ஆர்பியம்

ஆர்பியம் (orphism) அல்லது ஆர்பியக் கியூபிசம் (Orphic Cubism) என்பது, கியூபிசத்தில் இருந்து கிளைத்த ஒரு கலை இயக்கம். ஓவியங்களில் தூய பண்பியல் தன்மையையும், பிரகாசமான நிறங்களையும் பயன்படுத்திய இவ்வியக்கத்தினர், பால் சிக்னாக், சார்லசு என்றி, சாய வேதியியலாளரான யூசென் செவ்ரோல் போன்றோரின் கோட்பாட்டு எழுத்துக்களின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர். இந்த இயக்கம், கியூபிசத்துக்கும், பண்பியல் ஓவியத்துக்கும் இடையிலான ஒரு மாறுநிலைக் கட்டமாகவே பார்க்கப்படுகிறது.[1] கியூபிசத்தில் ஒற்றைவண்ண ஓவியங்கள் வரையப்பட்ட காலத்தில் நிறங்களைப் பயன்படுத்தி ஆர்பிய இயக்கத்துக்கு முன்னோடிகளாக இருந்தோர், பிரான்டிசேக் குப்கா, ராபர்ட் டிலூனே, சோனியா டிலூனே என்போராவர்.
பிரான்சுக் கவிஞரான கியோம் அப்பொலினயர் (Guillaume Apollinaire) என்பவரே ஆர்பியம் என்னும் பெயரை 1912 ஆம் ஆண்டில் முதன் முதலில் பயன்படுத்தினார். கிரேக்கக் பாடகரும், கவிஞருமான ஆர்பியசு என்பாரின் பெயரைத் தழுவியே இவ்வியக்கத்துக்குப் பெயர் உருவானதாகத் தெரிகிறது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த ஓவியர்கள் தமது படைப்புக்களில் ஆர்பியசின் உணர்ச்சிப் பாடல் தன்மைகளைப் புகுத்த முயற்சிப்பதை இப்பெயர் கருத்தில் கொள்வதாகத் தெரிகிறது.
குறிப்புக்கள்[தொகு]
- ↑ Tate Glossary retrieved February 12, 2010