கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்
Appearance
கலை இயக்கங்கள் |
---|
கலை இயக்கம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியுள், ஒரு குறிப்பிட்ட கலைஞர் குழுவால் பின்பற்றப்படுகின்ற, ஒரு குறிப்பிட்ட பொதுத் தத்துவத்தை அல்லது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, கலையின் ஒரு போக்கு அல்லது பாணியாகும். கலை இயக்கங்கள் சிறப்பாக நவீன கலைகள் (Modern Art) தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கே தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு இயக்கமும், ஒரு புதிய முழு வளர்ச்சி பெற்ற குழுவாகக் கருதப்பட்டது. individualism மற்றும் பன்முகத் தன்மை நிலை பெற்றிருக்கும் தற்காலக் கலையில் இயக்கங்கள் ஏறத்தாழ முற்றாகவே மறைந்துவிட்டன எனலாம்.[1][2][3]
கலை இயக்கங்கள் மேலைத்தேசக் கலைகளுக்கேயுரிய தோற்றப்பாடாகவே பெரிதும் காணப்படுகின்றன. இச் சொல், காண்போர் கலை, கட்டிடக்கலை சிலசமயம் இலக்கியம் ஆகியவற்றின் போக்குகள் தொடர்பிலேயே பயன்படுத்தப் படுகின்றது.
கலை இயக்கங்களின் பட்டியல்
[தொகு]- பண்பியல் ஓவியம் (Abstract art)
- பண்பியல் வெளிப்பாட்டுவாதம் (Abstract expressionism)
- Action painting
- எதிர்-யதார்த்தவியம் (Anti-realism)
- அராபெஸ்க் (Arabesque)
- ஆர்ட் டெக்கோ
- ஆர்ட் நூவோ (Art Nouveau)
- ஆர்ட்டே பொவேரா (Arte Povera)
- கலை மற்றும் கைப்பணி இயக்கம் (Arts and Crafts Movement)
- குப்பைத்தொட்டி சிந்தனைக்குழு (Ashcan School)
- பார்பிசோன் சிந்தனைக்குழு (Barbizon school)
- பரோக் (Baroque)
- பௌஹவுஸ் (Bauhaus)
- நிறப்புலம் (Colour Field)
- கருத்துரு ஓவியம் (Conceptual art)
- கட்டமைப்புவாதம் (Constructivism)
- கியூபிசம் (Cubism)
- டாடாயியம் (Dadaism)
- டி ஸ்டெயில் (De Stijl) (also know as Neo Plasticism)
- கட்டவிழ்ப்பியம் (Deconstructivism)
- வெளிப்பாட்டியம் (Expressionism)
- விசித்திர யதார்த்தவியம் (Fantastic realism)
- போவியம் (Fauvism)
- உருவோவியம் (Figurative)
- பிளக்சஸ் (Fluxus)
- எதிர்காலவியம்
- ஆர்லெம் மறுமலர்ச்சி (Harlem Renaissance)
- உணர்வுப்பதிவுவாதம் (Impressionism)
- பன்னாட்டு கோதிக் (International Gothic)
- லெஸ் நாபீ
- மனரியம் (Mannerism)
- Massurrealism
- மீவியற்பிய ஓவியம் (Metaphysical painting)
- சிறுமவியம் (Minimalism)
- நவீனவியம் (Modernism)
- புதுச்செந்நெறியியம் (Neoclassicism)
- புதுவெளிப்பாட்டியம் (Neo-expressionism)
- புதுத்தொல்பாணியியம் (Neoprimitivism)
- கண்மாய ஓவியம் (Op Art)
- ஆர்பியம் (Orphism)
- நிழற்பட இயல்பியம் (Photorealism)
- புள்ளிப்படிமவியம் (Pointillism)
- மக்கள் ஓவியம் (Pop art)
- பின்-உணர்வுப்பதிவியம் (Post-impressionism)
- பின் நவீனத்துவம் (Postmodernism)
- தொல்பாணியியம் (Primitivism)
- இயல்பியம் (Realism)
- மறுமலர்ச்சி (Renaissance)
- மறுமலர்ச்சிச் செந்நெறியியம் (Renaissance Classicism)
- ரோக்கோகோ (Rococo)
- ரோமனெஸ்க் (Romanesque)
- புனைவியம் (Romanticism)
- சமூகவாத இயல்பியம் (Socialist Realism)
- உருவகவியம் (Stuckism)
- கலையுணர்வியம் (Suprematism)
- அடிமனவெளிப்பாட்டியம் Surrealism
- குறியீட்டியம் (கலை) (Symbolism (arts))
பின் வருவனவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mel Gooding, Abstract Art, Tate Publishing, London, 2000
- ↑ Man of his words: Pepe Karmel on Kirk Varnedoe — Passages – Critical Essay Artforum, Nov, 2003 by Pepe Karmel
- ↑ The Originality of the Avant Garde and Other Modernist Myths Rosalind E. Krauss, Publisher: The MIT Press; Reprint edition (July 9, 1986), Part I, Modernist Myths, pp.8–171