உள்ளடக்கத்துக்குச் செல்

2020 ஏகியன் கடல் நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏகியன் கடல் நிலநடுக்கம்
Aegean Sea earthquake
துருக்கி, இசுமீரில் கட்டட இடிபாடு
அ.நி.அ. veLiyidda நிலநடுக்கத்தின் செறிவைக் காட்டும் வரைபடம்
2020 ஏகியன் கடல் நிலநடுக்கம் is located in Aegean Sea
2020 ஏகியன் கடல் நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு6.9 Mww[1]
7.0 Mww (USGS)[2]
6.6 Mww[3]
ஆழம்21.0 கிமீ (அ.நி.அ.)[2]
16.54 கிமீ (AFAD)[3]
11.8 கிமீ[4]
வகைசாதாரணம்
பாதிக்கப்பட்ட பகுதிகள்சாமோசு, கிரேக்கம், இசுமீர், துருக்கி
அதிகபட்ச செறிவுVIII (தீவிரம்)
ஆழிப்பேரலைஆம்
பின்னதிர்வுகள்பல தடவைகள் (அதிக பட்சம் Mw 5.2)
உயிரிழப்புகள்கிரேக்கம்: 2 இறப்புகள், 19 பேர் காயம்[5]
துருக்கி: 114 இறப்புகள், 1,035 பேர் காயம்[6]

2020 ஏகியன் கடல் நிலநடுக்கம் (2020 Aegean Sea earthquake) கிரேக்கத் தீவான சமோசுக்கு வடகிழக்கில் சுமார் 14 கி.மீ (8.7 மைல்) தொலைவில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று 7.0 ரிக்டர் அளவில் பதிவானது. இந்நிலநடுக்கத்தின் விளைவாகப் பல கட்டடங்கள் சேதமடைந்தன அல்லது இடிந்து விழுந்தன. கிரேக்கத்தின் கார்லோவாசியில் உள்ள கன்னி மரியாள் தேவாலயத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருக்கிய நகரமான இசுமீரில் பல கட்டடங்கள் சேதமடைந்தன, இரவில் மீட்பு முயற்சிகள் தொடர்ந்ததால் இரு நாடுகளிலும் அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடங்களில் தொடர்ந்து மேற்கோள்ளப்பட்டன.

கிரேக்கத்தில் இருவர் உயிரிழந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.[7] துருக்கியில் 114 பேர் உயிரிழந்தனர்,[8] 1035 பேர் காயமடைந்தனர்.[9] இதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை இந்த நிகழ்வை 2020 ஆம் ஆண்டின் மிக மோசமான நிலநடுக்கமாக ஆக்கியுள்ளது.

நிலநடுக்கம்

[தொகு]

கிழக்கு ஏகியன் கடலில் மிதமான ஆழத்தில் யூரேசிய தட்டுக்குள் ஒர் இயல்பான பாறைப் பிளவின் விளைவாக இந்த பூகம்பம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஆண்டுக்கு சுமார் 10 மி.மீ. என்ற வீதத்தில் வடக்கு நோக்கி ஐரோவாசியாவுக்கு நகரும் பிரதான ஆப்பிரிக்கத் தட்டின் எல்லைக்கு அருகே 250 கி.மீ வடக்கில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.[10] எனவே இந்த பூகம்பம் அதன் இருப்பிடத்தின் காரணமாக ஏற்பட்ட ஒரு பூகம்பமாக கருதப்படுகிறது. இப்பூகம்பத்தைத் தொடர்ந்து துருக்கி 114 முறை நிலநடுக்க அதிர்வுகளால் பாதிக்கப்பட்டது.[11]

ஆழிப்பேரலை

[தொகு]

பல சமூக ஊடக இடுகைகள் பூகம்பத்தைத் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் துறைமுகங்கள் வழியாக நீர் விரைந்து வந்ததைக் காட்டின. இகாரியா, கோசு, சியோசு மற்றும் சமோசு [12] தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களில் கடற்கரை மாவட்ட மைய நகரமான செபெரிகிசரில் சுனாமியின் பெரும் பாதிப்பும் உயிரிழப்பும் பதிவாயின.[13][14]

சேதங்கள்

[தொகு]

