உள்ளடக்கத்துக்குச் செல்

எலிசபெத் மே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எலிசபத் மே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எலிசபெத் எவன்ஸ் மே
Elizabeth Evans May
கனடா பசுமைக் கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகஸ்ட் 26 2006
முன்னையவர்ஜிம் ஹரிஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 9, 1954 (1954-06-09) (அகவை 70)
கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சிகனடா பசுமைக் கட்சி

எலிசபெத் மே (Elizabeth May ஜூன் 9, 1954, கனெடிகட்) கனடா பசுமைக் கட்சியின் தலைவர் ஆவர்.

இவர் ஒரு சூழலியலாளர், எழுத்தாளர், சமூகப் போராளி. இவர் வழக்கறிஞராக கல்வி கற்றவர்.

சிறுபான்மை ஆதரவையே பெற்ற பசுமைக் கட்சியை தலைவர்களுக்கிடையேயான விவாதத்தில் பங்குபெறச் செய்தது இவரது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

மே எழுத்தாளர் ஸ்டெபானி மற்றும் கணக்காளர் ஜான் மிடில்டன் ஆகியோருக்கு சூன் 9,1954 அன்று பிறந்தார்.[1]இவரது தந்தை நியூயார்க்கில் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்தவர்,தாய் நியூயார்க்கர்.[2]இவருக்கு ஜெஃப்ரி என்ற தம்பி உள்ளார்.இவரது தாய் அணுசக்தி எதிர்ப்பு ஆர்வலர்.கேப் பிரெட்டன் தீவில் கோடை விடுமுறையைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் குடும்பம் நோவா ஸ்கொட்டியாவின் மார்கரி துறைமுகத்திற்கு குடிபெயர்ந்தது.

மே 1974ல் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பல்கலைக்கழகத்தில் சேற்ந்தார்,ஆனால் விரைவில் அந்த பள்ளியை விட்டு வெளியேரினார்.மார்க்ரிக்கு திரும்பி, மே உணவக நிர்வாகத்தில் கடித படிப்புகளை எடுத்தார்.1980 ஆம் ஆண்டு டல்ளசி சட்ட பள்ளியில் ஒரு முதிர்ச்சியடைத்த மாணவராக பயின்றார், 1983 இல் பட்டம் பெற்றார்.மே செயின்ட் பால் பல்கலைக்கழகத்தில் இறையியல் படித்தார்.

பொது வாழ்க்கை

[தொகு]

1980 ஆம் ஆண்டில்,மே மற்றும் "சிறு கட்சி"என்று அழைக்கப்படும் சுற்றுச் சூழல் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு பிரச்சிணைகளைஎழுப்ப ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கினார்.1980ல் கூட்டாச்சி தேர்தலில் ஆறு மாகாணங்களில் 12 வேட்பாளர்யுடன் கட்சி போட்டியிட்டது.மேக்கு அந்த நேரத்தில் 25 வயது ஆனது.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மேக்கு இயன் பர்டன், விக்டோரியா கேட் மே பர்ட்டனுடன் பிறந்த ஒரு மகள் உள்ளார்.நவம்பர்27,2018 அன்று நடிகை மார்கோட் கிடாரின் சகோதரரும் இங்கிலாந்து பசுமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான ஜான் கிடரை மே திருமணம் செய்வதாக அறிவித்தார்.மே மற்றும் கிடருக்கு ஏப்ரல் 22,2019 அன்று திருமணம் நடைப்பெற்றது.மே ஒரு ஆங்கிலிக்கம் பயிற்சி பெற்றவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ரயிலில் எலிசபெத் மேவுடன் ஒரு கேள்வி பதில்".
  2. Courant, Hartford. "MAY, STEPHANIE MIDDLETON". courant.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Elizabeth May
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_மே&oldid=3119546" இலிருந்து மீள்விக்கப்பட்டது