பிரான்டிசேக் குப்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்டிசெக் குப்கா
பிரான்டிசெக் குப்கா, 1928
பிரான்டிசெக் குப்கா, 1928
பிறப்பு(1871-09-23)23 செப்டம்பர் 1871
ஒப்பச்னோ, பொகீமியா (இப்போது செக் குடியரசு)
இறப்பு24 சூன் 1957(1957-06-24) (அகவை 85)
பீட்டூ, பிரான்சு
தேசியம்செக்
கல்விநுண்கலை அக்கடமி, பிராக்
நுண்கலை அக்கடமி, வியன்னா
யூலியன் அக்கடமி
இக்கோல் டி பூஸ்- ஆர்ட்
அறியப்படுவதுஓவியம்

பிரான்டிசேக் குப்கா (செக் மொழி: František Kupka) (செப்டெம்பர் 23, 1871 - யூன் 24, 1957) என்பவர், ஒரு செக் நாட்டு ஓவியர்.[1] இவர் பிராங்க் குப்கா, பிராங்கோயிசு குப்கா என்னும் பெயர்களாலும் அறியப்பட்டவர். இவர் ஆர்பியம், பண்பியல் ஓவிய இயக்கத்தின் தொடக்க கட்டம் போன்றவற்றின் முன்னோடியும் இணை நிறுவுனரும் ஆவார். இவரது ஆக்கங்கள் யதார்த்தவிய அடிப்படையில் இருந்து உருவானவை எனினும், பிற்காலத்தில் தூய பண்பியல் ஓவியங்களாக வளர்ச்சியடைந்தன.

வரலாறு[தொகு]

கல்வி[தொகு]

பிரான்டிசேக் குப்கா கிழக்கு பொகீமியாவில் உள்ள ஒப்பச்னோ என்னும் ஊரில் 1871 ஆம் ஆண்டு பிறந்தார். 1889 தொடக்கம் 1892 வரை பிராக் நுண்கலை அக்கடமியில் பயின்றார். அக்காலத்தில் இவரது ஒவியங்கள் வரலாறு, தேசப்பற்று ஆகிய விடயங்களைச் சார்ந்தவையாக இருந்தன. பின்னர் குப்கா, வியன்னா நுண்கலை அக்கடமியில் சேர்ந்தார். அங்கே குறியீடு, உருவகம் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தினார். இவர், ஓவியரும் சமுதாயச் சீர்திருத்தவாதியுமான கார்ல் வில்லெம் டீஃபெம்பாக் என்பவராலும் அவரது இயற்கைசார்ந்த வாழ்க்கை முறையாலும் கவரப்பட்டார். 1894 ஆம் ஆண்டில் வியன்னாவிலுள்ள குன்சுட்வேரீனில் குப்காவின் கண்காட்சி இடம்பெற்றது. இக்காலத்திலேயே இவருக்கு இறையியலிலும், மெய்யியலிலும் ஈடுபாடு உண்டானது. 1894 ஆம் ஆண்டில் குப்கா பாரிசு நகரில் குடியேறினார். அங்கே சிறிது காலம் யூலியன் அக்கடமியில் கற்றபின், இக்கோல் டி பூஸ்-ஆர்ட்டில் சேர்ந்தார். ஜோன் பியரே லாரன்சு அங்கே இவருடன் கல்வி கற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "František Kupka". பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்டிசேக்_குப்கா&oldid=3574010" இலிருந்து மீள்விக்கப்பட்டது