அல்லி விதைகள்
அல்லி விதைகள் (Fox Nuts Or Makhana[1]). இது தெற்காசியா மற்றும் கிழக்காசியாவில் காணப்படும் அல்லி வகை நீர்த்தாவரத்தின் விதைகள் ஆகும்.,[2] குறிப்பாக இத்தாவரங்கள் கிழக்கு இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான் நாடுகளின் நன்னீர் நிலைகளில் அதிகம் வளர்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இதன் உலர்ந்த விதைகள் உண்ணத்தக்கது. மருத்துவ குணம் கொண்டது. நன்னீரில் வளரும் இவ்வகை அல்லி வகைத் தாவரங்கள் அடர் ஊதா பூக்களுடன், இலைகள் பெரியதாகவும், வட்டமாகவும், உருண்டையாகவும், பெரும்பாலும் ஒரு மீட்டருக்கும் அடி) விட்டத்துடன் இருக்கும். இச்செடியின் மேற்பரப்பின் மையத்தில் ஒரு இலைத் தண்டு இணைக்கப்பட்டுள்ளது. இலையின் அடிப்பகுதி ஊதா நிறத்திலும், மேல்புறம் பச்சை நிறத்திலும் இருக்கும். தண்டுகள், பூக்கள் மற்றும் மேற்பரப்பில் மிதக்கும் இலைகள் கூர்மையான முட்களால் மூடப்பட்டிருந்தாலும், இலைகள் ஒரு மெல்லிய அமைப்பைக் கொண்டுள்ளது.
உலகின் மக்கானா உற்பத்தியில் 80 முதல் 90 சதவீதம் பீகாரில் உற்பத்தி செய்யப்படுகிறது..[3] மக்கானா விதை உற்பத்தியில் 70% பிகாரின் மிதிலை பிரதேசத்தில் உள்ள மதுபனி மாவட்டம், தர்பங்கா மாவட்டம் கொண்டுள்ளது. மேலும் பிகாரின் சமஸ்திபூர் மாவட்டம், பூர்ணியா மாவட்டம் மற்றும் சிதாமர்கி மாவட்டங்களிலும் மக்கானா விதைக் கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சமையல்
[தொகு]இந்தியா, சீனா மற்றும் ஜப்பானில் உள்ள தாழ்நிலக் குளங்களில் அதன் விதைகளுக்காக[10] இந்தச் செடிகள் பயிரிடப்படுகிறது. சீனர்கள் பல நூற்றாண்டுகளாக இதனை பயிரிடுகின்றனர்.[4] இதனை இந்தியாவின் பீகாரில் 96,000 ஹெக்டேர்களுக்கு மேல் சாகுபடிக்காக ஒதுக்கப்பட்டது.[6] இந்தியாவின் பீகார் மாநிலம் உலகில் உற்பத்தியாகும் 90% நரி கொட்டைகளை உற்பத்தி செய்கிறது.[10] இத்தாவரம் வெப்பமான, வறண்ட கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலம் உள்ள இடங்களில் சிறப்பாக வளரும். இதன் விதைகள் கோடையின் பிற்பகுதியிலும், இலையுதிர்காலத்தின் தொடக்கத்திலும் சேகரிக்கப்படுகின்றது. இவ்விதைகளைப் பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். [5]இதன் விதைகளை எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைத் தெளித்து உண்ணப்படுகிறது. மேலும் கீர் எனப்படும் கஞ்சி அல்லது புட்டு செய்யப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவத்தில்
[தொகு]நரிக் கொட்டை விதைகள் இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்திலும், சீனப் பாரம்பரிய மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.[10] இந்தியாவில் மக்கானா எனப்படும் இதன் விதைகள் பல பகுதிகளில் இது லாவா என்றும் அழைக்கப்படுகிறது.குளங்கள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களின் அமைதியான நீரில் வளரும்.. மக்கானா விதைகளை வறுத்து, இனிப்பு, தின்பண்டங்கள், கீர் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மக்கானாவில் 9.7% எளிதில் சீரணிக்கக்கூடிய புரதம், 76% கார்போஹைட்ரேட், 12.8% ஈரப்பதம், 0.1% கொழுப்பு, 0.5% தாது உப்புகள், 0.9% பாஸ்பரஸ் மற்றும் இதன் 100 கிராமில் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Makhana (Fox Nuts) – Benefits, Nutrition, Recipes and More
- ↑ Lee, Sangtae; Chang, Kae Sun, eds. (2015). English Names for Korean Native Plants (PDF). Pocheon: Korea National Arboretum. p. 466. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-89-97450-98-5. பார்க்கப்பட்ட நாள் 7 March 2019 – via Korea Forest Service.
- ↑ Flora of China, "Euryale ferox"
- ↑ Mabberley, D. J. (1987). The Plant-book. Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-34060-1.
- ↑ "Are popped lotus seeds the next popcorn?". Foodnavigator. பார்க்கப்பட்ட நாள் 2021-03-18.