2021 ஐரோப்பிய வெள்ளம்
2021 ஐரோப்பிய வெள்ளம் (2021 European Floods) என்பது 2021 சூலை 14 அன்று தொடங்கிய கடுமையான வெள்ளத்தின் தொடர்ச்சியாகும். இவை முக்கியமாக பெல்ஜியம், ஜெர்மனி, லக்சம்பர்க், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் பல நதிப் படுகைகளை பாதித்துள்ளன.[1] குறிப்பாக, செருமனியில் சேதம் கடுமையானதாகும். இந்த வெள்ளத்தின் காரணமாக குறைந்தது 171 பேர் இறந்துள்ளனர். இதில் செருமனியில் 143 பேரும் [2] பெல்ஜியத்தில் 27 பேரும் மற்றும் இத்தாலியில் ஒருவரும் அடங்குவர்.[3][4][5] மேலும், சூலை 16 ஆம் தேதியன்று நிலையில் 1,300 பேர் எங்கிருக்கின்றனர் என்று கண்டறியப்படவில்லை.
மழை
[தொகு]2021 சூலை 14-15 அன்று, மேற்கு ஜெர்மனி மற்றும் அண்டை நாடான நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் முழுவதும் பலத்த மழை பெய்தது. ஒரு புயல் சின்னம் பிரான்சிலிருந்து கிழக்கு நோக்கி ஜெர்மனிக்கு நகர்ந்து இரண்டு நாட்கள் இப்பகுதியில் நிலை கொண்டிருந்தது. ஜெர்மனியில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் ரைன்லேண்ட்-பாலாட்டினேட் ஆகியவற்றில் மழைப்பொழிவு மிகவும் தீவிரமாக இருந்தது. அங்கு மழைப்பொழிவானது சராசரியாக 100 மி.மீ முதல் 150 மி.மீ (3.9 அங்குலம் முதல் 5.9 அங்குலம்) வரையில் இருந்தது. இந்த மழையளவு ஒரு மாதத்திற்கும் மேலான மழையளவிற்கு சமம் ஆகும். ரீஃபர்ஷெய்டில், 207 மி.மீ (8.1 அங்குலம்) மழைப்பொழிவு ஒன்பது மணி நேர காலத்திற்குள் இருந்தது. அதே நேரத்தில் கோல்னில் 24 மணி நேரத்தில் 154 மிமீ (6.1 அங்குலம்) மழைப்பொழிவு இருந்தது. ஜெர்மன் வானிலை சேவையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அளவு மழை பெய்யவில்லை. மேற்கு ஐரோப்பாவில் சாதனையளவு மழைப்பொழிவால் 2021 சூலை 14 அன்று பெல்ஜியம், செருமனி, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் வெள்ளம் தொடங்கியது. இதனால் பல ஆறுகள் தங்கள் கரைகளை உடைத்துக் கொண்டு ஓடின.
பாதிப்பு
[தொகு]செருமனியில் 143 பேர், இத்தாலியில் ஒருவர், பெல்ஜியத்தில் 27 பேர் உட்பட வெள்ளத்தால் 171 பேர் இறந்துள்ளனர்.[3] வாழ்நாள் நினைவுக்காலத்தில் செருமனியில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவாக இந்த வெள்ளப்பெருக்கு அமைகிறது.[6][7] சூலை 13 அன்றைய நிலையில் செருமனியில் 1,300 பேரைக் காணவில்லை.[8]
பெல்ஜியம்
[தொகு]சூலை 15 ம் தேதி, சுமார் 200,000 மக்கள் தொகை கொண்ட பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகர்ப்புறப் பகுதியான லீஜில் வசிப்பவர்கள் அனைவரும் மியூசே ஆறு அதன் கரைகளை உடைக்கக்கூடும், அணைப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டது.[9][10] சூலை 15 ஆம் தேதி வரை, லீஜின் நகர மையத்திற்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. வெளியேற்றத்தின் ஒரு பகுதியாக மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.[11] சூலை 16 க்குள், லிம்பர்க் மாகாணத்தில் உள்ள பல சிறிய நகராட்சிகளின் மக்களையும் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதலாக, பலத்த வெள்ளம் காரணமாக, லீஜ் மற்றும் நாமூர் மாகாணங்களில் உள்ள பல நகராட்சிகள் குடிநீர் இல்லாமல் இருந்தன.[12] வல்லோனியா பகுதியில் உள்ள அனைத்து தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன,[13] மேலும், சுமார் 21,000 பேர் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தனர். க்ரூபாண்டில் ஒரு பயணிகள் தொடருந்து தடம் புரண்டது.[14] தொடருந்து வலையமைப்பின் ஒட்டுமொத்த சேதங்களை சரிசெய்ய பல வாரங்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[15]
ஜெர்மனி
[தொகு]இந்த வெள்ளங்கள் ஜெருமனியின் வாழ்நாள் ஆய்வுக்காலத்தில் மிக மோசமான அழிவினை ஏற்படுத்தியதாக இருந்துள்ளது.[16][17][18] சூலை 16 ஆம் நாள் அன்றைய நிலையில், 1,300 நபர்கள் இருக்கும் இடம் அறியப்படாமல் காணமல் போனவர்களாக உள்ளனர்,[19] சில இடங்களில் பகுதியளவில் அலைபேசி வலையமைவு வீழ்ந்து போனதால் தொலைந்து போனவர்களைத் தொடர்பு கொள்வது என்பது சிரமமான காரியமாக உள்ளது.[20] 15000 எண்ணிக்கையிலான காவலர்கள், படைவீரர்கள் மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.[21]
இத்தாலி
