உணர்வுப்பதிவுவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொனெட்டின் ஓவியங்கள்
மொனெட்டின் ஓவியங்கள்

உணர்வுப்பதிவுவாதம் (Impressionism) என்பது 19 ஆம் நூற்றாண்டின் கலை இயக்கங்களில் ஒன்று. 1860 இல் தங்களுடைய ஆக்கங்களைப் பொதுமக்கள் பார்ப்பதற்காகக் காட்சிக்கு வைக்கத் தொடங்கிய பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த ஓவியர்களில் இணைப்பில் உருவானது. குளோட் மொனெட் (Claude Monet) என்பவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் (Impression, Sunrise) என்ற ஓவியத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே இவ்வியக்கத்தின் பெயர் உருவானது. லெ சாரிவாரி (Le Charivari) என்னும் பத்திரிகையில் வெளியான கண்காட்சி விமர்சனம் ஒன்றில் லூயிஸ் லெரோய் (Louis Leroy) என்னும் விமர்சகர் அக்கண்காட்சியிலிருந்த மேற்படி ஓவியத்தின் பெயரிலிருந்த Impression என்னும் சொல்லைப் பயன்படுத்தி விமர்சித்தார். பின்னர் இப்பெயரே அக் குழுவினரின் ஓவியப் பாணியைக் குறிக்கப் பயன்படலாயிற்று.

உணர்வுப்பதிவுவாதச் சிந்தனைகளின் செல்வாக்கு ஓவியத் துறையையும் கடந்து இசை, இலக்கியம் ஆகிய துறைகளுக்கும் பரவியது. இதன் மூலம் உணர்வுப்பதிவுவாத இசை, உணர்வுப்பதிவுவாத இலக்கியம் என்பனவும் உருவாக வழிகோலியது.[1][2][3]

உணர்வுப்பதிவுவாத ஓவியர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Exceptions include Canaletto, who painted outside and may have used the camera obscura.
  2. Ingo F. Walther, Masterpieces of Western Art: A History of Art in 900 Individual Studies from the Gothic to the Present Day, Part 1, Centralibros Hispania Edicion y Distribucion, S.A., 1999, ISBN 3-8228-7031-5
  3. Nathalia Brodskaya, Impressionism, Parkstone International, 2014, pp. 13–14
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வுப்பதிவுவாதம்&oldid=3769100" இலிருந்து மீள்விக்கப்பட்டது