கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடாவின் நடுவண் அரசுக்கான தேர்தல் ஜனவரி 23, 2006 அன்று இடம்பெற்றது. கனடாவின் மத்திய லிபிரல் கட்சியின் சிறுபான்மை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டாக முன்வைத்த நம்பிக்கையின்மை தீர்மானம் வெற்றிபெற்றதால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தீர்மானம் நவம்பர் 28, 2005 அன்று நிறைவேற்றப்பட்டது.

கனடா மத்திய அரசுக்கான தேர்தல் மூலம் கனடாவின் 308 வட்டாரங்களில் இருந்து மத்திய அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றால் அக்கட்சியை அரசமைக்க கனடாவின் ஆளுனர் அழைப்பார். ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறா சந்தர்ப்பத்தில் கூட்டணி ஆட்சிக்கோ, அல்லது சிறுபான்மை ஆட்சிக்கோ சந்தர்ப்பம் இருக்கும். ஆட்சி அமைக்கும் கட்சியின் தலைவர் கனடாவின் பிரதமர் ஆக பொறுப்பு ஏற்பார். இவ்வழமைக்கு அமைய கனடா மரபுசார்பு கட்சியை சேர்ந்த சிரீபன் கார்ப்பர் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார்.

தேர்தல் முடிவுகள்[தொகு]

தேர்தல் முடிவுகள், தகவல்: ஆங்கில விக்கிபீடியா
கனடா பழமைவாதக் கட்சி

Conservative Party of Canada

124 (36.3%)
கனடா நடுநிலைமைக் கட்சி

Liberal Party of Canada

103 (30.4%)
க்குயூபெக்கா கட்சி

Bloc Quebecois

51 (10.5%)
கனடா புதிய ஜனநாயகக் கட்சி

New Democratic Party

29 (17.5%)
சுயேட்சை 1 (0.5%)
கனடா பசுமைக் கட்சி

Green Party of Canada

0 (4.5%)

தேர்தலில் பங்குபெற்ற கட்சிகள்[தொகு]

இத் தேர்தலில் பின்வரும் மூன்று முக்கிய தேசிய கட்சிகள் பங்கு வகித்தன.

இவை தவிர கியுபெக் மாகனத்தின் பிரிவான்மையை முன்நிறுத்தும், ஆனால் கனடாவின் மத்திய அரசியலில் பங்குபெறும் பார்ட்டி க்குயூபெக்வா (க்குயூபெக்வா கட்சி) முக்கியத்துவம் பெற்றது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வழங்கிய கிறீன் பாட்டி அல்லது கனடா பசுமை கட்சி இத்தேர்தலில் 308 வட்டாரங்களிலும் உறுப்பினர்களை நிறுத்தியது. இவை தவிர மிறவான கட்சி, பொதுவுடமைக் கட்சி, லெனின் கட்சி போன்ற சிறு குழு கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் பங்குபெற்றார்கள்.

கனடா மத்திய தேர்தலில் பங்குபெறும் கட்சிகளின் இணையத்தளங்கள்
கனடா நடுநிலைமைக் கட்சி

Liberal Party of Canada

கனடா முற்போக்கு கட்சி

Progressive Canadian Party

கனடா முதல் மக்கள் தேசிய கட்சி

First Peoples National Party பரணிடப்பட்டது 2006-01-02 at the வந்தவழி இயந்திரம்

கனடா பழமைவாதக் கட்சி

Conservative Party of Canada

கனடா பொதுவுடமை கட்சி

Communist Party of Canada

கனடா மார்க்சிய-லெனின்சிய கட்சி

Marxist-Leninist Party of Canada

க்குயூபெக்கா கட்சி

Bloc Quebecois

கனடா தனிமனிதசுதந்திர கட்சி

Libertarian Party of Canada

கனடா மிறவான கட்சி

Marijuana Party of Canada

கனடா புதிய ஜனநாயகக் கட்சி

New Democratic Party

கனடா செயல்லாற்று கட்சி

Canadian Action Party பரணிடப்பட்டது 2008-09-11 at the வந்தவழி இயந்திரம்

மிருக நேச சூழல் வாக்காளர் கட்சி

Animal Alliance Environment Voters Party பரணிடப்பட்டது 2016-11-05 at the வந்தவழி இயந்திரம்

கனடா பசுமைக் கட்சி

Green Party of Canada

கனடா கிறீஸ்தவ பண்பாட்டு கட்சி

Christian Heritage Party of Canada

கனடா மேற்கு கூட்டணி கட்சி

Western Block Party

தேர்தல் 2006 முக்கிய விடயங்கள்[தொகு]

 • அரச வைத்திய சேவை (Protecting universal healthcare, private delivery)
 • நிர்வாக ஊழல்/அரச நிர்வாக சீரமைப்பு (Government corruption, Gomery Commission [1])
 • சுற்றாடல்/சூழல் பாதுகாப்பு (Kyoto Protocol [2])
 • அமெரிக்க கனடா உறவு/வட அமெரிக்கா வர்த்தக உடன்படிக்கை வழக்குகள்
 • கனடா தேசிய கூட்டாச்சி/ஒற்றுமை
 • ஒரு பால் திருமணம் (Same sex marriage: Charter of Rights vs Referendum)
 • கனடா பாதுகாப்பு/இராணுவ செலவு
 • மத்திய மாநில சமன்பாட்டு நிதி பங்கீடு
 • பொருளாதாரம்/வருமான வரி
 • குடிவரவாளர் பிரச்சினைகள்
 • கல்வி வளர்ச்சி/ஆராய்ச்சி ஊக்குவிப்பு
 • நகர மறுமலர்ச்சி
 • எதிர்கால திட்டமிடல்
 • கனடாவின் உலக பங்களிப்பு

தேர்தல் தினம்: ஜனவரி 23, 2005[தொகு]

தேர்தல் வாக்கு பதியும் நேரங்கள்
மாகாங்கள்
பிரதேசங்கள்
காலம் (உள்ளூர்) காலம் (UTC)
NL 8:30am – 8:30pm NT
8:00am – 8:00pm AT (parts)
12:00 - 00:00
PE, NS, NB 8:30am – 8:30pm AT 12:30 - 00:30
QC 9:30am – 9:30pm ET
10:30am – 10:30 pm AT (parts)
14:30 - 02:30
ON, NU 9:30am – 9:30pm ET
8:30am – 8:30 pm CT (parts)
SK, MB 8:30am – 8:30pm CT
AB, NT 7:30am – 7:30pm MT
BC, YK 7:00am – 7:00pm PT
8:00 am – 8:00pm MT (parts)
15:00 - 03:00

வெளி இணைப்புகள்[தொகு]