ஆர்ட் நூவோ
Appearance
ஆர்ட் நூவோ (Art Nouveau) என்பது புதிய கலை எனப் பொருள்படும் பிரெஞ்சுச் சொல். இது ஓவியம், கட்டிடக்கலை, பயன்பாட்டுக்கலை ஆகியவை தொடர்பான ஒரு அனைத்துலகக் கலை இயக்கம் ஆகும். இது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் (1890–1905) புகழ் பெற்று விளங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் கல்விக்கழகக் கலைப் பாணிக்கு எதிராக உருவான இப்பாணி, செடி கொடி வகைகள் சார்ந்த அழகூட்டல்களைக் கொண்டு விளங்கியதுடன், வளைவுகளைக் கொண்ட வடிவங்களையும் கொண்டிருந்தது.
ஆர்ட் நூவோவின் பதினைந்து ஆண்டுகால மலர்ச்சி கிளாஸ்கோவில் இருந்து மாஸ்கோ, ஸ்பெயின் வரை ஐரோப்பா முழுவதும் உணரப்பட்டது. எனினும் இதன் செல்வாக்கு உலகம் முழுவதும் காணப்பட்டது.