[தொகு]புயல்கள் வடகிழக்கு இத்தாலியையும் அடைந்து விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவித்தன. டிரென்டினோ-ஆல்டோ அடிஜில் காற்றினால் விழுந்த மரம் ஒன்று கம்பி வடத்தில் இயங்கும் இழுவை வண்டியை சேதப்படுத்தியது. மேலும், பல சாலைகள் போக்குவரத்திற்கு கிடைக்காமல் முடங்கியுள்ளன. வெனிடோவில் இந்தப் புயல், வெள்ளம் காரணமாக ஒருவர் இறந்துள்ளார்.[22]
வெள்ளமும் காலநிலை மாற்றமும்
[தொகு]இந்த எதிர் பாராத வெள்ளம், பசிபிக் வடமேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகளைத் தொடர்ந்து நிகழ்ந்ததால், காலநிலை மாற்றத்திற்கான சாத்தியமான தொடர்பை மதிப்பீடு செய்ய விஞ்ஞானிகளைத் தூண்டியது.[23][24][25][26] வெள்ளத்திற்கு முன்னர், காலநிலை மாற்றத்தின் விளைவாக மோசமான வானிலை நிகழ்வுகள் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.[26][27] இத்தகைய தீவிர நிகழ்வுகளாக, கடுமையான மழைப்பொழிவுகள் அடங்கும் என்றும், வளிமண்டலத்தின் வெப்பநிலையின் அதிகரிப்பு அதிக நீராவியை உறிஞ்சுவதற்கு வழிவகுக்கும் எனவும், இதன் விளைவாக அதிக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.[28][29][30] காலநிலை மாற்றத்தின் விளைவாக அதிவேகக் காற்றுப்புனல் ஒழுங்கற்றதாக மாறியிருக்கலாம் என்றும், இது தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.[24][30][31] இருப்பினும், வெள்ளம் ஏற்படுவதில் காலநிலை மாற்றத்தின் பங்கினைப் புரிந்து கொள்ள ஆராய்ச்சியும் காலநிலைத் தரவுகளில் பகுப்பாய்வும் தேவை.[26][28]
பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மைக்கேல் ஈ. மான் அதிவேகக் காற்றுப்புனலை ஆய்வு செய்து, "அலை அதிர்வு" என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு "வானிலை அமைப்புகளை கட்டுப்படுத்துகிறது" என்று முடிவு செய்தார்.[26] ஆனால் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு அலை அதிர்வு காரணமாக இருந்ததா என்று சொல்வது மிக இயலாது என்றும் தெரிவித்தார். நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் ஹேலி ஃபோலர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கை கோர்ன்ஹுபர் ஆகியோர் அதிவேகக் காற்றுப்புனலின் மந்தநிலையை ஒரு சாத்தியமான காரணமாக விளக்கமாக சுட்டிக்காட்டினர்.[26] அம்போல்ட்-பல்கலைக்கழக பெர்லினின் கார்ல்-ப்ரீட்ரிக் ஷ்லூஸ்னர், காலநிலை மாற்றம் பங்களித்ததா என்பது கேள்வி அல்ல நிகழ்வு, ஆனால் "எவ்வளவு" என்பது முக்கியம்.[31] போட்ஸ்டாம் வானிலை பாதிப்பு விளைவு ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர் டைட்டர் கெர்டன், வெள்ளம் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளின் அளவு தற்போதைய காலநிலை மாற்ற மாதிரி கணிப்புகளைவிட் மாறுபட்டு இருப்பதாக குறிப்பிடுகிறார். தீவிர வானிலையின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தில் திடீர் அதிகரிப்பு என்பது ஓர் முனைப்புள்ளி கடந்து விட்டது எனக் கொள்ளலாம்.[32] ஆர்க்டிக் பனியின் இழப்புகள் பலவீனமான அதிவேகக் காற்றுப்புனல் அதிக தீவிரமான வானிலைக்கு வழிவகுக்கும் என்று போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் ஸ்டீபன் ரஹ்ம்ஸ்டோர்ஃப் எச்சரித்தார். "இந்த விவேகமான காலநிலை அமைப்புடன் நாம் விளையாடக்கூடாது என்றும் தெரிவித்தார்.[33] போலோக்னா பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆய்வாளரும், காலநிலை மாற்றம் குறித்த யூரோ-மத்திய தரைக்கடல் மைய அறக்கட்டளையின் தலைவருமான அன்டோனியோ நவர்ரா, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு செறிவு அதிகரிப்பதற்கும், வறண்ட காலத்திற்கும், வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் அதிர்வெண் மற்றும் தீவிரத்திற்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பு இருப்பதாக கூறினார்.[34][35]
வெள்ளப்பெருக்குக்குப் பின்னர், உலக வானிலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.[36]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "More flooding for Europe". BBC Weather. BBC. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Mittlerweile 143 Tote nach Unwetter - Staudamm droht zu brechen" (in de). Frankfurter Rundschau. 17 July 2021. https://www.fr.de/panorama/unwetter-tief-bernd-regen-nordrhein-westfalen-rheinland-pfalz-todesfaelle-news-zr-90867174.html.
