குருவாயூர் பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருவாயூர் பத்மநாபன்
Guruvayoor padmanaban1.JPG
குருவாயூர் பத்மநாபன்
இனம்ஆசிய யானை
பால்ஆண்
பிறப்பு1940கள்
இந்தியா
இறப்பு26பெப்ரவரி 2020
குருவாயூர்
நாடுஇந்தியா
அறியப்படுவதற்கான
 காரணம்
திரிச்சூர் பூரம், பிற பூரங்கள்
Predecessorகுருவாயூர் கேசவன்
உரிமையாளர்குருவாயூர் தேவஸ்வம்
உயரம்2.98 m (9 ft 9 in)
Named afterபத்மநாபன்

குருவாயூர் பத்மநாபன் (Guruvayur Padmanabhan) கஜரத்தினம் என்று அழைக்கப்படும் குருவாயூர் பத்மநாபன் என்பது1976இல் புகழ்பெற்ற குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலின் குருவாயூர் கேசவன் என்ற யானை இறந்த பிறகு யானைகளின் தலைவராக இருந்தது. குருவாயூர் தேவஸ்தானத்தைச் சேர்ந்த பத்மநாபன், மகாவிஷ்ணுவின் சிலையை 66 ஆண்டுகள் சுமந்து சென்றுள்ளது.[1] இந்த யானை நிலம்பூர் காடுகளில் பிறந்தது. அங்கிருந்து ஒற்றப்பாலம் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு பாலக்காட்டின் ஆலத்தூருக்குக் கொண்டு வரப்பட்டது. 1954 இல் இதன் 14 வயதில் குருவாயூர் கோவிலுக்கு வழங்கப்பட்டது. திருச்சூர் பூரத்தில் தவறாமல் கலந்து கொண்ட இந்த யானை 90களின் இறுதியில்திருவம்பாடியில் இரவைக் கழிக்கும். [2]

இந்த யானை, கேரளாவில் ஒரு பண்டிகைக்கு ஒரு யானை பெறக்கூடிய அதிக தொகையைப் பெறுவதற்கும் பெயர் பெற்றது. [3] நெம்மரா கிராமத்தில் ஏப்ரல் 2004 நடைபெற்ற வல்லங்கி திருவிழாவில் இந்த யானை கலந்துகொள்ள (வல்லங்கி தேசம்) ₹2,22,222 தொகையை பெற்றது.[4] 26 பிப்ரவரி 2020 அன்று, 80 வயதில், பத்மநாபன் வயது தொடர்பான பிரச்சினைகளால் இறந்தது. [5]

பட்டங்கள்[தொகு]

  • கஜரத்னம்: குருவாயூர் தேவஸ்வம் 2002இல் பத்மநாபனுக்கு கஜரத்னம் பட்டம் வழங்கி கௌரவித்தது. [6]
  • கஜ சக்கரவர்த்தி: ஜனவரி 11, 2009 அன்று, கேரள சபாயாகர் திரு. கே ராதாகிருஷ்ணன் என்பவரால் பேரரசர் கஜா என்ற பெயருடன் பத்மநாபன் கவுரவிக்கப்பட்டார். விழாவில் கலந்துகொண்ட அப்போதைய குருவாயூர் தேவஸ்வம் தலைவர் தொட்டத்தில் இரவீந்திரன் பேரவைத் தலைவரிமிருந்து இந்தப் பட்டத்தைப் பெற்றார்.[7]

மேற்கோள்கள்[தொகு]