அடியர்
இரவுலா பழங்குடியினர் நிகழ்த்திய கம்பாலா நடனம் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
41,885[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | |
கருநாடகம் | 30,359 |
கேரளா | 11,526 |
மொழி(கள்) | |
இரவுலா • மலையாளம் | |
சமயங்கள் | |
ஆன்ம வாதம் • இந்து |
இரவுலா (மலையாளத்தில் அடியர், கன்னடத்தில் யெரவுலா) எனப்படுவோர் கேரளா மற்றும் கருநாடகாவில் வாழுகின்ற ஒரு பழங்குடியினர் ஆவர். இவர்கள் பொதுவாக பேசும் மொழி ரவுலா மொழி என்று அழைக்கப்படுகிறது.[2] இவர்கள் கேரளாவின் கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களிலும், கருநாடகாவின் குடகு மாவட்டத்திலும் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் விவசாயத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இவர்கள் கடந்த காலத்தில் விவசாய பண்ணையடிமைகள் என்று நம்பப்படுகிறது.[3] அடியன் என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள்.
இவர்களின் குடியிருப்புகள் 'குஞ்சு' என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள் ஒரே மாதிரியானவர்கள், பெரும்பாலும் பேச்சுவார்த்தை திருமணத்தை கடைப்பிடிக்கின்றனர், இருப்பினும் இவர்களிடையே பல காதல் திருமணங்களும் நடைபெறுகின்றது.
தற்போது இரவுலா சமூகத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார். இவர்கள் பெரும்பாலும் காபி தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் விவசாயத் தொழிலாளர்களாகவும், சிலர் வனத்துறையிலோ அல்லது பிற தொழில்களிலோ வேலை செய்கிறார்கள். யெரவுலா பழங்குடியினர் மந்திரங்கள் மற்றும் ஆன்மீகத்தை நம்புகிறார்கள். மேலும் இவர்கள் சாமுண்டேஸ்வரியம்மா மற்றும் காவேரியம்மா போன்ற இந்து தெய்வங்களை வழிபாடு செய்கின்றனர். இவர்கள் தாங்கள் சொந்தமாகவே, மருந்துகளை தயாரித்து பயன்படுத்துகின்றனர்.[4]
இவர்கள் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் வகுப்பில் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017.
- ↑ "Ravula". Ethnologue.
- ↑ "An overview of tribal economy". Shodhaganga. Jan 2013. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/24419/11/11_chapter4.pdf.
- ↑ Sinha, Anil Kishore (2008). Bio-social Issues in Health. Northern Book Centre. p. 506. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172112257.
கேரளத்தில் ஆதிவாசிகள் |
---|
• அடியர் • அரணாடர் • ஆளார் • எரவள்ளர் • இருளர் • காடர் • கனலாடி • காணிக்காரர் • கரவழி • கரிம்பாலன் • காட்டுநாயக்கர் • கொச்சுவேலன் • கொறகர் • குண்டுவடியர் • குறிச்யர் • குறுமர் • சிங்கத்தான் • செறவர் • மலையரயன் • மலைக்காரன் • மலைகுறவன் • மலைமலசர் • மலைப்பண்டாரம் • மலைபணிக்கர் • மலைசர் • மலைவேடர் • மலைவேட்டுவர் • மலையடியர் • மலையாளர் • மலையர் • மண்ணான் • மறாட்டி • மாவிலர் • முடுகர் • முள்ளுவக்குறுமன் • முதுவான் • நாயாடி • பளியர் • பணியர் • பதியர் • உரிடவர் • ஊராளிக்குறுமர் • உள்ளாடர் • தச்சனாடன் மூப்பன் • விழவர் • சோலநாயக்கர் |