குருவாயூர்
குருவாயூர் | |
---|---|
அடைபெயர்(கள்): தெற்கின் துவாரகை | |
குருவாயூர், கேரளா | |
ஆள்கூறுகள்: 10°35′41″N 76°02′13″E / 10.5946°N 76.0369°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.41 km2 (4.79 sq mi) |
ஏற்றம் | 24.86 m (81.56 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,510 |
• அடர்த்தி | 1,700/km2 (4,300/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் சுட்டு எண் | 680101 |
தொலைபேசி குறியீடு எண் | +91487xxxxxxx |
வாகனப் பதிவு | KL-46 |
தட்பவெப்பம் | Am/Aw (Köppen) |
சராசரி கோடை வெப்பம் | 35 °C (95 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 20 °C (68 °F) |
குருவாயூர் (Guruvayur) என்பது இந்தியா தீபகற்பத்தில் கேரளா மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மற்றும் இந்துக்களின் யாத்திரைத் தலம் ஆகும். இவ்வூரில் தென்னகத்தின் துவாரகை எனப்படும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ளது. குருவாயூர், திருவனந்தபுரத்திற்கு வடக்கே 292 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து வடமேற்கே 28 கிலோ மீட்டர் தொலைவிலும், கொச்சிக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவிலும், கோழிக்கோட்டிற்கு தெற்கே 90 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22 வார்டுகள் கொண்ட குருவாயூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 20,510 ஆகும். பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 1,113 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1878 (9.16%) ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 96.4% ஆகும். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 438 மற்றும் 52 ஆகவுள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 73.76%, இசுலாமியர்கள் 15.38%, கிறித்தவர்கள் 10.04% மற்றவர்கள் 0.81% ஆகவுள்ளனர்.[1] [2]
போக்குவரத்து
[தொகு]புகழ் பெற்றவர்கள்
[தொகு]- நாராயணீயம் இயற்றிய மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி
- குருவாயூர் துரை - மிருதங்க வித்வான்
- குருவாயூர் கோயில் யானை கேசவன்
- குருவாயூர் கோயில் யானை பத்மநாபன்
- குருவாயூர் கோயில் யானை வலிய கேசவன்
இதனையும் காண்க
[தொகு]தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், குருவாயூர், கேரளா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31.3 (88.3) |
32.5 (90.5) |
34.8 (94.6) |
35.1 (95.2) |
33.9 (93) |
29.2 (84.6) |
28.3 (82.9) |
28.6 (83.5) |
29.5 (85.1) |
30.4 (86.7) |
31.2 (88.2) |
31.8 (89.2) |
31.38 (88.49) |
தாழ் சராசரி °C (°F) | 20.6 (69.1) |
22.3 (72.1) |
24.7 (76.5) |
25.7 (78.3) |
25.3 (77.5) |
23.7 (74.7) |
23.0 (73.4) |
23.5 (74.3) |
23.6 (74.5) |
23.7 (74.7) |
23.5 (74.3) |
21.2 (70.2) |
23.4 (74.12) |
பொழிவு mm (inches) | 2 (0.08) |
13 (0.51) |
21 (0.83) |
98 (3.86) |
291 (11.46) |
711 (27.99) |
743 (29.25) |
411 (16.18) |
250 (9.84) |
275 (10.83) |
142 (5.59) |
26 (1.02) |
2,983 (117.44) |
ஆதாரம்: Climate-Data.org[3] |
கல்வி நிலையங்கள்
[தொகு]- சிறீ கிருஷ்ணா கல்லூரி
- லிட்டில் பிளவர் கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Guruvayoor Population Census 2011
- ↑ Guruvayoor Population, Religion, Caste, Working Data
- ↑ "CLIMATE: GURUVAYUR", Climate-Data.org. Web: [1].