- ↑ 3.0 3.1 "Germany floods: At least 42 dead and dozens missing after record rain". BBC News. 15 July 2021. https://www.bbc.com/news/world-europe-57846200. பார்த்த நாள்: 15 July 2021.
- ↑ Morris, Loveday; Hassan, Jennifer (15 July 2021). "Severe flooding sweeps Germany and Belgium, killing at least 46 amid 'unusual' rains". The Washington Post இம் மூலத்தில் இருந்து 15 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210715103702/https://www.washingtonpost.com/world/2021/07/15/germany-flooding-buildings-collapse/.
- ↑ "Inondations en Wallonie: au moins 23 morts, plus de 41.000 ménages sans électricité (direct)" (in French). Le Soir (Brussels). 16 July 2021 இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716111223/https://www.lesoir.be/384339/article/2021-07-16/inondations-en-wallonie-au-moins-23-morts-plus-de-41000-menages-sans-electricite.
- ↑ "Hundreds Missing and at Least 69 Are Dead in Western Europe Flooding". The New York Times. 15 July 2021. https://www.nytimes.com/2021/07/15/world/europe/flooding-germany-belgium-switzerland-netherlands.html. பார்த்த நாள்: 15 July 2021.
- ↑ "Dozens dead in Germany as rain continues to batter western Europe". euronews (in ஆங்கிலம்). 15 July 2021. Archived from the original on 15 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Floods in Germany claim 81 victims, more than 1,000 missing". Reuters. 16 July 2021. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Floods in Germany and Other Parts of Western Europe Leave at Least 40 Dead" (in en-US). 15 July 2021. https://www.nytimes.com/2021/07/15/world/europe/flooding-germany-belgium-switzerland-netherlands.html.
- ↑ "'Leave if you can': Mayor of Liège seeks to evacuate city". The Brussels Times (in ஆங்கிலம்). 15 July 2021. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "Une partie de la ville de Liège en cours d'évacuation après les inondations". www.20minutes.fr (in பிரெஞ்சு). Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "Severe rainfall: Tap water in some Walloon municipalities now undrinkable". The Brussels Times (in ஆங்கிலம்). 15 July 2021. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
- ↑ "Zugverkehr im Süden des Landes gestoppt – Autofahrten vermeiden" (in de). 15 July 2021. https://brf.be/national/1506071/.
- ↑ "Railways flooded in Western Europe". Raitech. 15 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Flooding latest: 14 dead, four missing and thousands without electricity". 16 July 2021. https://www.thebulletin.be/flooding-latest-14-dead-four-missing-and-thousands-without-electricity.
- ↑ "Germany floods: Dozens killed after record rain in Germany and Belgium" (in en-gb). BBC News. 15 July 2021 இம் மூலத்தில் இருந்து 15 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210715113030/https://www.bbc.com/news/world-europe-57846200.
- ↑ Eddy, Melissa (15 July 2021). "Hundreds Missing and at Least 69 Are Dead in Western Europe Flooding" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 15 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210715100547/https://www.nytimes.com/2021/07/15/world/europe/flooding-germany-belgium-switzerland-netherlands.html.
- ↑ "Dozens dead in Germany as rain continues to batter western Europe". euronews (in ஆங்கிலம்). 15 July 2021. Archived from the original on 15 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Floods in Germany claim 81 victims, more than 1,000 missing". Reuters. 16 July 2021. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Unwetter: Mindestens 105 Tote – Hochwasser in NRW noch nie so verheerend" (in de). Die Welt. 16 July 2021 இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716193233/https://www.welt.de/vermischtes/article232511549/Unwetter-Mindestens-105-Tote-Hochwasser-in-NRW-noch-nie-so-verheerend.html.
