உள்ளடக்கத்துக்குச் செல்

ஊடா யாயா சோகுபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊடா யாயா சோகுபி [1]
பிறப்புஊடா-எல்-ஹீப்ரி
1954 (அகவை 69–70)[2]
பெய்ரூத், லெபனான்
வாழிடம்அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்லெபனானியர்
துறைமரபியல்
நரம்பணுவியல்
பணியிடங்கள்ரீஜெனரோn[3]
பேய்லர் மருத்துவக் கல்லூரி
ஹோவார்ட் ஹக்ஸ் மருத்துவ நிறுவனம்
டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை
கல்வி கற்ற இடங்கள்பேய்லர் மருத்துவக் கல்லூரி
மெஹாரி மருத்துவக் கல்லூரி
பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஇரெட் நோய்த்தொகை, ஸ்பைனோ செரிபெல்லார் அட்டாக்சியா- வகை 1
விருதுகள்டெக்சஸ் புகழ்பெற்ற பெண் (2008)
நரம்பியலுக்கான கிரூபர் பரிசு (2011)
பியர்ல் மீஸ்டர் கிரீன்கார்ட் பரிசு (2013)
டிக்சன் பரிசு
ஷா பரிசு (2016)
கனடாவின் கெய்டுனர் நிறுவன தேசியப் பரிசு (2017)
பிரேக்த்ரோ பரிசு (2017)
துணைவர்வில்லியம் சோகுபி [4]

ஊடா யாயா சோகுபி (Huda Yahya Zoghbi,Arabic: هدى الزغبي) (1954-), எனப்படும் ஹுடா எல் ஹிப்ரி,[2] லெபனானில் பிறந்த அமெரிக்க மரபியலாளரும், பேய்லர் கல்லூரியின் மூலக்கூற்று மரபியல் துறை, மனித மரபியல் துறை பேராசிரியரும் ஆவார்.[5] இவரது பணி இரெட் நோய்த்தொகை மற்றும் சிறுமூளையில் ஏற்படும் ஸ்பைனோ செரிப்ரல் அட்டாக்சி வகை-1 ஆகியவற்றைப் பற்றிய தெளிவான நுட்பங்களை அறிய உதவியது. 2017 இல் கனடாவின் கெய்டுனர் விருது, வாழ்க்கை அறிவியலுக்கான பிரேக்த்ரூ பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இளமையும் கல்வியும்

[தொகு]

ஊடா சோகுபி 1954 இல் லெபனானின் பெய்ரூத் நகரில் பிறந்தார். வில்லியம் சேக்சுபியர், ஜேன் ஆஸ்டின், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஆகியோரின் படைப்புகளை பள்ளியில் விரும்பிப்படித்தார். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இலக்கியம் படிக்க விரும்பினார். ஆனால் இவரது தாயார், மத்திய கிழக்கு நாடுகளில் பிறந்த ஒரு பெண் தன்னை பாதுகாப்பாகவும், சுதந்திரமானவளாகவும், சுயமாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமெனில் அறிவியல் படிக்க வேண்டுமென இவரை உயிரியல் படிக்க ஒத்துக்கொள்ள வைத்தார்.[6][7] சோகுபி, 1973 இல் பெய்ரூத்தில் உள்ள அபெரிக்கப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவில் சேர்ந்தார். பின்னர் இரண்டாண்டுகளில் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரியில் நுழைந்தார்.[7]

சோகுபி முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் போது 1976 இல் லெபனான் உள்நாட்டுப் போர் தொடங்கியது.அப்பொழுது இவரும் இவரது வகுப்புத் தோழமைகளும் பல்கலைக் கழகத்திலேயே தங்குவது என முடிவு செய்தனர். ஆனால் சோகுபியின் சகோதரர் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்தார். அதனால் இவரின் பெற்றோர் இவர்களை டெக்சாசின் ஆஸ்டின் என்ற இடத்தில் வசிக்கும் அவர்களது சகோதரியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் கோடைக்காலம் முடிந்த பின்னர் வீடு திரும்பினர்.[7][8] அக்டோபர் மாதத்தில் போர் முடிவடைந்துவிடும் என்று சோகுபி நினைத்திருந்தார். ஆனால், போர் தீவிரமடைந்திருந்ததால் சோகுபியால் லெபனான் திரும்ப இயலவில்லை. லெபனானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைப் போலவே அமெரிக்காவிலும் மருத்துவக் கல்லூரிகள் அக்டோபர் மாதத்தில் தான் தொடங்கும் என நினைத்திருந்தார். ஆனால் அமெரிக்காவில் மருத்துவக்கல்லூரிகள் இரண்டு மாதத்திற்கு முன்பே பாடங்களைத் தொடங்கியிருந்தன.

