ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். சங்கரன் ரம்யா சினி ஆர்ட்ஸ் |
கதை | புஷ்பா தங்கதுரை |
இசை | வெ. தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | கமல்ஹாசன் சுஜாதா |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டால் |
வெளியீடு | சூன் 4, 1976 |
நீளம் | 3411 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (Oru Oodhappu Kan Simittugiradhu) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்ட ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- கமல்ஹாசன் - ரவி
- சுஜாதா - ராதா
- விஜயகுமார் - சுந்தரம்[2]
- விஜயலட்சுமி - ஷ்வப்னா
- விஜயகீதா - மீனா
- ஏ. கே. வீராசாமி - ரவியின் தந்தை
- திலக்[3]
தயாரிப்பு
[தொகு]இத்திரைப்படம் புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்ட ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[4] இப்படம் மூலம் எஸ். சங்கரன் தயாரிப்பாளராக அறிமுகமானார்.[1] இப்படத்திற்கு பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். "ஆண்டவன் இல்லா உலகமிது" எனும் பாடல் பாண்டிச்சேரி அருகே படமாக்கப்பட்டது.[5]
பாடல்கள்
[தொகு]வெ. தட்சிணாமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.[1] பாடல் வரிகள் கண்ணதாசன்,[5] குமரதேவன், ஆர். பழனிச்சாமி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. "நல்ல மணம்" பாடல் கல்யாணவசந்தம் ராகம் அடிப்படையாக கொண்டது.
எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1 | "முறுக்கு கை முறுக்கு" | டி.கே.கலா | 4:00 |
2 | "ஆண்டவன் இல்லா உலகமிது" | வாணி ஜெயராம், டி. எம். சௌந்தரராஜன் |
4:21 |
3 | "நல்ல மணம் வாழ்க" | கே. ஜே. யேசுதாஸ் | 4:03 |
விருதுகள்
[தொகு]தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 முத்துராமன், எஸ். பி. (23 திசம்பர் 2015). "சினிமா எடுத்துப் பார் 38: வித்தியாச நாயகன் கமல்!". இந்து தமிழ். Archived from the original on 2021-05-19. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2021.
- ↑ "பிரபல டைரக்டர்கள் பற்றி விஜயகுமார்". மாலை மலர். 5 திசம்பர் 2020. Archived from the original on 17 சனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2021.
- ↑ "கரோனா பாதிப்பு: பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார்". இந்து தமிழ். 7 மே 2021. Archived from the original on 12 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2021.
- ↑ "நாவல்கள், திரைப்படங்களாக உருமாறும்போது..." தினமணி. 6 ஏப்பிரல் 2015. Archived from the original on 17 ஏப்பிரல் 2019.
- ↑ 5.0 5.1 முத்துராமன், எஸ். பி. (30 திசம்பர் 2015). "சினிமா எடுத்துப் பார் 39: அந்த மற்றொரு கண் யார்?". இந்து தமிழ். Archived from the original on 19 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2021.