உள்ளடக்கத்துக்குச் செல்

பெதுன் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெதுன் கல்லூரி 
பெதுன் கல்லூரி : புகைப்படம் வெளியீடு  1949
குறிக்கோளுரைவித்யாதா விண்டேட்டி அமிர்தம்
வகைமகளிர் கல்லூரி
உருவாக்கம்1849
முதல்வர்பேராசிரியர் மமதா ராய்
அமைவிடம்
கொல்கத்தா 
,
இந்தியா
சேர்ப்புகல்கத்தா பல்கலைக்கழகம்
இணையதளம்bethunecollege.ac.in

பெதுன் கல்லூரி (Bethune College) இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பிதன் சரணியில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரியாகும். இக்கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பழமையான மகளிர் கல்லூரியகும்.[1] 1849 ஆம் ஆண்டில் பெண்கள் பள்ளியாகவும்[2], 1879 ஆம் ஆண்டில் ஒரு கல்லூரியாகவும் பெதுன் கல்லூரி நிறுவப்பட்டது.[3] 2019 ஆம் ஆண்டு மதத்தின் இடத்தில் மனிதநேய நெடுவரிசையை இளங்கலை விண்ணப்ப படிவத்தில் சேர்த்த காரணத்தால் பரவலாக செய்திகளில் இக்கல்லூரி இடம்பெற்று இருந்தது. இந்நடவடிக்கையானது இந்தியாவில் எந்த கல்லூரியும் முன்னெடுக்காத நிலையில் முதன்முதலில் இக்கல்லூரி மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.

வரலாறு 

[தொகு]

1849 ஆம் ஆண்டில் ஜான் எலியட் ட்ரிங்வாட்டர் பெதுனால் இந்த கல்லூரி ஒரு மதச்சார்பற்ற பெண்கள் பள்ளியாக (பெண்கள் மதச்சார்பற்ற கல்விக்காக) நிறுவப்பட்டது.[4] 1856 ஆம் ஆண்டில் அரசு இதனை இணைத்துக் கொண்டது, 1862-63இல் நிறுவப்பட்ட பின்னர் அது பெதுன் பள்ளி என்று மறுபெயரிட்டது. 1879 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மகளிர் கல்லூரியாக பெத்தூன் கல்லூரி வளர்ந்தது.

புகழ்வாய்ந்த மாணவர்கள்

[தொகு]
 • சந்திரமுகி பாசு (1860-1944), பிரித்தானிய பேரரசின் முதல் இரண்டு பெண் பட்டதாரிகளில் ஒருவர் 
 • அபாலா போஸ் (1864-1951), சமூக சேவகர் 
 •  சாரா தேவி சத்துருணி (1872-1945), பெண் கல்வியின் ஊக்குவிப்பாளர் 
 •  அனாரா பஹார் சௌத்ரி (1919-1987), சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்
 •  கமலா தாஸ் குப்தா (1907-2000), போராளி தேசியவாதி 
 • அமல்பிரவா தாஸ், சமூக சேவகர் 
 •  பினா தாஸ் (1911-1986), புரட்சியாளர் மற்றும் தேசியவாதி 
 • டிஸ்டா தாஸ் (பிறப்பு 1978), எதிர்பாலின நடிகை 
 • கல்பனா தத்தா (1913-1995), சுதந்திர ஆர்வலர் 
 • மீரா தத்தா குப்தா (1907-1983), சுதந்திர போராளி மற்றும் ஆர்வலர் 
 • ஸ்வார்ணகுமாரி தேவி (1855-1932), கவிஞர், நாவலாசிரியர் மற்றும் சமூக சேவகர் 
 •  கடம்பினி கங்குலி (1861-1923), பிரித்தானிய பேரரசின் முதல் இரண்டு பெண் பட்டதாரிகளில் ஒருவர் 
 • அசோக குப்தா (1912-2008), சுதந்திர போராளி மற்றும் சமூக சேவகர் 
 •  நீனா குப்தா, கணிதவியலாளர் , சரிச்கி ரத்து பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் . 
 •  ஆதிதி லாஹிரி (பிறப்பு 1952), கல்வியாளர் அபா மைத்தி (பிறப்பு 1925), அரசியல்வாதி 
 • கனக் முகர்ஜி (1921-1995), அரசியல் ஆர்வலர் ஷகுலதா ராவ் (1886-1969), சமூக சேவகர் மற்றும் குழந்தைகள் எழுத்தாளர் 
 • கமினி ராய் (1864-1933), கவிஞர், சமூக சேவகர் மற்றும் பெண்ணியவாதி 
 • லீலா ராய் (1900-1970), அரசியல்வாதி மற்றும் சீர்திருத்தவாதி 
 • மம்தாஸ் சங்கமிதா, மருத்துவர் மற்றும் அரசியல்வாதி 
 • ஷோபா சென், நடிகை அமியா தாகூர் (1901-1988), 
 • பாடகர் புரட்டிலாடா வடெடார் (1911-1932), புரட்சிகர தேசியவாதி

சான்றுகள்

[தொகு]
 1. LBR, Team (2018-05-05). Limca Book of Records: India at Her Best (in ஆங்கிலம்). Hachette India. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351952404.
 2. Bagal, Jogesh Chandra (1949). "History of the Bethune School & College (1849–1949)". In Nag, Kalidas; Ghose, Lotika (eds.). Bethune School & College Centenary Volume, 1849–1949. Bethune College. pp. 11–12.
 3. Bose, Anima (1978). Higher Education in India in the 19th Century: The American Involvement, 1883-1893 (in ஆங்கிலம்). Punthi Pustak. p. 249.
 4. Acharya, Poromesh (1990). "Education in Old Calcutta". In Chaudhuri, Sukanta (ed.). Calcutta: The Living City. Vol. I: The Past. Oxford University Press. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563696-3.

மேலும் வாசிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bethune College
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெதுன்_கல்லூரி&oldid=3925444" இலிருந்து மீள்விக்கப்பட்டது