இசுமீர்
இசுமீர் İzmir | |
---|---|
நகரம் | |
![]() | |
அடைபெயர்(கள்): எகியனின் முத்து Pearl of the Aegean | |
நாடு | ![]() |
பிரதேசம் | எகியன் பிரதேசம் |
மாகாணம் | இசுமீர் மாகாணம் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | அசிஸ் கொக்லு (CHP) |
பரப்பளவு | |
• நகரம் | 7,340.00 km2 (2,833.99 sq mi) |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2014)[1][2] | |
• நகரம் | 28,47,691 |
• அடர்த்தி | 390/km2 (1,000/sq mi) |
• பெருநகர் | 41,13,072 |
நேர வலயம் | EET (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | EEST (ஒசநே+3) |
அஞ்சல் குறியீடு | 35xxx |
தொலைபேசி குறியீடு | (+90) 232 |
Licence plate | 35 |
இணையதளம் | www.izmir.bel.tr www.izmir.gov.tr |
இசுமீர் (İzmir) அனத்தோலியாவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பெருநகரம் ஆகும். இது இசுதான்புல், அங்காரா என்பவற்றுக்கு அடுத்த துருக்கியில் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.[1][2] இசுமியரின் பெருநகரப் பகுதி இசுமீர் வளைகுடா நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நகரத்தின் பழைய நகரம் சிமிர்னா (சிமிர்னி, Smyrna, Smyrni கிரேக்க மொழி: Σμύρνη) என்று அழைக்கப்பட்டுவருகிறது. இந்த நகரம் இலத்தீன் நெடுங்கணக்கின் துருக்கிய பின்பற்றலில் 1928 இசுமீர் என்ற பெயருடன் சர்வதேச அங்கீகாரம் பெற முன் பொதுவாக ஆங்கிலத்தில் சிமிர்னா என்ற பெயராலேயே குறிப்பிடப்பட்டது.
2014 இன் மக்கள் தொகை அடிப்படையில் இசுமீரின் மக்கள் தொகை 2,847,691 ஆகும். இசுமீர் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 4,113,072 ஆகும்.[1][2]
கல்வி[தொகு]
கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீரில் நிறுவப்பட்டுள்ளன:
- அயோனியான் பல்கலைக்கழகம் - இந்நகரத்தின் முதலாவது பல்கலைக்கழகம் இதுவாகும். இது 1920 இல் நிறுவப்பட்டது. இது கிரேக்க கணிதவியலாளரும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மிக நெருங்கிய நண்பரும் ஆன கொன்சுதாந்தின் கராதியோடோரியால் கிரேக்க அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளைக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும், அது கிரேக்க-துருக்கியப் போர் நிலை காரணமாக இயங்க முடியாமல் போனது.[3][4]
- எஜ் பல்கலைக்கழகம் – 1955 இல் நிறுவப்பட்டது.
- டொகுழ் எய்ளுள் பல்கலைக்கழகம் – 1982 இல் நிறுவப்பட்டது.
- இசுமீர் பொருளியற் பல்கலைக்கழகம் – இது 2002 இல் இசுமீர் வர்த்தகக் கழகத்தின் முயற்சியால் தனியார் துறையாக நிறுவப்பட்டது.
- யாசார் பல்கலைக்கழகம் – 2001ல் யாசிர் கோல்டிங்கால் நிறுவப்பட்டது.
- இசுமீர் பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2012-02-12 at the வந்தவழி இயந்திரம் – 2007 இல் நிறுவப்பட்டது.
- கட்டிப் செலேபி பல்கலைக்கழகம் – 2010 இல் நிறுவப்பட்டது.
- சிபா பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2011-08-09 at the வந்தவழி இயந்திரம் – 2010 இல் நிறுவப்பட்டது..
கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் இசுமீருக்கு அருகில் அமைந்துள்ளது:
- இசுமீர் தொழினுட்பக் கல்வி நிலையம் – 1992ல் நிறுவப்பட்டது. இசுமீர் தொழினுட்ப கல்வி நிலையமே இந்நகரத்தின் முதலாவது தொழினுட்ப கல்வி நிலையம் ஆகும்.
- கெடிழ் பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2010-02-14 at the வந்தவழி இயந்திரம் – 2009 இல் நிறுவப்பட்டது. இது மேனிமேனுக்கு அருகில் அமைந்துள்ளது.
மொத்தமாக ஒன்பது பல்கலைக்கழகங்கள் இசுமீரிலும், இசுமீருக்கு அருகிலும் அமைந்துள்ளன.
காலநிலை[தொகு]
இசுமீர் மத்தியதரைக்கடல் காலநிலையை (கோப்பென் காலநிலை வகைப்பாடு: சூடான கோடைகால மத்தியதரைக்கடல் காலநிலை) கொண்டுள்ளது. இது நீண்ட, சூடான மற்றும் வறண்ட கோடை காலத்தைக் கொண்டுள்ளது. இதன் குளிர்காலம் இலேசான குளிரையும் மற்றும் மழையாகவும் காணப்படும். இசுமீரின் வருடாந்த திடீர் மழைவீழ்ச்சி சராசரி 686 மில்லிமீட்டர்கள் (27 in) ஆகும்; ஆயினும் 77% மழைவீழ்ச்சி நவம்பர் தொடக்கம் மார்ச் வரையே வீழ்கின்றது. மிகுதி மழைவீழ்ச்சி ஏப்ரல் மூலம் மே தொடக்கம் செப்டெம்பர் மூலம் அக்டோபர் வரையும் வீழ்கின்றது. சிறிய அளவு மழைவீழ்ச்சி சூன் தொடக்கம் ஆகஸ்ட் வரை கிடைக்கபெறுகின்றது.
