நியூசிலாந்து நாடாளுமன்றம்
வகை | |
---|---|
வகை | |
அவைகள் | பிரதிநிதிகள் அவை |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 24 மே 1854[1] |
தலைமை | |
ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு 9 செப்டெம்பர் 2022 முதல் | |
ஆளுநர் | சிண்டி கிரோ 21 அக்டோபர் 2021 முதல் |
சபாநாயகர் | அட்ரியன் ருராவ்ஹே, தொழிற்கட்சி 24 ஆகத்து 2022 முதல் |
அவைத் தலைவர் | கிறிசு இப்கின்சு, தொழிற்கட்சி 26 அக்டோபர் 2017 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 120 |
பிரதிநிதிகள் அவை அரசியல் குழுக்கள் | அரசு (64)
ஒத்துழைப்புடன் (10)
எதிர்க்கட்சி கூட்டமைப்பு (33)
சிரோஸ்பெஞ்ச (13)
|
தேர்தல்கள் | |
பிரதிநிதிகள் அவை வாக்களிப்பு முறை | கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம் |
அண்மைய பிரதிநிதிகள் அவை தேர்தல் | 17 அக்டோபர் 2020 |
அடுத்த பிரதிநிதிகள் அவை தேர்தல் | 13 சனவரி 2024 |
கூடும் இடம் | |
நாடாளுமன்றக் கட்டடங்கள், வெலிங்டன், நியூசிலாந்து | |
வலைத்தளம் | |
www |
நியூசிலாந்து நாடாளுமன்றம் (New Zealand Parliament; மாவோரி மொழி: Pāremata Aotearoa) என்பது நியூசிலாந்தின் சட்டவாக்க அவை ஆகும். இது இது நியூசிலாந்து அரசரையும், நியூசிலாந்து பிரதிநிதிகள் அவையையும் கொண்டது. அரசர் பொதுவாகத் தனது ஆளுநரைப் பிரதிநிதியாகக் கொண்டு செயல்படுகிறார்.[2] 1951 இற்கு முன்னர், நியூசிலாந்தின் சட்டவாக்கப் பேரவையாக ஒரு மேலவையும் இருந்தது. நியூசிலாந்து நாடாளுமன்றம் 1854 இல் உருவாக்கப்பட்டது. உலகின் மிகவும் பழமையான இன்றும் தொடர்ந்தியங்கும் ஒரு சட்டவாக்க அவைகளில் ஒன்றாக இது விளங்குகிறது.[3] 1865 முதல் நாடாளுமன்றம் நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் இருந்து இயங்குகிறது.
நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை பொதுவாக 120 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஆனாலும், சிலவேளைகளில் மேலதிக இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. 71 உறுப்பினர்கள் தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏனையோர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிப் பட்டியல் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கபப்டுகின்றனர். மாவோரி பழங்குடிகளின் பிரதிநிதிகள் 1867 முதல் நாடாளுமன்றத்தில் உறுப்புரிமை கொண்டுள்ளனர். 1893 இல் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.[3] மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றாலும், பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
நாடாளுமன்றம் செயலாக்குநருடன் நெருக்கமாகத் தொடர்புடையது. நியூசிலாந்து அரசாங்கம் ஒரு பிரதமர் (அரசுத்தலைவர்) மற்றும் பிற அமைச்சர்களைக் கொண்டுள்ளது. பொறுப்பான அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, இவர்கள் எப்போதும் பிரதிநிதிகள் அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதற்காக அவர்கள் பொறுப்புக் கூறப்படுவார்கள்.
சட்டவாக்க செயல்பாட்டில் மன்னரோ (தற்போது ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு மகாராசா) அல்லது அவரது பிரதிநிதியான ஆளுநரோ பங்கெடுக்க மாட்டார்கள். அரசரின் இசைவை வழங்குவது என்று அழைக்கப்படும் சபை நிறைவேற்றிய சட்ட முன்வரைவுக்கு அரசரின் ஒப்புதலைத் தருவது, சட்ட முன்வரைவு ஒரு சட்டமாக்கப்படுவதற்கு அவசியமானதாகும்.[2] புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறுப்புரிமையை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அரசரின் முடிவை ஏற்றுக் கொள்வதாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். இதனால் சட்ட முன்வரைவு தொடர்பான அரசரின் முடிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசரின் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, அவரது முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.[4] அதிகாரபூர்வ எதிர்ப்பு என்பது பாரம்பரியமாக அரசரின் மாட்சிமை விசுவாச எதிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது.[5]
உசாத்துணைகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First sitting, 1854". NZ History. Ministry for Culture and Heritage. 19 August 2014. பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
- ↑ 2.0 2.1 McLean, Gavin (28 September 2016). "Governors and governors-general – Constitutional duties". Te Ara: The Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ 3.0 3.1 Martin, John E. (17 February 2015). "Parliament". Te Ara: The Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016.
- ↑ Elizabeth II (24 October 1957), Oaths and Declarations Act 1957, 17, Wellington: Queen's Printer for New Zealand, பார்க்கப்பட்ட நாள் 1 January 2010
- ↑ Kaiser, André (2008). "Parliamentary Opposition in Westminster Democracies: Britain, Canada, Australia and New Zealand". The Journal of Legislative Studies 14 (1–2): 20–45. doi:10.1080/13572330801920887. http://www.tandfonline.com/doi/abs/10.1080/1357233080192088. பார்த்த நாள்: 1 July 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
மூலம்
[தொகு]- McRobie, Alan (1989). Electoral Atlas of New Zealand. Wellington, New Zealand: GP Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-477-01384-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wilson, James Oakley (1985) [1st ed. published 1913]. New Zealand Parliamentary Record, 1840–1984 (4th ed.). Wellington, New Zealand: V.R. Ward, Govt. Printer. இணையக் கணினி நூலக மைய எண் 154283103.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- New Zealand Parliament
- Introducing Parliament – A one-hour guide to how the New Zealand Parliament works
- Images from around Parliament Buildings
- Parliament Today
- Parliament at Radio New Zealand
- Digitised reports from selected volumes of the Appendix to the Journals of the House of Representatives