கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மொத்தமுள்ள 308 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மைக்கு 155 தொகுதிகள் பெறவேண்டும். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Opinion polls | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 58.8% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
கனடாவின் நடுவன் அரசுத் தேர்தல் அக்டோபர் 14, 2008 நடைபெற்றது.[1] கனடாவின் நடுவண் பழமைவாத கட்சியின் சிறுபான்மை அரசுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்கிற அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் முடிவாக கனடாவின் நடுவண் பழமைவாத கட்சி மீண்டும் சிறுபான்மை ஆட்சிக்கு வந்தது. அதன் தலைவர் சிரீபன் கார்ப்பர் கனடாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்கட்சியான லிபரல் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து 76 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
தேர்தலில் முக்கிய விடயமாக சூழலியல் இருக்கும் என்று சிலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகப் பெருளாதார நெருக்கடியும் அதனால் கனடாவுக்கு ஏற்படும் விளைவுகளும் முக்கிய பிரச்சினையாக எழுந்தது. குறிப்பாக வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி துறை கவனம் பெற்றது.
தேர்தல் முடிவுகள்
[தொகு]கனடா பழமைவாதக் கட்சி |
143 (37.64%) | |
கனடா நடுநிலைமைக் கட்சி |
76 (26.23%) | |
க்குயூபெக்கா கட்சி |
50 (9.98) | |
கனடா புதிய ஜனநாயகக் கட்சி |
37 (18.19) | |
சுயேட்சை | 2 (0.65%) | |
கனடா பசுமைக் கட்சி |
0 (6.95%) |
தேர்தல் 2008 முக்கிய விடயங்கள்
[தொகு]- உலகப் பொருளாதார நெருக்கடியினால் கனடாவுக்கான பாதிப்பு, எவ்வாறு அரசு எதிர்நோக்க வேண்டும்?
- பொருளாதாரம்: உற்பத்தித்துறை வீழ்ச்சி, கார்பன் வரி, வருமான வரி, எவ்வாறு உற்பத்திதுறையை மீட்பது?
- சுற்றாடல்/சூழல் பாதுகாப்பு (பச்சை மாற்றம்: கார்பன் வரி), கார்பன் வரி சுமையா, அவசியமா?
- கனடா பாதுகாப்பு/இராணுவ செலவு - ஆப்காஸ்னிஸ்தான் நடவடிக்கை, எப்பொழுது ஆப்காஸ்னிஸ்தான் நடவடிக்கையை முடிப்பது? அதன் செலவு என்ன?
- அரச மருத்துவ சேவை
- மத்திய மாநில சமன்பாட்டு நிதி பங்கீடு
- அமெரிக்க கனடா உறவு/வட அமெரிக்கா வர்தக உடன்படிக்கை வழக்குகள்
- குடிவரவாளர் பிரச்சினைகள்
- சட்டம்: இளம் குற்றவாழிகள் சட்டங்கள்
- பண்பாடு: பண்பாடு கலைகள் ஆகியவற்றுக்கான செலவீனங்கள்
தேர்தலில் பங்குபெறும் கட்சிகள்
[தொகு]இந் தேர்தலில் பின்வரும் ஐந்து கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- லிபிரல் கட்சி - கனடா நடுநிலைமைக் கட்சி - Liberal Party of Canada
- கன்சேர்வேட்டிவ் கட்சி - கனடா பழமைவாதக் கட்சி - Conservative Party of Canada
- நியூ டெமோக்கிராட்டிக் கட்சி - கனடா புதிய ஜனநாயகக் கட்சி - New Democratic Party (Canada)
- கனடா பசுமைக் கட்சி
- கியூபெக்வா கட்சி