குளிர் காலத்தில் அதிக வெப்பநிலை வழமையாக 10 மற்றும் 16 °C (50 மற்றும் 61 °F) இற்கு இடைப்பட்டதாகவே காணப்படும். இசுமீரில் திசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரை சிலநேரங்களில் அரிதாகவே பனிப்பொழிவு இடம்பெறுகின்றது. கோடை காலத்தின் போது, காற்று வெப்பநிலை சூன் தொடக்கம் செப்டெம்பெர் வரை 40 °C (104 °F)ஆக அதிகமாக ஏறிச்செல்லும்; எனினும் வழமையாக 30 மற்றும் 36 °C (86 மற்றும் 97 °F) இற்கு இடையாகவே காணப்படுகிறது.
மழைவீழ்ச்சி பதிவு = 145.3 kg/m2 (29. செப்டம்பர் 2006)
பனிப்பொழிவு பதிவு = 8.0 cm (4. சனவரி 1979)
தட்பவெப்ப நிலைத் தகவல், இசுமீர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 22.4 (72.3) |
23.8 (74.8) |
30.5 (86.9) |
32.2 (90) |
37.5 (99.5) |
41.3 (106.3) |
42.6 (108.7) |
43.0 (109.4) |
40.1 (104.2) |
36.0 (96.8) |
29.0 (84.2) |
25.2 (77.4) |
43 (109.4) |
உயர் சராசரி °C (°F) | 12.4 (54.3) |
13.4 (56.1) |
16.4 (61.5) |
20.9 (69.6) |
26.1 (79) |
30.9 (87.6) |
33.2 (91.8) |
32.8 (91) |
29.1 (84.4) |
24.1 (75.4) |
18.5 (65.3) |
14.1 (57.4) |
22.66 (72.79) |
தினசரி சராசரி °C (°F) | 8.8 (47.8) |
9.4 (48.9) |
11.7 (53.1) |
15.9 (60.6) |
20.9 (69.6) |
25.7 (78.3) |
28.0 (82.4) |
27.6 (81.7) |
23.6 (74.5) |
18.9 (66) |
14.1 (57.4) |
10.6 (51.1) |
17.93 (64.28) |
தாழ் சராசரி °C (°F) | 5.8 (42.4) |
6.1 (43) |
7.9 (46.2) |
11.4 (52.5) |
15.6 (60.1) |
20.1 (68.2) |
22.7 (72.9) |
22.5 (72.5) |
18.8 (65.8) |
14.9 (58.8) |
10.7 (51.3) |
7.7 (45.9) |
13.68 (56.63) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −6.4 (20.5) |
−5.0 (23) |
−3.1 (26.4) |
0.6 (33.1) |
7.0 (44.6) |
10.0 (50) |
16.1 (61) |
15.2 (59.4) |
10.0 (50) |
5.3 (41.5) |
-0.1 (31.8) |
−4.0 (25) |
−6.4 (20.5) |
மழைப்பொழிவுmm (inches) | 118.6 (4.669) |
103.8 (4.087) |
75.3 (2.965) |
48.3 (1.902) |
26.9 (1.059) |
8.5 (0.335) |
1.9 (0.075) |
2.0 (0.079) |
17.3 (0.681) |
44.5 (1.752) |
95.5 (3.76) |
147.5 (5.807) |
690.1 (27.169) |
% ஈரப்பதம் | 68 | 63 | 62 | 58 | 55 | 48 | 42 | 47 | 53 | 60 | 68 | 70 | 57.8 |
சராசரி மழை நாட்கள் | 11.2 | 10.8 | 8.9 | 8.4 | 5.1 | 1.9 | 0.5 | 0.5 | 2.1 | 5.4 | 8.5 | 12.9 | 76.2 |
சூரியஒளி நேரம் | 133.3 | 141.3 | 195.3 | 219.0 | 294.5 | 342.0 | 375.1 | 353.4 | 300.0 | 226.3 | 159.0 | 124.0 | 2,863.2 |
Source #1: Turkish Meteorological Service,[5] World Meteorological Organization (precipitation data)[6] | |||||||||||||
Source #2: BBC Weather (humidity values)[7] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Turkey: Major cities and provinces". citypopulation.de. 2015-02-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-14 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ Agelopoulos, Georgios. "Ethnography and national priorities in the post-Ottoman context" (PDF). Department of Balkan, Slavic and Oriental Studies. 11 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Θεοδωρίδου Λίλα, Σωτηρίου Ζωή. "Η Βιβλιοθήκη του Ιωνικού Πανεπιστημίου Σμύρνης" (PDF). Πανεπιστήμιο Ιωαννίνων. 25 ஏப்ரல் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Official Statistics (Statistical Data of Provinces and districts)-İzmir" (Turkish). Turkish Meteorological Service. செப்டம்பர் 20, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 14, 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி)CS1 maint: Unrecognized language (link) - ↑ "Climate Information for İzmir". World Meteorological Organization. September 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "BBC Weather: İzmir". BBC. September 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Izmir City Portal பரணிடப்பட்டது 2013-02-04 at the வந்தவழி இயந்திரம்