உள்ளடக்கத்துக்குச் செல்

2023 துரந்து கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2023 துரந்து கோப்பை (2023 Durand Cup) 2023 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டியான இபோட்டி, துரந்து கோப்பை கால்பந்து போட்டியின் 132 ஆவது பதிப்பாகும். ஆசிய கால்பந்து கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பதிப்பாகவும் இப்போட்டி சிறப்பு பெறுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனத்தின் நிதிநல்கை உறவுகளின் காரணமாக இப்போட்டி இந்தியன் ஆயில் துரந்து கோப்பை என்றும் அழைக்கப்படுகிறது.[1] இந்த ஆண்டு இரண்டாவது முறையாக இப்போட்டி ஒன்றுக்கு மேற்பட்ட விளையாட்டு அரங்குகளில் நடைபெறவுள்ளது.[2] அசாம், மேகாலயா மற்றும் மணிப்பூர் ஆகிய அரசாங்கங்களால் ஆதரிக்கப்படும் இந்திய ஆயுதப் படைகளின் கிழக்குப் பிரிவு மற்றும் மேற்கு வங்க அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் துரந்து கால்பந்து போட்டிச் சங்கம் இந்தப் போட்டியை நடத்துகிறது.[3] இந்தியன் சூப்பர் லீக் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அணிகள் மற்றும் ஆயுதப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு அணிகளுடன், இந்தியன் சூப்பர் லீக்கில் உள்ள ஒவ்வொரு கால்பந்து கழகமும் பங்கேற்கும் போட்டியின் இரண்டாவது பருவம் இதுவாகும்.[4]

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை சிட்டி கால்பந்து கழக அணியை வீழ்த்தி பெங்களூரு கால்பந்து கழக அணி வெற்றி பெற்று நடப்பு வெற்றியாளராக உள்ளது.[5]

அணிகள்

[தொகு]

போட்டியின் அமைப்புக் குழு முந்தைய பதிப்பிலிருந்த அணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது..[6]

இடங்கள்

[தொகு]

4 நகரங்கள் போட்டி நடைபெறும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன: அவை கொல்கத்தா, கோக்ரசார், சில்லாங்கு மற்றும் இம்பால் [7][8][9]

கொல்கத்தா சில்லாங்கு
விவேகானந்தர் யுப பாரதி கிரிரங்கன் சவகர்லால் நேரு அரங்கம்
கொள்ளளவு: 85,000 கொள்ளளவு: 30,000
</img>
கோக்ரசார் இம்பால்
சிறப்பு பகுதி விளையாட்டு மையம் குமான் லம்பக் மைதானம்
திறன்: கொள்ளளவு: 35,285

பரிசுத் தொகை

[தொகு]
பதவி தொகை
தங்க கையுறை 3 இலட்சம் (US$3,800)
தங்க பூட் 3 இலட்சம் (US$3,800)
தங்க பந்து 3 இலட்சம் (US$3,800)
இரண்டாம் இடம் 30 இலட்சம் (US$38,000)
வெற்றியாளர்கள் 50 இலட்சம் (US$63,000)
மொத்தம் 89 இலட்சம் (US$1,10,000)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Durand Cup Brings Something 'New', Along with AFC Cup Slot in 131st Edition". News18 (in ஆங்கிலம்). 2022-08-12. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-08-12.
  2. "Durand Cup: ২০ দলের ডুরান্ড কাপে অংশ নেবে আইএসএলের ১১টি দলই!". peoplesreporter.in (in Bengali). Archived from the original on 23 July 2022. பார்க்கப்பட்ட நாள் 24 May 2022.
  3. "Durand Cup 2022: More teams, multi-city format". 19 July 2022. https://sportstar.thehindu.com/football/indian-football/durand-cup-2022-teams-groups-format-multi-city/article65659310.ece. 
  4. "Nine-month calendar for Indian football from next season". 25 May 2022. https://timesofindia.indiatimes.com/city/goa/nine-month-calendar-for-indian-football-from-next-season/articleshow/91774042.cms. 
  5. "Durand Cup 2022 Final Highlights: Bengaluru beat Mumbai City 2-1 to become Champions". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-18. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
  6. "‘Scope to expand Durand Cup to 24 or 28 teams next year, have it in multi cities’". The Times of India. 2022-08-03. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/goa/scope-to-expand-durand-cup-to-24-or-28-teams-next-year-have-it-in-multi-cities/articleshow/93307165.cms. 
  7. Bhattacharjee, Neeladri (20 August 2022). "Durand Cup HIGHLIGHTS ATK Mohun Bagan loses 2–3 to Rajasthan United, ATKMB vs RUFC; Mariners lose first match". sportstar.thehindu.com. Kolkata, West Bengal: Sportstar. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
  8. TAT Correspondent, 5:31 AM (18 August 2022). "Rajnath Singh to attend opening match of Manipur edition of Durand cup today". assamtribune.com. Imphal, Manipur: The Assam Tribune. Archived from the original on 18 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  9. Leivon, Jimmy (17 August 2022). "Durand Cup: Ahead of Manipur derby between TRAU and Neroca, state government declares half holiday". indianexpressews.com. Imphal, Manipur: இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 17 August 2022. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2023_துரந்து_கோப்பை&oldid=3742168" இலிருந்து மீள்விக்கப்பட்டது