ஜேன் ஆஸ்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேன் ஆஸ்டின்
ஜேன் ஆஸ்டின் அவர்களின் சகோதரி கேசன்ட்ரா ஆஸ்டினால் வரையப்பட்ட உருவபடம்(c. 1810)
ஜேன் ஆஸ்டின் அவர்களின் சகோதரி கேசன்ட்ரா ஆஸ்டினால் வரையப்பட்ட உருவபடம்(c. 1810)
பிறப்பு16 டிசம்பர் 1775
ஸ்டீவென்டன், கம்ப்ஸ்பயர், இங்கிலாந்து
இறப்பு18 சூலை 1817(1817-07-18) (அகவை 41)
வின்செஸ்ட்டர், கம்ப்ஸ்பயர், இங்கிலாந்து
அடக்கத்தலம்வின்செஸ்ட்டர் கத்தீட்றல், கம்ப்ஸ்பயர், இங்கிலாந்து
காலம்1787 முதல் 1809–11
வகைபுதினம்
கையொப்பம்

ஜேன் ஆஸ்டின் (Jane Austen, டிசம்பர் 16, 1775 – ஜூலை 18, 1817) ஒரு பிரிட்டானியப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய நடுத்தர மக்களைப் பற்றிய நேசப் புனைவுகள் ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைத் தந்துள்ளன. இவரது புதினங்களில் காணப்படும் யதார்த்தவாதமும், கூர்மையான சமூக விமர்சனமும் வெகுஜன வாசகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும், இலக்கிய ஆய்வாளர்களிடமும் இவருக்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளன.

18ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் கீழ் நடுத்தரவர்க்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆஸ்டின். தன் தந்தை மற்றும் சகோதரர்கள் மூலம் கல்வி கற்றார். அவருடைய எழுத்துப்பணியை அவரது குடும்பத்தார் பெரிதும் ஊக்குவித்தனர். இளம் வயதில் பலதரப்பட்ட இலக்கிய பாணிகளில் பரிசோதனையாக எழுதிப்பார்த்த ஆஸ்டின், பின் தனக்கே ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். 17ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த ”உணர்ச்சிகரமான புதின”ப் பாணியை நிராகரித்த ஆஸ்டினது படைப்புகளில் யதார்த்ததைமும், நகைச்சுவையும் இழைந்தோடுகின்றன. அவரது புதினங்கள் 18ம் நூற்றாண்டு ஆங்கிலப் பெண்கள் சமூகத்தில் முன்னேறவும் பொருளதார ஆதாயத்திற்காகவும் ஆண்களையும், திருமணத்தையும் சார்ந்திருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. 1811 முதல் 1816 வரை வெளியான சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி, பிரைடு அண்ட் பிரிஜுடைஸ், மான்ஸ்ஃபீல்டு பார்க், எம்மா ஆகிய நான்கு புதினங்கள் ஆஸ்டினுக்கு சிறிதளவு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தன. அவர் மறைவுக்குப் பின் நார்த்தாங்கர் ஆப்பி, பெர்சுவேஷன் என்று மேலுமிரு புதினங்களும் வெளியாகின. ஆஸ்டின் வாழ்ந்த காலத்தில் அவர் இலக்கிய உலகில் பெரிதாக அறியப்படவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப்பின் 1869ல் வெளியான எ மெமயர் ஆஃப் ஜேன் ஆஸ்டின் என்ற அவரது வாழ்க்கை வரலாறு சமூகத்தின் பார்வை அவர் படைப்புகளின் மீது திரும்பக் காரணமானது. அதன் பின்னர் அவரது புகழ் பரவி, அவரது புதினங்களுக்கு பெரும் வரவேற்பு உருவானது. தற்போது ஆஸ்டின் தலை சிறந்த ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆஸ்டினது படைப்புகள் பலமுறை தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன; உலகெங்கும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

படைப்புக்களின் பட்டியல்[தொகு]

புதினங்கள்

  • Sense and Sensibility (1811)
  • Pride and Prejudice (1813)
  • Mansfield Park (1814)
  • Emma (novel)|Emma (1815)
  • Northanger Abbey (1818, மறைவுக்குப் பின் வெளியானது)
  • Persuasion (1818, மறைவுக்குப் பின் வெளியானது)

குறுகிய புனைகதை

  • Lady Susan (1794, 1805)

நிறைவேறாத புனைகதைகள்

  • The Watsons (1804)
  • Sanditon (1817)

ஏனைய படைப்புக்கள்

  • Sir Charles Grandison (1793, 1800)[1]
  • Plan of a Novel (1815)
  • Poems (1796-1817)
  • Prayers (1796-1817)
  • Letters (1796-1817)

இளமை பருவத்தில் எழுதிய புத்தகங்கள் — முதல்த்தொகுதி (1787-1793) [2]

  • Frederic & Elfrida
  • Jack & Alice
  • Edgar & Emma
  • Henry and Eliza
  • The Adventures of Mr. Harley
  • Sir William Mountague
  • Memoirs of Mr. Clifford
  • The Beautifull Cassandra
  • Amelia Webster
  • The Visit
  • The Mystery
  • The Three Sisters
  • A beautiful description
  • The generous Curate
  • Ode to Pity

இளமை பருவத்தில் எழுதிய புத்தகங்கள் — இரண்டாம் தொகுதி (1787-1793)

  • Love and Freindship
  • Lesley Castle
  • The History of England
  • A Collection of Letters
  • The female philosopher
  • The first Act of a Comedy
  • A Letter from a Young Lady
  • A Tour through Wales
  • A Tale

இளமை பருவத்தில் எழுதிய புத்தகங்கள் — மூன்றாம் தொகுத் (1787-1793)

  • Evelyn
  • Catharine, or the Bower

மேற்கோள்கள்[தொகு]

  1. The full title of this short play is Sir Charles Grandison or The happy Man, a Comedy in 6 acts. For more information see Southam, "Grandison", The Jane Austen Companion, 187–189.
  2. This list of the juvenilia is taken from The Works of Jane Austen. Vol VI. 1954. Ed. R. W. Chapman and B. C. Southam. Oxford: Oxford University Press, 1988, as supplemented by additional research reflected in Margaret Anne Doody and Douglas Murray, eds. Catharine and Other Writings Oxford: Oxford University Press, 1993.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேன்_ஆஸ்டின்&oldid=3459619" இலிருந்து மீள்விக்கப்பட்டது