / 16.70000°N 74.68472°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | சிலகார மன்னன் கந்தராதித்தியன் |
கோபேசுவர் கோயில் (Kopeshwar Temple) (கோபமான சிவன்) என்பது மகாராட்டிர மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கித்ராபூரில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவில்.[1] இந்த கோவிலை சாங்கிலியிலிருந்தும் அணுகலாம். இது கி.பி.1109 மற்றும் 1178 க்கு இடையில் 12 ஆம் நூற்றாண்டில் சிலகார மன்னர் கந்தராதித்தியனால் கட்டப்பட்டது. இது கோலாப்பூரின் கிழக்கே, கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சிலகாரர்கள் சமணத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் பல்வேறு இந்துக் கோயில்களைக் கட்டி, புதுப்பித்து, அனைத்து மதங்களின் மீதும் அவர்கள் கொண்ட மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தினர். .
கட்டமைப்பு
[தொகு]முழு ஆலயமும் சொர்க்க மண்டபம், சபாமண்டபம், கர்ப்ப கிருகம், அந்தரால மண்டபம்ம் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சொர்க்க மண்டபம் திறந்த மேற்புறத்துடன் கூடிய முன்மண்டபத்தைக் கொண்டுள்ளது. கருவறை கூம்பு வடிவமாக உள்ளது. வெளிப்புறத்தில் தெய்வங்கள் மற்றும் மதச்சார்பற்ற உருவங்களின் அற்புதமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. யானை சிலைகள் கோயிலின் எடையை அடிவாரத்தில் தாங்குவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில், விஷ்ணு சிலையும் சிவலிங்கமும் வடக்கு நோக்கி இருக்கிறது. ஆனால் தனியே நந்தி இல்லை. சொர்க்க மண்டபம், மண்டபம், பழைய தூண்கள், கடவுள்களின் சிற்பங்கள் மற்றும் ஆண் மற்றும் பெண் கலைஞர்களின் பல்வேறு தோற்றங்கள் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. பொருத்தமற்ற வேலைப்பாடுகளுடன் கூடிய உச்சி அரை வட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் முழுமையான 'சிவலீலை' செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான மற்றும் கலைநயமிக்க கோபேசுவர கோயில், பழங்கால சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காடாகும்.
வரலாறு
[தொகு]தற்போதைய கோயில் மகாராட்டிராவை பூர்வீகமாகக் கொண்ட சிலகார மன்னர்களால் கட்டப்பட்டது. அவர்கள் இராஷ்டிரகூடர்களின் இதன் பெயர் நகரத்தின் பண்டைய பெயரான "கொப்பம்" என்பதிலிருந்தும் தோன்றியிருக்கலாம். நகரம் இரண்டு பெரிய போர்களைக் கண்டது. முதலாவது கி.பி. 1058 இல் சாளுக்கிய மன்னர் அகவமல்லனுக்கும் சோழ மன்னன் இராசேந்திரனுக்கும் இடையே நடந்தது. இராசேந்திர சோழனின் முடிசூட்டு விழா போர்க்களத்தில் நடந்தது.
இரண்டாவது போர் சிலகார அரசர் இரண்டாம் போஜனுக்கும் தேவகிரி யாதவ மன்னர் முதலாம் சிங்கனுக்கும் இடையே நடந்தது. போரில் போஜன் யாதவர்களால் கைப்பற்றப்பட்டு பன்கலா கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். இந்த நிகழ்வு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கி.பி. 1213 தேதியிட்ட கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போர் சிலகாரர்களின் கோலாப்பூர் கிளையின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்தக் கோயிலின் உள்ளேயும் வெளியேயும் சுமார் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு கல்வெட்டுகள் மட்டுமே தற்போது நல்ல நிலையில் உள்ளன. இந்த கல்வெட்டுகள் சில மன்னர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கல்வெட்டுகளில் ஒன்றைத் தவிர அனைத்து கல்வெட்டுகளும் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளன. சமசுகிருத மொழியில் உள்ள ஒரே தேவநாகரி கல்வெட்டு இரண்டாம் சிங்கன் காலத்தைச் சேர்ந்தது. இது கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு அருகில் வெளிப்புற சுவரில் அமைந்துள்ளது.
சொர்க்க மண்டபம்
[தொகு]சொர்க்க மண்டபம், ஒரு வட்ட திறப்புடன் வானத்தை நோக்கியவாறு திறந்த அமைப்புடன் அமைந்துள்ளது. மண்டபத்தைச் சுற்றி, பிள்ளையார், கார்த்திகேயன், குபேரன், யமன், இந்திரன் போன்றவர்களின் சிலைகளும் மயில், எலி, யானை போன்ற விலங்குகளுடன் அழகாக செதுக்கப்பட்ட சிலைகளை நாம் காணலாம். சபா மண்டபத்தின் நுழைவாயிலின் இடது பக்க சுவரில் பிரம்மாவின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. மையத்தில், கர்ப்ப கிருகத்தில் அமைந்துள்ள கோபேசுவர் சிவலிங்கத்தைக் காணலாம். மேலும், இலிங்கத்தின் வலது பக்க சுவரை நோக்கி விஷ்ணு சிலையைக் காணலாம். ஒரே பார்வையில் நாம் 'பிரம்மா, சிவன், விஷ்ணு' ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமையப்பட்டுள்ளது.. கோயிலின் தெற்கு கதவுக்கு கிழக்கே வைக்கப்பட்டுள்ள ஒரு கல் பீடத்தில் சமசுகிருதத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது, இது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. கி.பி. 1136 ஆம் ஆண்டு யாதவ வம்சத்தைச் சேர்ந்த அரசன் சிங்கதேவன் என்பவரால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்
[தொகு]சாங்கிலி 36 கி.மீ தொலைவிலும், கோலாப்பூர் 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது
அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம்
[தொகு]சாங்லி தொடர் வண்டி நிலையம் 36 கி.மீ தொலைவில் உள்ளது.
புகைப்படங்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Kanhere, Gopal Krishna. The Temples of Maharashtra. Maharashtra Information Centre 1989 p. 105 asif
- Deglurkar, G. B. "Koppeshwar (Khidrapur) Mandir Ani Moorti". 2016. Snehal Prakashan, Pune.