உள்ளடக்கத்துக்குச் செல்

இலீலா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலீலா ராய்
பிறப்புஇலீலா நாக்
(1900-10-02)2 அக்டோபர் 1900
கோல்பாரா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 சூன் 1970(1970-06-11) (அகவை 69) [1]
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்இலீலவதி ராய்
அமைப்பு(கள்)தீபாலி சங்கம், இந்திய தேசிய காங்கிரசு, அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
வாழ்க்கைத்
துணை
அனில் சந்திர ராய்

இலீலா ராய் (Leela Roy) என்கிற இலீலா நாக் (2 அக்டோபர் 1900 - 11 சூன் 1970), இந்தியாவைச் சேர்த முற்போக்கான பெண் அரசியல்வாதியும், சீர்திருத்தவாதியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நெருங்கிய கூட்டாளியுமாவார்.[2][3]

குடும்பம்

[தொகு]

இவர், வங்காளத்தில் சில்ஹெட்டில் (இப்போது வங்காளதேசம் ) ஒரு உயர் நடுத்தர வர்க்க பெங்காலி இந்து காயாஸ்த குடும்பத்தில் அசாமின் கோல்பாராவில் துணை நீதிபதியாக இருந்த கிரிச்சந்திர நாக் - குஞ்சலதா நாக் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். கொல்கத்தாவிலுள்ள பெதுன் கல்லூரியில் கல்வி பயின்று ஆங்கிலத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். இவருடைய தந்தை கிரிச்சந்திர நாக் சுபாஷ் சந்திர போஸின் ஆசிரியராக இருந்தார். இலீலா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் போராடி தாக்கா பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு முதுகலை பட்டம் பெற்றார். அப்போது தாக்கா பல்கலைக்கழகத்தில் இணை கல்வி அனுமதிக்கப்படவில்லை. அப்போதைய துணைவேந்தர் பிலிப் ஹார்டாக் இவரது சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளித்தார்.[2][4]

சமூகப் பணி

[தொகு]
சமாஜ் செபி சங்கத்தின் பிற நிறுவனர் உறுப்பினருடன் இலீலா ராய், 1946

டாக்காவில் இரண்டாவது பெண்கள் பள்ளியைத் தொடங்கி, பெண்களுக்கான சமூகப் பணி மற்றும் கல்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சிறுமிகள் கற்றல் திறன்களையும் தொழிற்ப. மேலும், பெண்கள் தற்காப்புக்காக தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பல ஆண்டுகளாக, இவர் பெண்களுக்காக பல பள்ளிகளையும் நிறுவனங்களையும் நிறுவினார்.

1921இல் ஏற்பட்ட வங்காள பெரும் வெள்ளத்திற்குப் பிறகு இவர் நிவாரணப் பணிகளுக்குத் தலைமை தாங்கியபோது நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்தார். அப்போது டாக்கா பல்கலைக்கழக மாணவியாக இருந்த இவர் டாக்கா மகளிர் குழுவை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த வகையில் "நேதாஜிக்கு உதவுங்கள்" என்ற முழக்கத்துடன் நன்கொடைகளையும் நிவாரணப் பொருட்களையும் அதிகமாக சேகரித்தார்.

1931ஆம் ஆண்டில், இவர் "ஜெயஸ்ரீ"[5] என்ற பத்திரிக்கையை வெளியிடத் தொடங்கினார்.[6] இது பெண் எழுத்தாளர்களால் முழுமையாக பங்களிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பெயரை பரிந்துரைத்த இரவீந்திரநாத் தாகூர் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் ஆசிகளைப் பெற்றது.[2]

அரசியல் செயல்பாடு

[தொகு]

இலீலா நாக், திசம்பர் 1923இல் டாக்காவில் தீபாலி சங்கம் என்ற ஒரு கிளர்ச்சி அமைப்பை உருவாக்கினார். அங்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டது. பிரிதிலதா வதேதர் அங்கிருந்து பாடங்களை எடுத்தார். இவர் உப்புச் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார். அதற்காக ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 1938ஆம் ஆண்டில், காங்கிரசின் தேசியத் திட்டக் குழுவிற்கு சுபாஷ் சந்திர போஸால் பரிந்துரைக்கப்பட்டார். 1939இல் இவர் அனில் சந்திர ராய் என்பவரை மணந்தார். காங்கிரசிலிருந்து போஸ் பதவி விலகியவுடன், இவர் தனது கணவருடன் சேர்ந்து பார்வர்ட் பிளாக்கு கட்சியுடன் இணைந்தார்.

1960ஆம் ஆண்டில் இவர் பார்வர்ட் பிளாக்கு (சுபாசிஸ்ட்), பிரஜா சோசலிச கட்சி ஆகிய இரு கட்சிகளின் இணைப்பால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியின் தலைவரானார். ஆனால் அதன் பணியில் ஏமாற்றமடைந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[7]

இறப்பு

[தொகு]

நீண்டகால நோய்க்குப் பிறகு, சூன் 1970இல் இவர் இறந்தார்.[7]

இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் இலீலா ராயின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் திசம்பர் 22, 2008 அன்று, குடியரசுத் துணைத் தலைவர், முகம்மது அமீத் அன்சாரி, மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் உடனிருந்தனர்.[8]

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. শতকন্ঠ-১৯৯৮-৯৯, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়
  2. 2.0 2.1 2.2 "Nag, Lila". Banglapedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-21."Nag, Lila". Banglapedia. Retrieved 21 December 2017.
  3. Sansad Bangali Charitavidhan (Bengali).
  4. Amin, Rubayet (2017-03-12) (in bn-IN). https://roar.media/bangla/biography/leela-nag-the-first-female-student-of-dhaka-university/. 
  5. [https://web.archive.org/web/20201106203334/http://jayasreepatrika.org/ பரணிடப்பட்டது 2020-11-06 at the வந்தவழி இயந்திரம்
  6. "Jayasree Patrika – Jayasree Patrika" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-11-06. பார்க்கப்பட்ட நாள் 2020-10-30.
  7. 7.0 7.1 "StreeShakti - The Parallel Force". www.streeshakti.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-21."StreeShakti - The Parallel Force". www.streeshakti.com. Retrieved 21 December 2017.
  8. Roy, Leela. "Leela Roy's portrait". archivepmo.nic.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீலா_ராய்&oldid=3705873" இலிருந்து மீள்விக்கப்பட்டது