இசுமிரில் குறைந்தது ஆறு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக துருக்கிய உள்துறை மந்திரி சேலிமேன் சோய்லு தொடக்கத்தில் கூறினார், ஆனால் நகர மேயர் துனே சோயர் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 20 கட்டிடங்கள் இருக்கலாம் என்று அறிவித்தார்.[12] தீவு முழுவதும் கட்டிடங்கள் சேதமடைந்திருந்தாலும் மிக மோசமான நிலை பெரிய தேவாலயப் பகுதி இடிந்து விழுந்த கார்லோவாசியில் [15] இருந்ததென சமோசு தீவிலிருந்த கிரேக்க அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர். கிரேக்கத்தில் பூகம்பம் தொடர்பான இறப்புகள் 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஏகியன் கடல் பூகம்பத்திற்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.[16] இசுமிரின் பேராக்லே மற்றும் போர்னோவா மாவட்டங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.[17]

மீட்பு நடவடிக்கைகள்

[தொகு]

பூகம்பத்திற்குப் பிறகு சுமார் 40 அவசர மருத்துவ ஊர்திகள், 35 அவசர மீட்புக் குழுக்கள் மற்றும் இரண்டு அவசரமருத்துவ திருகிருக்கை வானூர்திகள் [18] சம்பவ இடத்திற்கு வந்துவிட்டதாகக் துருக்கிய சுகாதார அமைச்சர் பக்ரெடின் கோகா தெரிவித்தார். துருக்கியின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தன்னுடைய விமானங்களில் ஒன்றை இரண்டு மீட்புக் குழுக்களுடன் எடிமெசுகட் விமான தளத்திலிருந்து அனுப்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.[19] துருக்கிய செம் பிறை அமைப்பும் உடனடியாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க ஆறு நகரங்களில் இருந்து குழுக்களை அனுப்பியது [20]. 1,200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இசுமீரில் குறைந்தது 13 கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியவர்களை காப்பாற்றும் மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டனர்.[21] இரவு வரை தொடர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் 70 பேர் மீட்கப்பட்டதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் அரசாங்கம் ஒரே இரவில் சுமார் 2,000 பேர் தங்குவதற்கான கூடாரங்களை அமைத்தது.[5]

பன்னாட்டு உதவிகள்

[தொகு]

அசர்பைசான்[22], பிரான்சு [23], இசுரேல் [24] போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி கரங்கள் நீட்டினர். இதைத் தொடர்ந்து நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் [25] போன்ற அமைப்புகளும் இந்நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தன. கிரேக்க பிரதம மந்திரி கிரியாகோசு மிட்சோடாகிசு மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஆகியோர் பூகம்பத்தைத் தொடர்ந்து ஒன்றுபட்ட அறிக்கைகளை பரிமாறிக்கொண்டனர் மற்றும் ஒருவருக்கொருவர் உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்தனர்.[26]

