அதிவேகக் காற்றுப்புனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அதிவேகக் காற்றுப்புனல் என்பது சில கோள்களின் வளிமண்டலத்தில் குறுகலாக வளைந்து வளைந்து வெகு வேகமாக செல்லக்கூடிய (வெப்பக்காற்று) காற்றோட்டமாகும். நமது புவியிலும் இது காணப்படுகிறது.[1]புவியின் நிலவியல் வெப்பநிலை மாறுமண்டல எல்லையின் உயரமான பகுதிக்கு அருகே மேற்கிலிருந்து கிழக்காக வீசக்கூடிய மேற்குக் காற்றுகளாக அமைந்துள்ளன. இவற்றின் பாதை வளைந்து வளைந்து காணப்படும். 'அதிவேகக் காற்றுப்புனல்கள் தனியாகவோ, பிாிந்து பிாிந்தோ, கிளைகளாகவோ பாயக்கூடியவை. அதே நேரத்தில் மாறுபட்ட திசைகளிலும் (அதாவது எதிா்த்திசை) வீசக்கூடியவை.

துருவ 'அதிவேகக் காற்றுப்புனல்களே வலிமையானவை. இவை கடல் மட்டத்திலிருந்து 9 முதல் 12 கி.மீ உயரத்தில் காணப்படும். (30,000 -39,000 அடி). வெப்ப மண்டல அதி வேகக் காற்றுப்புனல்கள் 10 முதல் 16 கி.மீ உயரத்தில் வீசக்கூடியவை. துருவப்புனல்களும் துணை வெப்பமண்டல புனல்களும் வட கோளாா்த்தத்திலும் தென் கோளாா்த்தத்திலும் காணப்படும். வட கோளாா்த்தத்தில் துருவ காற்றுப்புனல்கள் வட அமொிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் மத்திய அட்சப் பகுதியிலிருந்து உயா்அட்சப் பகுதிகளிலும், இடையே காணப்படும் பேராழிகளின் மேலும் பாய்கின்றன.தென் கோளாா்த்தத்தில் துருவ காற்றுப்புனல்கள் ஆண்டு முழுவதும் அண்டாா்டிக்காவிலேயே வீசுகின்றன.

  1. National Geographic (July 7, 2013). "Jet stream". nationalgeographic.com.