இஸ்ரேலில் இசுலாம்
இஸ்ரேல் நாட்டில் யூத சமயத்திற்கு அடுத்து இசுலாமிய சமயம் இரண்டாவது பெரிய சமயமாக உள்ளது. 2022ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில், இஸ்ரேல் மக்கள் தொகையில் 1.707 மில்லியன் (18.1%) இசுலாமியர்கள் குடிமக்களாக வாழ்கின்றனர்.[1]பழங்குடி அரேபியர்கள் மற்றும் அகமதியாக்கள் இஸ்ரேலின் முஸ்லீம் சிறுபான்மையோர் ஆவார்.[2]
இசுலாமிய அறிஞர்கள் தேர்வு முறை
[தொகு]1948 அரபு - இஸ்ரேல் போரின் போது, இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்த 80% இசுலாமியர்கள், பாலஸ்தீனத்திற்கு குடியேறினர்.[3][4][5]
இஸ்ரேலில் வாழும் இசுலாமியர்கள் இசுலாமியச் சட்ட முறைமையின் கீழ் கண்காணிக்கப்படுகிறார்கள். இசுலாமியர்களின் நம்பிக்கை மற்றும் விவகாரங்களில் இஸ்ரேல் அரசு தலையிடுவதில்லை. இசுலாமிய விவகாரங்களை கவனிக்க, இஸ்ரேலிய அரசு, 1961ல் இசுலாமியச் சட்ட முறைமையை நிர்வகிக்க காஜிக்கள் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, நிறுவப்பட்ட நியமனக் குழுவில் 9 முஸ்லீம் அறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.[6]1961 காஜிக்கள் சட்டத்தின்படி, நீதித்துறையின் பரிந்துரையின் பேரில், இஸ்ரேல் அதிபர் காஜிக்களை நியமிப்பர். 9 பேர் கொண்ட காஜிக்கள் நியமனக் குழு, 6 முஸ்லீம் வேட்பாளர்களை தேர்வு செய்வர்.[7] [8]
மக்கள் தொகை
[தொகு]2022ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இஸ்ரேலில் முஸ்லீம் மக்கள் தொகை 18.1% ஆக உள்ளது. முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் சுன்னி அரபு முஸ்லீம்கள் ஆவர்.[9] with an அகமதியா minority.[10]கால்நடைகள் மேய்க்கும் அரபு மொழி பேசும் பெடூயின் முஸ்லீம்கள் பலர் இஸ்ரேல் இராணுவத்தில் பணிபுரிகின்றனர். இஸ்ரேலில் பகாய் சமயத்தின் தலைமைப் பீடம் உள்ளது. சிறிய அளவில் குர்து மற்றும் துருக்கிய இசுலாமியர்கள் இஸ்ரேலில் வாழ்கின்றனர்.
இரகாத் நகரத்தில் அரபு பெடூயின் முஸ்லீம்கள் 71,300 பேரும், உம் அல்-பாம் மற்றும் நாசரேத் போன்ற நகரங்களில் முறையே 56,000 மற்றும் 55,600 முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.[11] மேற்குக் கரையை ஒட்டிய மேற்குப் பகுதியில் உள்ள 11 நகரங்களில் 2,50,000 இஸ்ரேலிய முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.[12]
2020ல் இஸ்ரேலின் வடக்கு மாவட்டத்தின் மக்கள் தொகையில் இஸ்ரேலிய முஸ்லீம்கள் 35.2% , எருசலேம் மாவட்டத்தில் 21.9% , மத்திய மாவட்டத்தில் 17.1%, ஹைபா மாவட்டத்தில் 13.7%, தெற்கு மாவட்டத்தில் 10.9% மற்றும் டெல் அவீவ் மாவட்டத்தில் 1.2% இசுலாமியர்கள் வாழ்கின்றனர்.
