குறியீட்டியம் (கலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்லோஸ் ஸ்குவாபே என்பவரால் வரையப்பட்ட புதைகுழி தோண்டுபவரின் இறப்பு என்னும் இவ்வோவியம், குறியீட்டிய அலங்காரங்களின் காட்சித் திரட்டு ஆகும். இறப்பு, தேவதைகள், பனி, பாத்திரங்களின் தோற்ற அமைவு என்பன உலகுக்கு அப்பாலான தோற்ற மாற்றத்துக்கான குறியீட்டியத்தின் விருப்பை வெளிப்படுத்துகின்றது.

கலை இயக்கங்களைப் பொறுத்தவரை குறியீட்டியம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து உருவான, கவிதை, பிற கலைகள் என்பன தொடர்பான ஒரு கலை இயக்கம் ஆகும்.

தோற்றம்[தொகு]

குறியீட்டியம், பெரும்பாலும் இயல்பியம் (Naturalism), மெய்மையியம் (Realism) என்பவற்றுக்கு எதிராக உருவானதாகும். உலகப் பொருட்களைக் கண்பது போலவே நுணுக்கமாக வெளிக்கொண்டு வருவதற்கும், எளிமையானவற்றையும், சாதாரணமானவற்றையும் கருத்தியலுக்கு மேலாக உயர்த்துவதற்கும் கருத்தியல் எதிர்ப்பு இயக்கங்கள் விரும்பின. இவற்றுக்கான எதிர்விளைவாக ஆன்மீகம், கற்பனை, கனவு போன்றவற்றுக்குச் சார்பான சிந்தனைகள் உருவாயின. குறியீட்டியத்துக்கான அடிப்படை இவ்வாறான எதிர்விளைவாகவே தொடங்கியது எனலாம். ஜோரிஸ்-கார்ல் ஹுயிஸ்மான்ஸ் போன்ற சில எழுத்தாளர்கள் இயல்பியத்தினராக இருந்து பின்னர் குறியீட்டியத்தின் பக்கம் வந்தவர்களாவர். ஹுயிஸ்மான்சைப் பொறுத்தவரை, சமயம், ஆன்மீகம் ஆகியவற்றில் அவருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வே அவரை இம்மாற்றத்துக்குத் தூண்டியது. குறியீட்டியம் என்பது சொல்லில் அர்த்தத்தை நேரடியாகத் தரும் முயற்சிக்குப் பதிலாக குறியீடுகளைப் பயன்படுத்தி வாசகன் மனத்தில் அதன் அர்த்தத்தை விரியச் செய்யும் முறையாகும்.இறுக்கமும் செறிவும் குறியீட்டின் பண்புகளாவன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறியீட்டியம்_(கலை)&oldid=2264696" இருந்து மீள்விக்கப்பட்டது