நிலநடுக்கத்தை வரைபடமாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பெரிதும் உதவியது.[27]. மேலும் பகுப்பாய்வு செய்யப்பட்ட செயற்கைகோள் படங்களையும் வழங்கியது [28]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "30 Ekim 2020 Ege Denizi Depremi" [30 October 2020 Aegean Sea Earthquake] (PDF). Kandilli Observatory. 30 October 2020. Archived from the original (PDF) on 1 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 November 2020.
  2. 2.0 2.1 "M 7.0 – 15 km NNE of Néon Karlovásion, Greece". USGS. Archived from the original on 30 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  3. 3.0 3.1 30 Ekim 2020EGE DENİZİ, SEFERİHİSAR(İZMİR)AÇIKLARI (17,26 km)Mw 6.6DEPREMİNE İLİŞKİNÖN DEĞERLENDİRME RAPORU transl. 30 October 2020EGE SEA, SEFERİHİSAR (İZMİR) OPENINGS (17.26 km) Mw 6.6 EVALUATION REPORT ON THE EARTHQUAKE deprem.afad.gov.tr, accessed 6 November 2020
  4. B.Ü. KANDİLLİ RASATHANESİ ve DAE.BÖLGESEL DEPREM-TSUNAMİ İZLEME ve DEĞERLENDİRME MERKEZİ30 EKİM2020EGE DENİZİ DEPREMİBASIN BÜLTENi transl. IT. KANDİLLİ OBSERVATORY and DAE. REGIONAL EARTHQUAKE-TSUNAMI MONITORING AND ASSESSMENT CENTER 30 OCTOBER2020 SEA EARTHQUAKE BULLETIN www.koeri.boun.edu.tr, accessed 6 November 2020
  5. 5.0 5.1 "Earthquake hits Greece and Turkey, bringing deaths and floods". BBC News. 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  6. "Three-year-old girl rescued 91 hours after Turkey quake". Al Jazeera.
  7. RTnews (2020-10-31). "Turkey's Erdogan & Greek PM Mitsotakis exchange words of SUPPORT after deadly Aegean Sea quake hits both nations". EMEA Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-05.{{cite web}}: CS1 maint: url-status (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Son Dakika! İzmir'deki depremde hayatını kaybedenlerin sayısı 49'a yükseldi". Haberler.com (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-01.
  9. Staff, Reuters (2020-11-04). "Aegean quake toll rises to 116 as Turkey ends search" (in en). Reuters. https://uk.reuters.com/article/uk-turkey-quake-idUKKBN27K0HM. 
  10. "M 7.0 - 14 km NE of Néon Karlovásion, Greece". Earthquake. பார்க்கப்பட்ட நாள் 2020-10-30.{{cite web}}: CS1 maint: url-status (link)
  11. Sariyuce, Isil; Salem, Mostafa; Dewan, Angela (30 October 2020). "Powerful earthquake jolts Turkey and Greece, killing at least 14". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  12. 12.0 12.1 Specia, Megan; Stevis-Gridneff, Matina (30 October 2020). "Earthquake Rattles Western Turkey and Greece, Leveling Buildings" (in en-US). த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/10/30/world/europe/greece-turkey-earthquake-izmir.html. 
  13. "Seferihisar'da tsunami: Sokakları deniz suyu bastı". NTV. 30 October 2020. https://www.ntv.com.tr/video/turkiye/izmirde-meydana-gelen-6-6-siddetindeki-depremin-ardindan-sular-yukseldi,Z6XWjM13IEaI_n2A5_v5ng. பார்த்த நாள்: 30 October 2020. 
  14. "Son dakika! İzmir'de tsunami paniği". Milliyet. 30 October 2020. https://www.milliyet.com.tr/gundem/son-dakika-izmirde-tsunami-panigi-6342969. பார்த்த நாள்: 30 October 2020. 
  15. Liakos, Chris; Labropoulou, Elinda (30 October 2020). "Minor injuries and building damage reported on Greek island". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  16. Labropoulou, Elinda (30 October 2020). "Buildings damaged on Greek island of Samos". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  17. "Son dakika: Türkiye'nin gözü kulağı deprem bölgesinde... İşte İzmir depremiyle ilgili dakika dakika son gelişmeler" (in tr). www.hurriyet.com.tr (Hürriyet). https://www.hurriyet.com.tr/galeri-son-dakika-izmirde-meydana-gelen-6-6-buyuklugundeki-depremin-ardindan-ilk-goruntuler-41650162. 
  18. Akyavas, Aziz; Smith, Saphora; Mulligan, Matthew (30 October 2020). "Strong quake hits coastal Turkey and Greece, killing at least 6 and injuring over 200". ராய்ட்டர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 30 October 2020 – via யாகூ! செய்திகள்.
  19. "TSK'ye ait uçak AFAD ve jandarma ekiplerini bölgeye ulaştırmak için hareket etti". CNN Türk (in துருக்கிஷ்). 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  20. "Turkish Red Crescent mobilizes food assistance teams". CNN (in துருக்கிஷ்). 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  21. "Powerful Quake in Aegean Sea Leaves 6 Dead; Buildings Toppled in Turkey, Greece". வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (in ஆங்கிலம்). 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  22. "Azerbaycan Cumhurbaşkanı Aliyev'den Başkan Erdoğan'a "yardıma hazırız" telefonu". Takvim (in துருக்கிஷ்). 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  23. Duncan, Conrad (30 October 2020). "Greece-Turkey earthquake: At least four dead after huge 7.0-magnitude tremor felt across both countries". The Independent (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  24. J. Frantzman, Seth; Jean, Celia (30 October 2020). "Following earthquake in Turkey, IDF offers to send aid". The Jerusalem Post (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  25. "Turkey-Greece earthquake: Children among 12 dead after powerful tremor hits in the Aegean Sea". Euronews (in ஆங்கிலம்). 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  26. "Erdoğan'dan Miçotakis'e teşekkür mesajı: Türkiye de Yunanistan'a her türlü yardıma hazır". Euronews (in துருக்கிஷ்). 30 October 2020. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.
  27. EMSR476 Izmir: Map #01
  28. High resolution satellite image dated 31 October 2020 taken after the earthquake off Seferihisar, İzmir