கெக்கெசிலி (மவுண்டன் பேற்றோல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெகெஸீலி : மவுண்டன் பேட்றோல்
கெகெஸீலி - திரைப்பட சுவரொட்டி
இயக்கம்லு ச்வான்
தயாரிப்புடு யாங்
வாங் ழான்லெய்
கதைலு ச்வான்
இசைஸாய் லாவ்
நடிப்புடுவோபுஜியே
ழாங் லை
கீ லியாங்
ழாவோ ஹுவெயிங்
மா ழான்லின்
ஒளிப்பதிவுகா யு
விநியோகம்ஹூவாயி சகோதரர்கள்
வெளியீடுஅக்டோபர் 1, 2004 (2004-10-01)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுசீனா
மொழிமாண்டரின் மற்றும் திபெத்திய
ஆக்கச்செலவுUS$1.2 மில்லியன் (est.)

கெகெஸீலி: மவுண்டன் பேட்றோல் (Kekexili: Mountain Patrol) (சீனம்: 可可西里பின்யின்: Kěkěxīlǐ) (திபெத்திய மொழியில் ཨ་ཆེན་གངས་རྒྱལ།) 1990களில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சீன இயக்குனர் லு ச்வான் இயக்கி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கருப்புமான்களை அதன் தோலுக்காக வேட்டையாடும் கும்பலை திபத்திய உள்ளூர் குழு தேடியலைந்து ஒடுக்குவதே இதன் கதை. இது ஓர் ஆவணப்படத்தைப் போல எடுக்கப்பட்ட திரைப்படம். இதன் இசையமைப்பாளர் ஸாய் லாவ். நடிகர்களாக நடித்தவர்கள் டுவோபுஜியே, ழாங் லை, கீ லியாங், ழாவோ ஹுவெயிங், மா ழான்லின் மற்றும் உள்ளூர் திபெத்திய மக்கள். பல்வேறு விருதுகளை வாங்கி உலகம் முழுவதும் பல இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்த திரைப்படம். சீன அரசு இத்திரைப்படத்திற்குப் பின்னர் கருப்புமான்களைக் கொல்பவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கத் தொடங்கியது.[1]

தயாரிப்பு விபரம்[தொகு]

கெகெஸீலி எனும் இடத்தில் மாண்டரின் மற்றும் திபெத்திய மொழிகளில் படமாக்கப்பட்டது. கொலம்பியா பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ் மற்றும் கேனன் ஆகிய நிறுவனங்கள் இத்திரைப்பட தயாரிப்பில் உதவி செய்தனர். படமாக்கும் போது இயக்குனர் உட்பட திரைப்படக் குழுவினர் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கொலம்பியா பிக்சர்ஸ்ஸின் தயாரிப்பு மேலாளர் அலெக்ஸ் கிராஃப் படப்பிடிப்புத் தளத்தில் வாகன விபத்தில் மரணமடைந்தார்.

விருதுகள்[தொகு]

தங்கக் குதிரை திரைப்பட விழா (2004)[தொகு]

  • சிறந்த திரைப்படம்
  • சிறந்த ஒளிப்பதிவு
  • சிறந்த இயக்குனர் (பரிந்துரைக்கப்பட்டது)
  • சிறந்த நடிகர் (பரிந்துரைக்கப்பட்டது)
  • சிறந்த அசல் திரைக்கதை (பரிந்துரைக்கப்பட்டது)

டோக்கியோ சர்வதேச திரைப்படவிழா(2004)[தொகு]

  • சிறப்பு நடுவர்குழு விருது
  • கிராண்ட் பிரீ (பரிந்துரைக்கப்பட்டது)

தங்கச் சேவல் விருது (2005)[தொகு]

  • சிறந்த திரைப்படம்

பெர்லின் சர்வதேச திரைப்பட விழா (2005)[தொகு]

  • டான் குவிசோட் விருது

சண்டேன்ஸ் திரைப்பட விழா (2005)[தொகு]

  • உயரிய நடுவர்குழு விருது (பரிந்துரைக்கப்பட்டது)

ஹூவாபியோ திரைப்பட விருதுகள் (2005)[தொகு]

  • சிறந்த திரைப்படம்
  • சிறந்த இயக்குனர்

ஹாங்காங் திரைப்பட விருதுகள் (2006)[தொகு]

  • சிறந்த ஆசியப் படம்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. End credit citation from the film.