இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி
இஞ்சினுவிட்டி Ingenuity | |
---|---|
செவ்வாய் 2020-இன் ஒரு பகுதி | |
2021 ஏப்ரல் 6 இல் இஞ்சினுவிட்டி | |
வகை | புவிக்கப்பாலான தானியங்கி ஆளில்லா உலங்கு வானூர்தி |
தயாரிப்பாளர் | Jet Propulsion Laboratory |
தொழினுட்பத் தகவல்கள் | |
பரிமாணங்கள் | 121 cm × 49 cm × 52 cm (48 அங் × 19 அங் × 20 அங்) |
உலர் எடை | 1.8 கிலோகிராம்கள் (4.0 lb) |
வலு | 6 சூரிய-மின்னூட்டப்பட்ட சோனி விடிசி-4 Li மின்கலங்கள்; வழக்கமான இயந்திர உள்ளீட்டு வலு: 350 வாட்டு[1] |
பறப்பு வரலாறு | |
19 ஏப்ரல் 2021, 07:34 UTC | |
கடைசிப் பறப்பு | சனவரி 18, 2024 |
பறப்புகள் | 72 |
முடிவு | நீடித்த சுழலித் தகடு சேதம் காரணமாக ஓய்வு[2] |
கருவிகள் | |
|
இஞ்சினுவிட்டி தானியங்கி உலங்குவானூர்தி (Ingenuity robotic helicopter) என்பது ஒரு தானியங்கி நாசா உலங்கு வானூர்தி ஆகும், இது செவ்வாய் 2020 திட்டத்தின்கீழ் 2021 முதல் 2024 வரை செவ்வாய்க் கோளில் இயங்கியது. இவ்வானூர்தி 2021 பெப்ரவரி 18 அன்று தரையிறங்கிய பெர்சீவியரன்சு தளவுலவியின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டு செவ்வாய்க்கு வந்தது.[1] 2021 ஏப்ரல் 19 இல், முதலாவது புவிக்கப்பாலான வானூர்திப் பயணத்தை மேற்கொண்டது.[3] மொத்தம் 72 பறப்புகளின் பின்னர், 2024 சனவரி 18 இல், செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய போது வானூர்தியின் சுழலித் தகடுகள் சேதமடைந்ததால், உலங்குவானூர்தி செயலிழந்து தனது திட்டத்தை முடித்துக் கொண்டது.[4]
தளவுலவியும், உலங்குவானூர்தியும் 45 கிமீ அகலமான ஜெசிரோ குழியின் மேற்கு விளிம்பிற்கு அருகே ஒக்டேவியா இறங்கு தளத்தில் தங்கள் பணிகளைத் தொடங்கின.[5] இஞ்சினுவிட்டியின் பறப்புகள் புவியின் வளியை விட 0.6% அடர்த்தியான செவ்வாய்க் கோளின் மிக மெல்லிய வளிமண்டலத்தில் பறப்பது சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தியது. அத்துடன், புவியில் இருந்து நேரடியாகக் கட்டுப்படுத்தத் தேவையில்லை என்பதையும் நிரூபித்தது, வானொலி அலைகள் புவிக்கும் செவ்வாய்க்கும் இடையில் பயணிக்க கோள்களின் நிலையைப் பொறுத்து 5 முதல் 20 நிமிடங்கள் வரை எடுப்பதால், இஞ்சினுவிட்டியைக் கட்டுப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது.[6] அதற்குப் பதிலாக, இஞ்சினுவிட்டி தானியக்கமாக பறப்புகளை நிகழ்த்தியது.
உலங்குவானூர்தி 30-சோல் தொழில்நுட்ப விளக்கத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டது, 3-5 மீ (10-16 அடி) உயரத்தில் ஐந்து பறப்புகளை ஒவ்வொன்றும் 90 வினாடிகள் வரை செய்யக்கூடியதாக அமைக்கப்பட்டது.[7] 2024 சனவரி 18 அன்று, உலங்குவானூர்தி அதன் 72-ஆவது பறப்பின்போது தரையிறங்கியபோது சேதமடைந்தது, அதனை அடுத்து நாசா உலங்குவானூர்தியின் ஓய்வை அறிவித்தது.[2][8] இஞ்சினுவிட்டி 1,004 நாட்களில் மொத்தம் இரண்டு மணிநேரம், எட்டு நிமிடங்கள், 48 வினாடிகள் பறந்து, 17 கிலோமீட்டர் (11 மைல்) க்கும் அதிகமாகக் கடந்தது.[9]
நாசாவின் ஜெட் புரொப்பல்சன் ஆய்வகம், ஏரோவைரன்மென்ட், நாசாவின் அமேசு ஆய்வு மையம், லாங்லி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து இஞ்சினுவிட்டியை வடிவமைத்தன.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 இந்தக் கட்டுரை இப்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள ஒரு பிரசுரத்தின் உரையை உள்ளடக்கியது: "Mars Helicopter". Mars.nasa.gov. NASA. Archived from the original on 16 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2 May 2020.
- ↑ 2.0 2.1 "After Three Years on Mars, NASA's Ingenuity Helicopter Mission Ends". Jet Propulsion Laboratory. Archived from the original on 25 January 2024. பார்க்கப்பட்ட நாள் 25 January 2024.
- ↑ AFP Staff Writers (Apr 19, 2021). "Ingenuity helicopter successfully flew on Mars: NASA". Mars Daily. ScienceDaily. Archived from the original on 19 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
- ↑ "Ingenuity spots the shadow of its damaged rotor blade". NASA Jet Propulsion Laboratory (JPL). 2024-01-25. Archived from the original on 27 January 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
- ↑ hang, Kenneth (23 March 2021). "Get Ready for the First Flight of NASA's Mars Helicopter – The experimental vehicle named Ingenuity traveled to the red planet with the Perseverance rover, which is also preparing for its main science mission.". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 23 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210323183007/https://www.nytimes.com/2021/03/23/science/nasa-mars-helicopter.html.
- ↑ "NASA Science – Mars 2020 Mission Communications". Mars.NASA.gov. 14 February 2022. Archived from the original on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022.
- ↑ இந்தக் கட்டுரை இப்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள ஒரு பிரசுரத்தின் உரையை உள்ளடக்கியது: "Ingenuity Mars Helicopter Landing Press Kit" (PDF). NASA. January 2021. Archived (PDF) from the original on 18 February 2021. பார்க்கப்பட்ட நாள் 14 February 2021.
- ↑ Chang, Kenneth (25 January 2024). "Ingenuity, the NASA Helicopter Flying Over Mars, Ends Its Mission – The robot flew 72 times, serving as a scouting partner to the Perseverance rover, aiding in the search for evidence that there was once life on the red planet.". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 25 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20240125231308/https://www.nytimes.com/2024/01/25/science/nasa-ingenuity-helicopter-mars.html. பார்த்த நாள்: 26 January 2024.
- ↑ "Flight Log". Mars Helicopter Tech Demo. NASA. Archived from the original on 12 October 2023. பார்க்கப்பட்ட நாள் 21 January 2024.
- ↑ இந்தக் கட்டுரை இப்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள ஒரு பிரசுரத்தின் உரையை உள்ளடக்கியது: Generation of Mars Helicopter Rotor Model for Comprehensive Analysesபரணிடப்பட்டது 1 சனவரி 2020 at the வந்தவழி இயந்திரம், Witold J. F. Koning, Wayne Johnson, Brian G. Allan; NASA 2018
வெளி இணைப்புகள்
[தொகு]- NASA Mars Helicopter webpage
- Mars Helicopter Technology Demonstrator. (PDF) – The key design features of the prototype drone.