செவ்வாய் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A series of photographs in succession show the Sun rising above the horizon as the atmosphere becomes brighter
செவ்வாய்க் கோளில் சூரிய எழுச்சி
A series of photographs in succession show the Sun sinking below the horizon as the atmosphere becomes darker
செவ்வாய்க் கோளில் சூரிய மறைவு
Images captured by InSight

சோல் (இலத்தீன் வார்த்தையான சன்) என்பது செவ்வாய் கோளில் அமையும் ஒரு சூரிய நாள் , அதாவது செவ்வாய் - நாள். ஒரு சோல் என்பது செவ்வாய் கோளில் ஒரு பார்வையாளரால் காணப்பட்ட அதே நெட்டாங்கில் (சூரியன்) சூரியனின் இரண்டு தொடர்ச்சியான திரும்புதல்களுக்கு இடையிலான வெளிப்படையான இடைவெளி காலம் ஆகும். செவ்வாய் கோளில் நேரத்தை முடிவு செய்வதற்கான பல அலகுகளில் இதுவும் ஒன்றாகும்.

ஒரு சோல் என்பது ஒரு புவி நாளை விட சற்று நீளமானது. இது தோராயமாக 24 மணி நேரம் 39 மணித்துளிகள் 35 நொடிகள் நீளம் கொண்டது. ஒரு செவ்வாய் ஆண்டு என்பது தோராயமாக 668 சோல்களாகும் , இது தோராயமாக 687 புவி நாட்கள் அல்லது 1.88 புவி ஆண்டுக்குச் சமம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mars' Calendar".
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வாய்_நாள்&oldid=3768143" இலிருந்து மீள்விக்கப்பட்டது