வனுசி வால்ட்டர்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனுசி வால்ட்டர்சு
Vanushi Walters

நாடாளுமன்ற உறுப்பினர்
2020 இல் வனுசி
நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 அக்டோபர் 2020
பிரதமர் யசிந்தா ஆடர்ன்
முன்னவர் பவுலா பெனட்
தொகுதி மேல் துறைமுகம்
தனிநபர் தகவல்
பிறப்பு வனுசி சீதாஞ்சலி இராசநாயகம்
ஆகத்து 1981 (அகவை 42)
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சி நியூசிலாந்து தொழிற் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ரிஸ் வால்ட்டர்சு
பிள்ளைகள் 3
பெற்றோர் ஜனா இராசநாயகம், பிரித்திவா மேத்தர் இராசநாயகம்
இருப்பிடம் தித்திராங்கி, ஓக்லாந்து
படித்த கல்வி நிறுவனங்கள் ஆக்லாந்து பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர்

வனுசி வால்ட்டர்சு (Vanushi Walters, வனுஷி வோல்ட்டர்ஸ்; பிறப்பு: ஆகத்து 1981) நியூசிலாந்து வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நியூசிலாந்து தொழிற்கட்சியின் உறுப்பினர் ஆவார். நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது இலங்கையர் இவராவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வனுசி வால்ட்டர்சு (இராசநாயகம்) இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த நியூசிலாந்தவர் ஆவார். இவர் ஆகத்து 1981 இல் ஜனா இராசநாயகம், பிரித்திவா மேத்தர் இராசநாயகம் ஆகியோருக்கு கொழும்பில் பிறந்தார்.[1][2] இவர் இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் கொழும்பு முதல்வருமான சேர் இரத்தினசோதி சரவணமுத்து, நேசம் சரவணமுத்து ஆகியோரின் மகள் சீதா இராசநாயகத்தின் பெயர்த்தி ஆவார்.[3][4][5] இவரது குடும்பம் இலங்கையில் இருந்து சாம்பியாவிற்கும், அங்கிருந்து இசுக்காட்லாந்துக்கும் குடிபெயர்ந்து, பின்னர் 1983 இல் நியூசிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறியது.[6] வனுசி ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் இளநிலைப் பட்டமும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[7][8]

பணி[தொகு]

வனுசி மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக உள்ளார்.[4][9] பன்னாட்டு மன்னிப்பு அவையின் பன்னாட்டு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[2][4] தற்போது நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணையத்தின் மூத்த முகாமையாளராகப் பணியாற்றுகிறார்.[4][9]

அரசியலில்[தொகு]

2020 அக்டோபர் 17 இல் நடைபெற்ற நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் மேல் துறைமுகத் தொகுதியில் கட்சிப் பட்டியலில் 23-ஆவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,[9] 14,142 வாக்குகள் பெற்று தேசியக் கட்சி வேட்பாளர் ஜேக் பெசாண்டைத் தோற்கடித்து,[10] முதற் தடவையாக நாடாளுமன்றம் சென்றார். இவர் இலங்கையில்-பிறந்த முதலாவது நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[11][12]

தேர்தல் வரலாறு[தொகு]

வனுசி வால்ட்டர்சின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2020 நியூசிலாந்து நாடாளுமன்றம் மேல் துறைமுகம் தொழிற்கட்சி 14,142[10] தெரிவு

குடும்பம்[தொகு]

வனுசி ரிஸ் வால்ட்டர்சு என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு எலியட், லூக்கா, சாச்சா என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.[4][6][13] இவர் மேற்கு ஓக்லாந்து, தித்திராங்கி என்ற ஊரில் வசித்து வருகிறார்.[4][6]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Vanushi Sitanjali RAJANAYAGAM WALTERS". Cardiff, U.K.: Companies House. https://find-and-update.company-information.service.gov.uk/officers/plIdULfMpihuvGUvBd4STHs0bZQ/appointments. பார்த்த நாள்: 18 October 2020. 
 2. 2.0 2.1 "SL born lawyer Vanushi elected New Zealand MP". Daily Mirror. Stuff (Colombo, Sri Lanka). 17 October 2020. http://www.dailymirror.lk/breaking_news/SL-born-lawyer-Vanushi-elected-New-Zealand-MP/108-198141. பார்த்த நாள்: 18 October 2020. 
 3. "நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்". Num Tamil. 18 அக்டோபர் 2020. https://www.facebook.com/NumTamilRadio/videos/375439310480904. பார்த்த நாள்: 18 அக்டோபர் 2020. 
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Introducing Vanushi Walters – First Sri Lankan-born Labour List member". LankaNZ (New Zealand). June 2020. https://www.srilankanz.co.nz/2020/06/introducing-vanushi-walters-first-sri.html. பார்த்த நாள்: 18 October 2020. 
 5. "SL born Vanushi elected New Zealand MP". Asian Mirror. 18 October 2020 இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201021050920/https://asianmirror.lk/news/item/32292-sl-born-vanushi-elected-new-zealand-mp. பார்த்த நாள்: 18 October 2020. 
 6. 6.0 6.1 6.2 "Spotlight on: Vanushi Walters". Office of Ethnic Communities. 10 June 2019. https://www.ethniccommunities.govt.nz/news/spotlight-on-vanushi-walters/. பார்த்த நாள்: 15 June 2020. 
 7. "Our Director". Auckland, New Zealand: The Current Limited இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200115040427/http://thecurrent.nz/about-us/our-director/. பார்த்த நாள்: 18 October 2020. 
 8. "Steering Committee Executive". Auckland, New Zealand: Action for Children and Youth Aotearoa இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201020180246/https://www.acya.org.nz/chair-and-deputy-chair.html. பார்த்த நாள்: 18 October 2020. 
 9. 9.0 9.1 9.2 Coughlan, Thomas (15 June 2020). "Ayesha Verrall leads fresh-faced Labour party list for 2020". Stuff.co.nz. https://www.stuff.co.nz/national/300034942/ayesha-verrall-leads-freshfaced-labour-party-list-for-2020. பார்த்த நாள்: 15 June 2020. 
 10. 10.0 10.1 "Election 2020: Human rights lawyer Vanushi Walters is new Upper Harbour MP". Stuff.co.nz. 18-10-2020. https://www.stuff.co.nz/national/politics/300131315/election-2020-human-rights-lawyer-vanushi-walters-is-new-upper-harbour-mp. பார்த்த நாள்: 18-10-2020. 
 11. Collins, Simon (18 October 2020). "Election 2020: Forty newcomers include our first African, Latin American and Sri Lankan MPs". New Zealand Herald (Auckland, New Zealand). https://www.nzherald.co.nz/nz/election-2020-forty-newcomers-include-our-first-african-latin-american-and-sri-lankan-mps/WAU467WZ6Q2FSJ4MEUOE5BQDSQ/. பார்த்த நாள்: 18 October 2020. 
 12. "First Sri Lanka born MP in New Zealand Parliament". Daily News. Stuff (Colombo, Sri Lanka). 18 October 2020. http://www.dailynews.lk/2020/10/18/local/231722/first-sri-lanka-born-mp-new-zealand-parliament. பார்த்த நாள்: 18 October 2020. 
 13. "Meet Vanushi". Wellington, New Zealand: New Zealand Labour Party. https://www.labour.org.nz/vanushiwalters. பார்த்த நாள்: 18 October 2020. 
நியூசிலாந்து நாடாளுமன்றம்
முன்னர்
பவுலா பெனட்
மேல் துறைமுகத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
2020–இன்று
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனுசி_வால்ட்டர்சு&oldid=3591721" இருந்து மீள்விக்கப்பட்டது