ஜாக்சன் ஆய்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜாக்சன் ஆய்வகம் (Jackson Laboratory / Jax) அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தில் உள்ள பார் ஆர்பரில் அமைந்துள்ளது. தற்பொழுது இங்கு 38 ஆய்வுக் குழுக்கள் உயிர் மருத்துவ ஆய்வில் ஈடுப்பட்டுள்ளன. மனித நோய்களுக்கான மரபணு அடிபடையைக்கண்டறியும் ஆய்வில் மிக முக்கியப்பங்கு வகிக்கும் ஆய்வகங்களில் ஜாக்சன் ஆய்வகமும் ஒன்று ஆகும். இங்கு நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வு எலிகளை உபயோகப்படுத்தி மனித நோய்களுக்கான (புற்று நோய், மூளையைத்தாக்கும் நோய்கள் (மறதிநோய்), உடல் பருமனால் விளையும் நோய்கள், மிகுந்த கொழுப்பினால் உண்டாகும் நோய்கள்) நோய் மாதிரிகளை உருவாக்கி ஆய்வு செய்கிறார்கள்.

இங்கிருந்து உலகெங்கும் உள்ள ஆய்வகங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத ஆய்வு எலிகளை வாங்கி பயன்படுத்தப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்சன்_ஆய்வகம்&oldid=1359569" இருந்து மீள்விக்கப்பட்டது