இரத்தினசோதி சரவணமுத்து
இரத்தினசோதி சரவணமுத்து Ratnasothy Saravanamuttu | |
---|---|
கொழும்பு வடக்குத் தொகுதி இலங்கை அரசாங்க சபை உறுப்பினர் | |
பதவியில் 1931–1931 | |
பின்னவர் | நேசம் சரவணமுத்து |
1-வது கொழும்பு நகர முதல்வர் | |
பதவியில் மே 1937 – திசம்பர் 1937 | |
பின்னவர் | வி. ஆர். சொக்மன் |
பதவியில் சனவரி 1941 – திசம்பர் 1942 | |
முன்னையவர் | ஏ. ஈ. குணசிங்க |
பின்னவர் | ஜோர்ஜ் ஆர். டி சில்வா |
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் | |
பதவியில் 1937–1946 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 1886 |
துணை | நேசம் சரவணமுத்து |
பெற்றோர் | மரு. வேதாரணியம் சரவணமுத்து, தங்கம்மா |
முன்னாள் கல்லூரி | சென்னைப் பல்கலைக்கழகம் |
தொழில் | மருத்துவர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
சேர் இரத்தினசோதி சரவணமுத்து (Sir Ratnasothy Saravanamuttu) இலங்கைத் தமிழ் மருத்துவரும் அரசியல்வாதியும் ஆவார். இலங்கை அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்தவர். இவர் கொழும்பு மாநகரசபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர் ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இரத்தினசோதி சரவணமுத்து அக்டோபர் 1886 இல் கொழும்பு மருத்துவர் வேதாரணியம் சரவணமுத்து, தங்கம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.[2][3] இவரின் தாயார் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்.[4] இவரது தந்தை-வழிப் பாட்டனார் வேதாரணியம் வட இலங்கையில் சுன்னாகம் என்ற சிற்றூரை அமைத்தவர் எனப் பெயர் பெற்றவர்.[5] இரத்தினசோதியுடன் உடன் பிறந்தவர்கள்: ஞானசோதி, தர்மசோதி, பாக்கியசோதி, மாணிக்கசோதி, சப்தரணசோதி ஆகியோர் ஆவர்.[3]
கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்ற இரத்தினசோதி, பாடசாலையில் படிக்குப் போது பல பரிசில்களை வென்றுள்ளார்.[2][3][5] பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இவர் சென்னைப் பல்கலைக்கழகம் சென்று அங்கு மருத்துவப் பட்டமும், அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் உயர்கல்விக்காக ஐக்கிய இராச்சியம் சென்று, அங்கு அறுவை மருத்துவத்தில் வேத்தியர் கல்லூரி உறுப்புரிமை பெற்றார்.[2][3] பட்டம் பெற்று இலங்கை திரும்பிய இரத்தினசோதி வட கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து மருத்துவராகப் பணியாற்றினார்.[3]
அரசியலில்
[தொகு]1931 அரசாங்க சபைத் தேர்தலில் கொழும்பு வடக்குத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்க சபை உறுப்பினரானார்.[3][6] ஆனாலும், தேர்தலில் முறைகேடுகள் செய்ததாக தேர்தல் நீதிபதி ஒருவரினால் குற்றம் சாட்டப்பட்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[3][7] இவரது இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது மனைவி நேசம் சரவணமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண் உறுப்பினர் இவராவார்.[3][7][8]
மே 1937 முதல் திசம்பர் 1946 வரை இவர் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக இருந்தார்.[9] இக்காலப் பகுதியில் 1937 மே முதல் 1937 திசம்பர வரையும், பின்னர் சனவரி 1941 முதல் திசம்பர் 1942 வரை கொழும்பு மாநகர முதல்வராகவும் பணியாற்றினார்.[9]
இவர் சுதந்திர தொழிற் கட்சியை உருவாக்குவதற்கு முன்னர் தாராண்மைவாத முன்னணியின் உறுப்பினராவார். தொழிற் கட்சி பின்னர் இலங்கை தேசிய காங்கிரசினால் உள்வாங்கப்பட்டது.[2][10] 1942 ஏப்ரலில் சப்பானியர்களின் கொழும்பு மீதான குண்டுவீச்சின் போது நிவாரணப் பணிகள் ஆற்றுவதில் இவர் முன்னின்று உழைத்தார்.[5] 1943 இல் இவரது பொது சேவைக்காக பிரித்தானிய இலங்கை அரசு இவருக்கு சேர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[11]
குடும்பம்
[தொகு]சரவணமுத்து நேசம் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3] இவர்களின் பிள்ளைகள்: சீதா இராசநாயகம், சந்திரா என இரண்டு பெண்களும், வேதாரணியம் அருணாசலம் சரவணமுத்து, மரு. இரத்தினகுமார் சரவணமுத்து என இரண்டு ஆண்களும் ஆவர். இவரது மகள் சீதா இராசநாயகத்தின் பெயர்த்தி வனுஷி வோல்ட்டர்ஸ் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
நினைவு
[தொகு]இவரது நினைவாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள வீதி ஒன்றிற்கு "சேர் இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை" எனப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sri Lanka Tamil Family Genealogy
- ↑ 2.0 2.1 2.2 2.3 Maniccavasagar, Chelvatamby (24 February 2012). "Colombo Municipal Council's 147th anniversary:". Daily News. http://archives.dailynews.lk/2012/02/24/fea04.asp.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 181–182.
- ↑ "He gave of his best, but died a disillusioned man". The Sunday Times. 28 May 2000. http://www.sundaytimes.lk/000528/plus10.html.
- ↑ 5.0 5.1 5.2 Billimoria, Marc (13 August 2004). "The Saravanamuttu Prize at S. Thomas' College". Daily News. http://archives.dailynews.lk/2004/08/13/spo10.html.
- ↑ Dissanayake, T. D. S. A. (2002). "Chapter 1: Was early universal franchise a disaster?". War or Peace in Sri Lanka.
- ↑ 7.0 7.1 "LATEEF v. SARAVANAMUTTU". Archived from the original on 2013-06-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
- ↑ "The Struggle for Equal Political Representation of Women in Sri Lanka" (PDF). Archived from the original (PDF) on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
- ↑ 9.0 9.1 Hulugalle, H. A. J. (September 1965). Centenary Volume of the Colombo Municipal Council (1865 - 1965). Colombo Municipal Council. p. 60.
- ↑ Nissanka, Kamal (29 January 2012). "Liberal Party celebrates Silver Jubilee". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304062044/http://www.sundayobserver.lk/2012/01/29/fea03.asp.
- ↑ "Second Supplement". The London Gazette: 2. 29 December 1942. https://www.thegazette.co.uk/London/issue/35841/page/2.