குகுசீலி
குகுசீலி | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆகத்து திங்களில் ஹோ ஸீல் | |||||||||||
சீனப் பெயர் | |||||||||||
எளிய சீனம் | 可可西里 | ||||||||||
சீன எழுத்துமுறை | 可可西里 | ||||||||||
சொல் விளக்கம் | நீல மலைமுகடு (மங்கோலியனில்) | ||||||||||
| |||||||||||
Tibetan-origin name | |||||||||||
Simplified Chinese | 阿卿贡嘉 | ||||||||||
Traditional Chinese | 阿卿貢嘉 | ||||||||||
Literal meaning | பத்தாயிரம் மலைகளின் தலைவன் | ||||||||||
| |||||||||||
Mongolian name | |||||||||||
Mongolian | Хөх шил | ||||||||||
Tibetan name | |||||||||||
Tibetan | ཧོ་ཧོ་ཞི་ལི ཨ་ཆེན་གངས་རྒྱལ | ||||||||||
|
குகுசீலி அல்லது குகுஸீலி அல்லது கெகெஸீலி அல்லது ஹோ ஸீல் ((சீனம்: 可可西里; பின்யின்: Kěkěxīlǐ மங்கோலியன் நீல மலைமுகடு, ((சீனம்: 阿卿贡嘉; பின்யின்: Ā qīng gòng jiā) திபெத்தியம் பத்தாயிரம் மலைகளின் தலைவன், ஆங்கில மொழி: Hoh Xil or Kekexili) என்பது சீனாவில் சிங்காய்-திபெத் மேட்டுநிலத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரு ஒதுக்குப்புறமான பகுதி. சீனாவில் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதியான இது உலகின் மூன்றாவது குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதியாக உள்ளது.
புவியியல்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து 4,800 மீட்டர் சராசரி உயரத்தில் 83,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டு தங்குலு மற்றும் குன்லுன் மலைத்தொடர்களிடையே கிழக்கு-மேற்காக நெடுவரையில் சீனாவின் தென்மேற்கு எல்லைப் பகுதியில் திபெத் தன்னாட்சிப் பகுதி, வடமேற்கு சீனாவின் கின்ஹாய் பகுதி ஸிண்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் வரை நீண்டுள்ளது. ஹோ ஸீலின் தென்கிழக்கு பகுதியில் பாயும் சுமர் ஆறு வடியுமிடம் மஞ்சள் ஆற்றின் தலையாய ஊற்றுக்களில் ஒன்றாகும். இப்பகுதியிலிருக்கும் ஏனைய பல ஆறுகள் கடலில் கலக்காமல் இங்குள்ள பல ஏரிகளில் வடிகின்றன. எனவே ஹோ ஸீலை ஏரிகள் மாவட்டம் என நீரியல் நிபுணர்கள் அழைக்கின்றனர். [1] 1995ம் ஆண்டு சீன நாட்டின் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதி என இங்கு 4,600 மீட்டர் சராசரி உயரத்திலிருக்கும் 45,000 சதுர கிலோ மீட்டர் பரப்பு வரையறுக்கப்பட்டது
புவியமைப்பியல்
[தொகு]ஹோ ஸீல் பல எரிமலைகளைக் கொண்ட பகுதி. ஹவாயில் இருப்பதைப் போன்ற எரிமலைகள் இந்த பகுதியில் உள்ளன. இப்பகுதியைச் சுற்றியுள்ள பெயரிடப்படாத எரிமலைப் புலங்களில் புத்துயிர் ஊழிக்கால (Cenozoic ) எரிமலைகள் பல உள்ளன. 300 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பமாவோச்சீயோங்ஸோங் என்ற எரிமலை உச்சியின் வடகிழக்கில் கச்சிதமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள மாளிகை உள்ளது. மேலும் நாலாம்பகுதியுக (Quaternary ) காலத்தைச் சேர்ந்த ஏரிப்படிமங்களின் மேலோடிய எரிமலைக்குழம்பின் படிமங்களும் உள்ளன. சீயாங்பாசீயன் என்ற எரிமலை குன்லுன் மலைத்தொடரின் தெற்கு எல்லையில் பரவியுள்ளது. 1973 இல் எடுக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தின்படி எரிமலை வெடிப்பினால் உண்டானது என எண்ணப்பட்ட குகுசீலி கால்டிரா என்ற எரிமலையிலுள்ள ஒரு கூம்பு இப்பொழுது செயல்நிலையில் இல்லை என்று கருதப்படுகின்றது.[2]
வனவளம்
[தொகு]கடுமையான காலநிலை இருந்தபோதிலும் ஹோ ஸீல் பகுதியில் 230-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றுள் காட்டு யாக், காட்டுக் கழுதை, வெள்ளை உதட்டு மான், பழுப்பு கரடி அழிந்து வரும் திபெத்திய மான் அல்லது சிரு என 20 வகையான காட்டு விலங்குகள் சீன அரசு பாதுகாப்பில் இருக்கின்றன, பிராந்தியத்தின் பழுப்புநிறக் கரடிகளின் தலையாய உணவு இப்பகுதியில் ஏராளமாக வாழும் மேட்டுநிலத்தின் பிகா எனப்படும் ஒரு சிறிய கொறிணி வகை விலங்கு. யாக் மற்றும் மான்களையும் கரடிகள் உண்டு வாழும்.[3] குறைந்த அளவிலேயே அறியப்பட்ட இந்த பிராந்தியமும், அவ்வாறேயான திபெத்திய மானினமும் 2004 ல் குகுசீலி படம் வெளிவந்தபின் மாற்றம் கண்டன.
போக்குவரத்து
[தொகு]பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதியின் கிழக்கு எல்லை நெடுகிலும் சிங்ஸாங் தொடருந்தும் சீனா தேசிய நெடுஞ்சாலை 109ம் செல்கின்றது. தற்போது உலகின் மிக உயர்ந்த தொடருந்து சுரங்கப்பாதையான, கடல் மட்டத்திலிருந்து 4905 மீட்டர் உயரத்தில் நுழைவாயில்களும் 1338 மீ நீளமும் கொண்ட, ஃபெங்குஷான் சுரங்கப்பாதை இப்பகுதியில் உள்ளது. [4]
வெளியிணைப்புகள்
[தொகு]- சிருவைக் காப்பாற்றுங்கள் பரணிடப்பட்டது 2005-02-04 at the வந்தவழி இயந்திரம்
- enorth.comல் கெகெஸீலி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ஹோ ஸீலுக்கு ஒரு பயணம்--ஒரு சுற்றுச்சூழல் தன்னார்வலரின் ஒரு நாட்குறிப்பேடு பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zheng, Mianping (1997), An introduction to saline lakes on the Qinghai-Tibet Plateau, Volume 76 of Monographiae biologicae, Springer, p. 21, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7923-4098-1
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-08. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
- ↑ Xu Aichun, Jiang Zhigang, Li Chunwang, Guo Jixun, Wu Guosheng, Cai Ping, "Summer Food Habits of Brown Bears in Kekexili Nature Reserve, Qinghai: Tibetan Plateau, China". Ursus, Vol. 17, No. 2 (2006), pp. 132-137
- ↑ 风火山隧道 (ஃபெங்குஷான் குடைவழி)