இவருடை குடும்ப நண்பர்கள் வேண்டர்பில்ட் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் படி பரிந்துரைத்தனர். அக்கல்லூரி, மாணவர்களை இடையில் மாற்றுவதில் உடன்படவில்லை. எனவே சோகுபி அங்கு சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஆயினும், அக்கல்லூரிக்குப் பதிலாக மெஹாரி மருத்துவக் கல்லூரியைப் பரிந்துரை செய்தது. மெஹாரி கல்லூரி சோகுபியை உடனே அவ்விடத்திலேயே சேர்த்துக்கொண்டது.[8]

அடுத்த கோடையில் லெபனான் திரும்ப விரும்பியபோதும் அமெரிக்கப் பல்கலைக் கழக பேராசிரியர்களின் அறிவுரை காரணமாக மெஹாரியில் தங்க நேரிட்டது. அங்கு 1979 இல் மருத்துவ டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பேய்லர் மருத்துவக் கல்லூரியில் உள்ள டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியில் சேர்ந்தார்.[7]

சோகுபி முதலில் குழந்தைகளின் இதயவியல் வல்லுநராக வேண்டும் என உளப்பூர்வமாக விரும்பினார். இவருடைய குழந்தை நரம்பியல் மருத்துவ, சுழற்சி முறைப் பேராசியரான மார்வின் ஃபிஸ்மென் இவரிடம், இதயத்தை விட மூளை மிகவும் ஆர்வமூட்டக்கூடியது என, இவரை குழந்தைகள் நரம்பியல் மருத்துவம் படிக்க இசையவைத்தார். இப்படியாக குழந்தை நரம்பியல் மருத்துவத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பயின்று முனைவர் பட்ட மருத்துவ ஆய்வாளர் படிப்பை 1982 இல் முடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cha, Ariana Eunjung (4 Dec 2016). "Silicon Valley’s ‘Nobels’: Mega-prizes awarded for work in brains, the origins of life and gravitational waves". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து 15 Oct 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181115140237/https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2016/12/04/silicon-valleys-nobels-mega-prizes-awarded-for-work-in-brains-the-origins-of-life-and-gravitational-waves/?noredirect=on&utm_term=.f3ec22731f3a. பார்த்த நாள்: 13 Dec 2018. 
  2. 2.0 2.1 Azvolinsky, Anna (1 Nov 2018). "Genetic Neurologist: A Profile of Huda Zoghbi". The Scientist. பார்க்கப்பட்ட நாள் 13 Dec 2018. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "Huda Y. Zoghbi, M.D." Regeneron. பார்க்கப்பட்ட நாள் 13 Dec 2018.
  4. Zoghbi, Huda Y. (27 Sep 2016). "Autobiography of Huda Y Zoghbi". Shaw Prize Foundation. Archived from the original on 19 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 Dec 2018.
  5. "Huda Yahya Zoghbi, M.D." Baylor College of Medicine. பார்க்கப்பட்ட நாள் 13 Dec 2018.
  6. Ellen, Elliot (12 Mar 2018). "Women in science: Huda Zoghbi discovered the genetic basis of Rett syndrome". ஜாக்சன் ஆய்வகம். https://www.jax.org/news-and-insights/jax-blog/2018/march/women-in-science-huda-zoghbi-autism. பார்த்த நாள்: 13 Dec 2018. 
  7. 7.0 7.1 7.2 7.3 Nuzzo, Regina (28 Feb 2006). "Profile of Huda Y. Zoghbi". த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு 103 (9): 3017–3019. doi:10.1073/pnas.0509604103. பப்மெட்:16492741. 
  8. 8.0 8.1 Neill, Ushma S. (1 Mar 2016). "A conversation with Huda Zoghbi". Journal of Clinical Investigation 126 (3): 797–798. doi:10.1172/JCI86445. பப்மெட்:26928032. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடா_யாயா_சோகுபி&oldid=3801816" இலிருந்து மீள்விக்கப்பட்டது