- ↑ "Europe floods: At least 120 dead and hundreds unaccounted for". BBC News. 16 July 2021 இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716183730/https://www.bbc.co.uk/news/world-europe-57858829.
- ↑ "Maltempo al Nord, danni e una vittima in Veneto. Albero cade su una funivia". rainews.it. rainews.it. 14 July 2021 இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716075305/https://www.rainews.it/dl/rainews/media/ContentItem-ad2b12f7-bf03-4f3d-aeb7-2213e0d70202.html#foto-1.
- ↑ Binnie, Isla; Abnett, Kate (17 July 2021). "As floods hit western Europe, scientists say climate change hikes heavy rain". Reuters. https://www.reuters.com/business/environment/floods-hit-western-europe-scientists-say-climate-change-hikes-heavy-rain-2021-07-17/.
- ↑ 24.0 24.1 Watts, Jonathan (16 July 2021). "What is causing the floods in Europe?" (in en). தி கார்டியன். https://www.theguardian.com/environment/2021/jul/16/what-is-causing-floods-europe-climate-change.
- ↑ Talbot, Hope (15 July 2021). "Is the severe flooding in Germany and Belgium down to climate change?" (in en). euronews. https://www.euronews.com/green/2021/07/15/what-does-severe-flooding-in-western-europe-tell-us-about-the-future-of-climate-change.
- ↑ 26.0 26.1 26.2 26.3 26.4 Fountain, Henry; Schwartz, John (16 July 2021). "'It Is All Connected': Extreme Weather in the Age of Climate Change". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2021/07/16/climate/europe-floods-climate-change.html.
- ↑ Chazan, Guy (16 July 2021). "Climate change blamed for devastating German floods". Financial Times. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 28.0 28.1 Titz, Sven (17 July 2021). "Die Unwetter in Deutschland: Ein Zusammenspiel von Wetterlage, Klimawandel und geografischen Eigenschaften der Region" (in de). Neue Zürcher Zeitung. https://www.nzz.ch/wissenschaft/die-ueberschwemmungen-in-deutschland-kamen-durch-ein-zusammenspiel-von-wetterlage-klimawandel-und-geografischen-eigenschaften-der-region-zustande-ld.1635962.
- ↑ Austin, Henry (16 July 2021). "Two major factors may explain why European flooding turned so deadly so fast" (in en). NBC News. https://www.nbcnews.com/news/world/rapid-rain-slow-response-blamed-high-number-flooding-deaths-europe-n1274241.
- ↑ 30.0 30.1 "Hochwasser: Welchen Einfluss hat der Klimawandel auf die Fluten?" (in de). Handelsblatt. 16 July 2021. https://www.handelsblatt.com/politik/deutschland/hochwasser-welchen-einfluss-hat-der-klimawandel-auf-die-fluten/27428750.html?ticket=ST-8507728-kvEgW41SdoILOwfdwscN-ap4.
- ↑ 31.0 31.1 Bleiker, Carla (16 July 2021). "Hochwasser: Diese Rolle spielen Jetstream und Mondumlaufbahn | DW | 16 July 2021" (in de-DE). Deutsche Welle. https://www.dw.com/de/hochwasser-diese-rolle-spielen-jetstream-und-mondumlaufbahn/a-58292603.
- ↑ "Climate scientists shocked by scale of floods in Germany" (in en). The Guardian. 16 July 2021. https://www.theguardian.com/environment/2021/jul/16/climate-scientists-shocked-by-scale-of-floods-in-germany.
- ↑ Vögele, Ferdinand (15 July 2021). "Extrem-Hochwasser in Rheinland-Pfalz – Welche Rolle spielt der Klimawandel?" (in de). SWR3 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210717070837/https://www.swr3.de/aktuell/nachrichten/hochwasser-unwetter-klimawandel-experte-rahmstorf-100.html.
- ↑ "Alluvioni in Germania, Antonio Navarra: "Eventi più estremi per il riscaldamento globale"" (in it). ilsecoloxix.it. ilsecoloxix.it. 16 July 2021. https://www.ilsecoloxix.it/green-and-blue/2021/07/16/news/alluvioni_in_germania_antonio_navarra_eventi_piu_estremi_per_il_riscaldamento_globale_-310545139/.
- ↑ "Alluvioni in Germania, Antonio Navarra: "Eventi più estremi per il riscaldamento globale"" (in it). repubblica.it. repubblica.it. 14 July 2021. https://www.repubblica.it/esteri/2021/07/15/news/germania_belgio_alluvioni_global_warming_cambiamento_climatico_antonio_navarra_intervista-310494160/.
- ↑ "Deadly flooding, heatwaves in Europe, highlight urgency of climate action" (in en). UN News (UN). 16 July 2021. https://news.un.org/en/story/2021/07/1096012.