இஸ்ரேலிய முஸ்லீம் மக்கள் தொகையில் 14 மற்றும் 14 வயதிற்குட்பட்டோர் 33.4% ஆக உள்ளனர். 65 வயதிற்கு மேற்பட்டவர்க: 4.3% ஆக உள்ளனர். இஸ்ரேலில் யூத, கிறிஸ்தவ சமயத்தவர்களைக் காட்டிலும் முஸ்லீம் சமூகத்தில் கருவள வீதம் (fertility rate) 2.99 வீதமாக உள்ளது.
2021ம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேலின் முஸ்லீம் மக்கள் தொகை 1.707 மில்லியன் (18.1%) ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. [13]2021ல் முஸ்லீம் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 2.1% ஆக இருந்தது. கருவள வீதம் (fertility rate) 2.99 வீதமாக உள்ளது. 2021ல் பள்ளி & கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 3,95,348 இருந்தது. மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் வீட்டில் சராசரி 6 பேர் வாழ்கின்றனர்[14]
அகமதியா
[தொகு]இஸ்ரேலின் கைஃபா நகரம், அகமதியா அரேபிய முஸ்லிம்களின் மத்திய கிழக்கின் தலைமையிடமாக உள்ளது.[15][16] There are about 2,200 Ahmadis in Kababir.[17]
சுன்னி இசுலாம்
[தொகு]இஸ்ரேலிய முஸ்லீம்களில் சுன்னி இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
சியா இசுலாம்
[தொகு]வடக்கு இஸ்ரேலின், லெபனான் எல்லைப்பகுதியில் உள்ள 7 கிராமங்களில் பன்னிருவர் சியா இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
உசாத்துணை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Muslim Population in Israel 2022". www.cbs.gov.il (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
- ↑ Israel. CIA Factbook
- ↑ Peled (2001), p. 151
- ↑ Layish (2001), p. 135
- ↑ Peled (2001), p. 148
- ↑ Peled (2009), p. 253
- ↑ "Qadis Law 5721 – 1961". https://www.knesset.gov.il/review/data/eng/law/kns4_qadis_eng.pdf.
- ↑ "חוק הקאדים תשכ״א–1961". https://he.wikisource.org/wiki/%D7%97%D7%95%D7%A7_%D7%94%D7%A7%D7%90%D7%93%D7%99%D7%9D.
- ↑ "Israel's Religiously Divided Society" (PDF). Pew Research Center. 8 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 February 2017.
- ↑ Ori Stendel (1996). The Arabs in Israel. Sussex Academic Press. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-898723-24-9. பார்க்கப்பட்ட நாள் May 31, 2014.
- ↑ "The Moslem population of Israel: Data on the Occasion of Eid al-Adha (The Feast of the Sacrifice)" (PDF). Central Bureau of Statistics (Israel). 28 July 2020.
- ↑ Report: Netanyahu suggested to US that Arab Israeli towns be placed in Palestine, Times of Israel, 4 February 2020
- ↑ "The Muslim Population in Israel 2022". www.cbs.gov.il (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
- ↑ "The Muslim Population in Israel 2022". www.cbs.gov.il (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-02.
- ↑ "Kababir and Central Carmel – Multiculturalism on the Carmel". பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
- ↑ "Visit Haifa". பார்க்கப்பட்ட நாள் 8 January 2015.
- ↑ "Kababir". Israel and You. Archived from the original on 30 January 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
ஆதாரங்கள்
[தொகு]- Aharon Layish, The Heritage of Ottoman Rule in the Israeli Legal System: The Concept of Umma and Millet, in THE LAW APPLIED, Contextualizing the Islamic Shari'a, edited by Peri Bearman, Wolfhart Heinrichs and Bernard G. Weiss
- Peled, Alisa Rubin, Debating Islam in the Jewish State – The Development of Policy toward Islamic Institutions in Israel, State University of New York Press (2001)
- Peled, Alisa Rubin, "Shari'a" under Challenge: The Political History of Islamic Legal Institutions in Israel, Middle East Journal, Vol. 63, No. 2, (Spring, 2009)